யாருக்கெல்லாம் வாய்ப்பு
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கோவை அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவில் விவசாய சங்கங்கள் சார்பில் விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் அதிமுகவின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் ஆஜரான நிலையில் செங்கோட்டையன் மட்டும் மிஸ்ஸிங்.

அதற்கு அவர் கொடுத்த விளக்கமே தற்போது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் இந்த பேட்டி அதிமுக தலைமையை சிந்திக்க வைத்திருக்கிறது. சென்னையில் கட்சி அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளான தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஈபிஎஸ் பங்கேற்றது அதிமுக விழா அல்ல என்றார்
ஜெயலலிதாவின் தொண்டனாக செங்கோட்டையனின் கருத்தை ஏற்பதாகவும் அதிமுகவிற்கு 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி மூடு விழா நடுத்துவார் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் அதிமுகவில் மீண்டும் ஒரு பிரச்சனை வரக்கூடாது என்பதை உணர்ந்து அதிமுகவின் தலைமை செங்கோட்டையனை அழைத்து பேசும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பிரச்னை குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி. கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈபிஎஸ் படாதபாடு படுகிறார் என்றார். படவிவகாரம் மூலம், செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையையே கேள்வி கேட்கிறார்.இதை சாமாளிப்பாரா பழனிசாமி ?
யாருக்கெல்லாம் வாய்ப்பு
மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியுடன் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
திமுக சார்பில் எம்.பி. ஆக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக்காலமும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
தற்போதைய தமிழக சட்டப்பேரவையில் கட்சிகள் சார்பில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக கூட்டணி சார்பாக 4 பேரும், அதிமுக சார்பில் ஒருவரும் உறுதியாக எம்.பி.யாக முடியும். கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக கூட்டணியில் ஓர் இடம் உறுதியாகியுள்ளது.
மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் தொடர்பாக 4வது நாளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர். அப்போது, ஆளுநர் எந்த காரணமும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுத்திவைத்துள்ளார் என்றும், ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு எப்படி அனுப்பி வைக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து முந்தைய வழக்குகளின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்கும் மசோதா என்றால் அது செல்லாது என ஆளுநர் தரப்பு வாதிட்டது. இதற்கு செல்லாத மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு எப்படி அனுப்பி வைக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், ஆளுநர் மசோதா மீது எடுக்கும் முடிவு குறித்து வெளிப்படையாக ஏன் மாநில அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் வினவியது.
ஆளுநர் தனது சொந்த விருப்பப்படி செயல்பட்டு, மசோதாக்களை நிறுத்தி வைப்பது, "கில் பில்", "டெர்மினேட்டர்" படங்களை நினைவுப்படுத்துவதாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது.
அரசியல் சாசனத்தில் ஆளுநர் அதிகாரம் என்ன என்பதை அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமை இல்லை என்றும் தெரிவித்தனர்.