யார் அந்த சார் ?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்துள்ளார் .

அதில், பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக ஒதுக்கப்பட்ட காதி, கிராம தொழில்துறையுடன் சேர்த்து வனத்துறையையும் அமைச்சர் பொன்முடி கவனித்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுரன்

கங்கையில் குளிப்பதே பாவமா?

இந்தியாவின் மிகபெரிய நதிகளில் ஒன்றான கங்கை நதி இமயமலையில் தோன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாய்ந்து இறுதியாக வங்கதேசத்தில் கடலில் கலக்குகிறது. இதன் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா பகுதியாகவும் கங்கை டெல்டா திகழ்கிறது.

அதே நேரம் இந்தியாவில் இந்து மதத்தின் புனித நதியாகவும் கங்கை திகழ்ந்து வருகிறது. இதனால் கங்கை நதியில் நீராடுவது புண்ணிய செயலாக கருதப்படுவதால் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் கங்கையில் நீராக பக்தர்கள் குவிவது வாடிக்கையாகியுள்ளது.

suran
இந்த நிலையில், கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கங்கை நதியின் கரையில் உள்ள பல்வேறு நகரங்களின் கழிவுகள் கங்கை நதியில் கலக்கப்பட்டு வருகின்றன. இதனால் கங்கை நதி தொடர்ந்து மாசுபட்டு வருகிறது.

இதன் காரணமாக கடந்த 1986 ஆம் ஆண்டு கங்கை நதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அப்போதே பல ஆயிரம் கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு ஒன்றியத்தில் பதவியேற்ற நிலையில், கங்கை நதியை தூய்மைப்படுத்துவோம் என அறிவித்தார்.

பின்னர் இதற்காக 'நவாமி கங்கா' என்ற திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு கங்கை நதியை சுத்தப்படுத்த ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி ஒதுக்கினார். ஆனால், தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கங்கை நதியின் முழுப் பகுதியும் குளிப்பதற்குத் தகுதியற்றதாக இருப்பதாகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. மேலும், மலாக் கோலிஃபார்ம் என்ற பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருப்பதால், அங்கு யாரும் குளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கங்கையை தூய்மை படுத்த மோடி ஒதுக்கிய தொகை என்ன ஆனது என  கேள்வி எழுந்துள்ளது .

யார் அந்த சார் ?

ஈரோட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய செங்கோட்டையன், இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யும் தொண்டர்கள் வேறு எந்த இயக்கத்திலும் இல்லை.


அவர்கள் அதிமுகவில் மட்டும் தான் இருக்கின்றனர். இந்த விஷயத்தை எதற்காக சொல்கிறேன் என்றால், இம்முறை நாம் தோல்வியை தழுவி இருக்கிறோம். அதற்கு சில துரோகிகள் தான் காரணம். அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் என்று கூறியுள்ளார். இதில் துரோகிகள் என்று செங்கோட்டையன் யாரை குறிப்பிடுகிறார் என்ற கேள்வி எழுகிறது 

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை தான் துரோகி என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் கட்சிக்குள் இருந்தே துரோகி என்றக்குரல் வெடித்துள்ளது.  இந்த விஷயம் பெரிதும் கவனம் பெற்று புதிய விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

பொதுவான பார்வையில் கட்சி தலைமைக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இது தனக்கான அங்கீகாரம் கட்சியில் கிடைக்கவில்லை என்பதாலோ அல்லது எடப்பாடியின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியாலோ என்பது தெரியவில்லை.

suran
 செங்கோட்டையன் பேசும் ஒவ்வொரு விஷயமும் சரவெடியாய் வெடித்து கொண்டிருக்கும் நிலையில், அவரை வசப்படுத்த வெளியில் இருந்து காய் நகர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருபுறம் விஜய் கட்சியில் சேரக்கூடும் எனக் கூறப்படும் நிலையில், மறுபுறம் திமுகவில் ஐக்கியமாக்க மூத்த அமைச்சர்கள் சிலர் தூதுவிட்டிருப்பதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவில் அரங்கேறும் நிகழ்வுகள் தற்போதைக்கு பாதகமாக உள்ளது.

