இதுவரையில் ?முதலிடம் ஹிட்ச்காக் !
இதுவரை வெளிவந்துள்ள படங்களிலேயே மிகச்சிறந்தது எது என்பதை கண்டறிய இன்ஸ்டிடியூட்டின் சைட் அண்ட் சவுண்ட் பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் திகில் கதை மன்னன் ஹிட்ச்காக்கின் வெர்டிகோ படம்முதலிடத்தை பெற்றுள்ளது.
ஆர்ஸன் வெல்லெஸின் ‘சிட்டிசன் கேன்’ படம் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.இதுவரைகடந்த ஐம்பது ஆண்டுகளாக இப்பத்திரிக்கை நடத்திய ஆய்வில் சிட்டிசன் கேன் படமே முதலிடத்தில் இருந்துள்ளது.
வாக்கெடுப்பில் 846 திரைப்பட விநியோகஸ்த்தர்கள், விமர்சகர்கள், திரைப்பட கல்வியாளர்கள் ஆகியோர் தமது ஆதரவை வெர்டிகோவுக்கு வழங்கியுள்ளனர்.
ஹிட்ச்காக் |
அந்தப் படத்தில் ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டும் கிம் நோவாக்கும் நடித்திருந்தனர்.
ஒரு போலீஸ்காரர் உயரத்தில் இருக்கவும்-உயரமான இடங்களைக் கண்டு பயப்படுகிறார் என்பதையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் வெர்டிகோ.
இறுதி வாக்கெடுப்பில் சிட்டிசன் கேனை விட வெர்டிகோ 34 வாக்குகள் கூடுதலாக பெற்றது.
1958 ஆண்டு வெளியான வெர்டிகோ திரைப்படம் ஒளிப்பதிவு உத்திகளுக்காக பெயர்பெற்றது.
அப்படத்தைதான் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாக ஹிட்ச்காக் கருதினார்.
ஆழ்மனதிலிருந்து அகலாத காதலை அவர் அப்படத்தில் கையாண்டிருந்தார்.
வெர்டிகோ படத்தில் ஸ்காட்டி ஃபெர்குசன் எனும் பெயருடன் நடிக்கும் ஸ்டீவர்ட், உயரத்தை கண்டு அஞ்சும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.
அவரது அச்சம் காரணமாக தெரியாத்தனமாக அவரது சகா ஒருவர் உயிரிழக்க நேரிட்ட பிறகு அவர் பதவியிலிருந்து விலகும் சம்பவத்துடன் படம் தொடங்குகிறது.
வெர்டிகோ |
பின்னர் அவரது பழைய நண்பர் ஒருவர் அவரை வேலைக்கு அமர்த்துகிறார், ஆனால் அவரது அழகிய மனைவி வினோதமாக நடந்து கொள்கிறார். அந்தப் பாத்திரத்தில் நோவாக் நடித்திருந்தார்.
அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரிலுள்ள ஒரு உயரமான கட்டிடத்தை தொடர்புபடுத்தி எடுக்கப்பட்ட வெர்டிகோ, அதன் பின்னணியில் படத்தில் வரும் பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் வெளியிடும் பல விஷயங்கள் ரசிகர்களின் கற்பனைக்கெட்டாத ஒரு சவாலாக இருந்தது.
அந்தப் படத்தில், கதாநாயகன் ஸ்காட்டியின் உயரத்தை கண்டு அஞ்சும் தன்மை, அதன் காரணமாக ஏற்படும் தலைச்சுற்றல் ஆகியவற்றை வெளிக்காட்ட ஹிட்ச்காக் காமெராவை மிகத் திறமையாக பயன்படுத்தியிருந்தார்.
சிட்டீசன் கேன் |
கேமெராவின் லென்ஸ் கதா பாத்திரத்தை நெருக்கமாக காட்டிக் கொண்டு வரும் அதேவேளை, கேமெரா பின்னுக்கு நகர்ந்து கொண்டே செல்லும் உத்தியை அவர் பயன்படுத்தியிருந்தார்.
அதன் மூலம் பின்னணி ஒழுங்கற்ற வகையில் இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படும், கதாபாத்திரம் நெருக்கமாகவும், பின்னணி பரந்து விரிந்தும், அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு தோற்றத்தை அவர் கேமெரா மூலம் கையாண்டார்.1958 ஆண்டு வெளியான வெர்டிகோ திரைப்படம் ஒளிப்பதிவு உத்திகளுக்காக பெயர்பெற்றது.
வெர்டிகோ |
அப்படத்தைதான் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாக ஹிட்ச்காக் கருதினார்.
கேமெராவின் லென்ஸ் கதா பாத்திரத்தை நெருக்கமாக காட்டிக் கொண்டு வரும் அதேவேளை, கேமெரா பின்னுக்கு நகர்ந்து கொண்டே செல்லும் உத்தியை அவர் பயன்படுத்தியிருந்தார்.
திரைப்படத்துறை இந்த உத்தியை டாலி ஜூம் அல்லது ட்ராம்போன் ஷாட் என்ற பெயரில் இன்றளவும் பயன்படுத்துகிறது.
சிட்டிசன் கேன் திரைப்படம் போன்றே, வெர்டிகோவும் வெளியானவுடன் பல மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட விமர்சனங்களையே எதிர்கொண்டது.
எனினும் காலம் செல்லச் செல்ல வெர்டிகோவிற்கு ஆதரவு பெருகிக் கொண்டே சென்றது.
எது மிகச்சிறந்த படம் என்கிற வாக்கெடுப்பில் 2,045 படங்கள் பங்குபெற்றன.
மார்டின் ஸ்கார்செஸே, குயிண்டன் டாரடிண்டோ, ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா, வுடி ஆலன், மார்க் லெய் உட்பட பல பிரபலங்கள் இதில் வாக்களித்தனர்.
------------------------------------------------------------------------------------------------------------
கடலில் மிதக்கும் நுரைக்கல் தீவு.
பசிஃபிக் பெருங்கடலில் சுமார் 26,000 சதுர கிலோ மீட்டர்கள் அளவுக்கு எரிமலை பாறைகளால் ஆன பெரிய திட்டு ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக நியூசிலாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
குறைந்த எடை கொண்ட நுரைக்கல்லின் சிறிய துண்டுகள் நெருக்கமாக இணைந்ததால் இந்தப் பெரும் திட்டு உருவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் உள்ள எரிமலையிலிருந்து வெளியான குழம்புதான் காற்றுக் குமிழிகளுடனும்-நீராலும் இறுகிப் போய் உருவான நுரைக்கல் படிமங்களே பெரும் திட்டாக தற்போது மிதந்து கொண்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது..
இவ்வளவு பெரிய திட்டு கடலில் மிதந்து வருவதை தமது 18 ஆண்டுகால கடல் பயணத்தில் கண்டதில்லை என்று நியுசிலாந்து கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த எரிமலை பாறைத் திட்டுக்கல் கடலில் மிதந்து வருவது பெரிய பனிக்கட்டி படலம் மிதந்து வருவது போல இருக்கிறது, ஆனால் கப்பல்களுக்கு எந்த அபயாமும் இதனால் ஏற்படாது என்று கூறப்படுகிறது.