ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஈரான் அதிர்ச்சிஈரானில் நள்ளிரவில் 2 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 6.3 என பதிவாகியது. கிழக்குஅஜர்பைஷானில் உள்ள வர்ஷகான், தப்ரீஸ் அஹர் உள்ளிட்ட நகரங்கள் முற்றிலும் அடியோடு பெரும் தேசத்தை சந்தித்திருக்கிறது. 

ரமலான் பண்டிகைக்கு தயாராகி கொண்டிருந்த ஈரான்  மக்கள் நிலநடுக்கத்தில் சிக்கி 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 
ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளை இழந்தவர்கள் தங்கும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு பொருட்களாக ரொட்டித்துண்டுகளும், குடிநீரும் வழங்கப்பட்டன. 
சுரன்
 6 கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 60 கிராமங்கள் 50 சதம் முதல் 80 சதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
ஈரானில் முன்பு 2003 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 25000 பேர்கள் பலியானது நினைவிருக்கலாம்..

சுரன்