எக்ஸ் ,ஒய்  இசட் 

தற்போது நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன, இந்தியாவில் எத்தனை விதமான பாதுகாப்பு பிரிவு உள்ளன... அவை யார் யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் தொடங்கி மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மிக முக்கிய நபர்கள் என பலருக்கும் பலவிதமான பிரிவுகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதில் திரைப்பட பிரபலங்களும், பிரபல தொழிலதிபர்களும் அடங்குவர். 
ஆனால் அது அவரவரின் பதவி மற்றும் அச்சுறுத்தலின் தன்மையை பொறுத்தே மாறுகிறது. 
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பை அளிப்பது, 180 வீரர்களைக் கொண்ட மெய்க்காவலர் படை. இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பாதுகாப்பு படை என்றால் அது SPG எனப்படும் ஸ்பெஷல் புரொடக்‌ஷன் குரூப் தான்.

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னர் தான் இந்த SPG எனப்படும் ஸ்பெஷல் புரொடக்‌ஷன் குரூப் உருவாக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது நேரடி குடும்ப உறுப்பினர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் பாதுகாப்புக்கான பொறுப்பை SPG ஏற்றுக்கொள்ளும். துணை ராணுவப் படையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்த அமைப்பு தான், தற்போதைய பிரதமர் மோடிக்கும் பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரிவில் மொத்தம் 3 ஆயிரம் படை வீரர்கள் உள்ளனர்.

article_image4

SPGக்கு அடுத்தபடியாக வருவது Z+ பாதுகாப்பு பிரிவு. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேசிய பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை, இந்தோ திபேத் எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றில் இருந்து வீரர்களை தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டது தான் இந்த இசட் பிளஸ் பிரிவு.

 முன்னாள் பிரதமர்கள், முன்னாள் குடியரசு தலைவர்கள், கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளான தலைவர்கள் ஆகியோருக்கு இந்த பிரிவு பாதுகாப்பை வழங்கி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இந்த இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு தான் வழங்கப்படுகிறது.

 5க்கும் மேற்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களுடன், 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு வழங்கும் இந்த குழுவிற்கு மாதம் தோறும் செலவிடப்படும் தொகை சுமார் 33 லட்சம் ரூபாய் ஆகும். 

தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் மற்றும் காவல்துறையினரை சேர்த்து 22 பேர் பாதுகாப்பு அளிக்கும் பிரிவுக்கு பெயர் இசட் பிரிவு. இது உயிருக்கு ஆபத்து இருக்கும் விஐபி-களுக்கு உளவுத்துறை பரிந்துரை உடன் வழங்கப்படும் பாதுகாப்பு ஆகும்.
 1 முதல் 3 ஆயுதம் ஏந்திய வீரர்கள் அந்த விஐபி எங்கு சென்றாலும் உடன் பயணிப்பார்கள். தமிழ்நாட்டில் இசட் பிரிவு பாதுகாப்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பிரிவினருக்கு மாதம் தோறும் 16 லட்சம் செலவளிக்கப்படுகிறது.
article_image6

இதற்கு அடுத்த இடத்தில் ஒய் பிளஸ் பாதுகாப்பு பிரிவு வருகிறது. குறிப்பிட்ட விஐபிக்கு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நான்கு பேர் பாதுகாப்பு அளிப்பார்கள். அதனுடன் 6 பேர் கொண்ட காவல்படை அவர்களது வீட்டிற்கு சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பார்கள்.

 சல்மான் கான், கங்கனா ரனாவத், ஷாருக்கான் போன்றோருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதுகாப்பு படைக்காக மாதம் தோறும் 15 லட்சம் செலவளிக்கப்படுகிறது.

இதற்கு அடுத்து தான் ஒய் பிரிவு பாதுகாப்பு வருகிறது. 

அந்த ஒய் பிரிவு பாதுகாப்பு தான் தற்போது தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில், தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் உள்பட 8 காவலர்கள் இடம்பெறுவார்கள். இந்த பிரிவுக்கு மாதம் 12 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.

 நடிகர் விஜய்க்கு இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டில் மட்டும் வழங்கப்படும். விஜய் மீது முட்டை அடிக்க வேண்டும் என்றும் எக்ஸ் தளத்தில் சிலர் பேசியதால் அவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. 

இதற்கு அடுத்தபடியாக எக்ஸ் பிரிவு உள்ளது. அது தேசிய பாதுகாப்பு படையினர் யாரும் இல்லாமல் உள்ளூர் காவல்துறையினரை மட்டுமே வைத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?