தேவை-காவு கொடுக்க 4000 பேர்கள்?

நிலக்கரி மன் மோகன்  சிங்
நிலக்கரி வெட்டியே எடுக்கப் படாததால் இழப்பு இல்லை .என்று பொருளாதார வல்லுனரும் -நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
முறைகேடாக டாடா,ஜின்டால்,அம்பானியின் சாஜன் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதால் அரசுக்கு ஏற்படும் நட்டம்தான் 1லட்சத்து 86 ஆயிரம் கோடி.
முறைகேடாக ஒதுக்கீடு பெற்றவர்கள் பணம் பன்னுவது அரசுக்கு வர வேண்டிய தொகை என்பதுதான் இப்போதைய மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை. அதன் மீதுதான் விவாதம் நடத்தி அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
சுரன்
இந்திய அரசின் அனல் மின் நிலயங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் போது கோல் இந்தியாவிடம் சுரங்கங்களை கொடுக்காமல் தனியார் கொள்ளையடிக்க தாரை வார்த்ததை தான் குற்றமாகச் சொல்லுகிறது .அறிக்கை.
1லட்சத்து 86 ஆயிரம் கோடிகள் தனியாருக்கு வருமானம் வரும் படி வலுக்கட்டாயமாக தாரை வார்த்தவர்கள் தங்கள் பக்கம் வரவு இல்லாமலா பொது நலன்[?] கருதி இப்பணியை செய்திருப்பார்கள்.?
இந்த கேள்விதான் இப்போது முக்கியம்.
2-ஜி யிலும் இதே தணிக்கை குழு அறிக்கைதான் புலை கிளப்பி ஆ.ராசா,கனிமொழியை சிறையில் அடைத்தது.
அதிலும் இழப்புக் கணக்குத்தான் முக்கிய கரு.அதேதான் இப்போது நிலக்கரி சுரங்க முறைகேடுகளிலும் ந்டந்துள்ளது.
சுரன்

இதிலும் 2-ஜி  போன்று சி.பி.ஐ.விசாரணை.முக்கிய களவாணிகளை திகாரில் அடைத்தல் போன்ற நடவடிக்கைகள் தேவை.அது காலத்தின் கட்டாயம்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் கிட்டத்தட்ட 2-ஜி ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த நிலக்கரி முறைகேடுகளை கூறி வந்துள்ளார்கள்.அப்போது கண்டு கொள்ளாத பா.ஜ.க .தணிக்கை குழு அறிக்கைக்குப் பின் அரசியல் செய்கிறது.நிச்சயமாக மக்களவையில் விவாதம் நடத்தி 2ஜி போல் நடவடிக்கை எடுக்க வைப்பதை விட்டு ,விட்டு அவையை முடக்குவது குற்றவாளி மன்மோகன் உட்பட காங்கிரசாரை தப்பிக்க வைக்கும் முயற்சியாக அமைந்து விடும்.
அமளியினால் சபையை ஒத்தி வைத்து விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.அதனால் அவர்களுக்குத்தான் லாபம்.
_________________________________________________________________________________


அடுத்த வதந்தீ
==========

வதந்திகள் பறக்கும் நேரம் இது.
இப்போதுதான் அசாம் மாநிலத்தவர் தாக்கப்படுவது,மருதாணி வைப்பதுக்கு வதந்தி பரவி முடிந்து  கொஞ்சம் மூச்சு வாங்குவதற்குள் இதோ புதிய் வதந்தி கிருஷ்ணகிரியில்  இருந்து வந்து விட்டது.இது போன்ற வதந்திகள் புதிதல்ல. 
ஆனால் இது போன்ற வதந்திகள்  மஞ்சள்,சிகப்பு,பச்சை சேலைகளை நாம் வாங்க வைத்து நமது பணத்துக்கு செலவு வைத்து விடுகிறது.இது போன்ற வதந்திகளால் நம் வீட்டு பெண்களுக்கு புது சேலையும்-புரோகிதர்களுக்கு தட்சணை அதிகமாவதும் தான் நன்மை.

இனி செய்தி:-
"கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் வியாழக்கிழமை மாலை ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், பிறந்தவுடன் அந்த குழந்தை சிரித்து பின்னர் பேசியதாகவும், அந்த குழந்தை நான் அதிகாலை 4 மணிக்குள் இறந்து விடுவேன், அப்போது நான் 4 ஆயிரம் ஆண், பெண் குழந்தைகளை காவு வாங்குவேன் என்று கூறியதாகவும் தகவல் பரவியது. செல்போன் மூலம் இந்த தகவலை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
இதனால் குழந்தைகள் வைத்திருக்கும் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். சிலரின் ஆலோசனைப்படி பெண்கள் தேங்காயில் மஞ்சள், குங்குமம் தடவி, அதை குழந்தையின் தலையை சுற்றி தெருவில் உடைத்தனர். இதையடுத்து பிறந்த குழந்தையுடன் காவு மிரட்டலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அது எப்படி செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவியது.
தர்மபுரி அருகே உள்ள வெங்கிடம்பட்டியில் உள்ள ஒருவருக்கு ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடதாம்பட்டியில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த பகுதியிலும் தேங்காய் உடைத்து, எலுமிச்சை பழத்தை அறுத்து காவு கொடுத்து உள்ளனர். கோவில்களிலும் குழந்தையின் பெயரில் பெண்கள் அர்ச்சனை செய்தனர். மேலும் சில இடங்களில் ஆண்களை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் தேங்காய் உடைத்தும் பரிகாரம் செய்தனர்.
சுரன்

இந்த தகவல் குறித்தும் பரிகார பூஜைகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள ஊத்தங்கரை தாசில்தார் புகழேந்தி, அப்படி ஒரு குழந்தை பிறக்கவே இல்லை என்று தகவல் தெரியவந்துள்ளதாக கூறினார். இது வதந்தி. இந்த வதந்தியை யாரோ திட்டமிட்டு பரப்பி இருக்கிறார்கள் என்றார். இது பொய்யான தகவல் என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் குழந்தைகள் வைத்திருக்கும் வீடுகளில் பரிகாரம் செய்து வருகிறார்கள். கிராமங்கள் தோறும் முச்சந்தியில் தேங்காய் உடைக்கப்பட்டும், எலுமிச்சை பழம் அறுக்கப்பட்டும், மஞ்சள், குங்குமம் தெளிக்கப்பட்டும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பிறந்த குழந்தை பேசியதாக கூறப்பட்ட சம்பவம் குறித்தே பொதுமக்கள் மத்தியில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது."

 சரி .இப்போ நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்.பரிகாரமா? இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதப்பா என்ற பரிகாசமா?நான் பரிகாச வரிசைதான்.
------------------------------------------------------------------------------------------------------------
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?