அமெரிக்காவும்-அணி சேராமையும்

சிரியாவில் எப்படியாவது சீர்குலைவை ஏற் படுத்தி தனக்கு ஆதரவான ஆட்சியை உரு வாக்கிட வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. அதற்காக உலக அரங்கில் சிரியா மீது அமெரிக்கா கட்டவிழ்த்துவிட்ட குற் றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண் டவை என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. 

அரபு நாடுகளிலேயே சிரியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருந்து வருகிறது. அந்த நாடு அமெரிக்காவின் எடுபிடியாக செயல்பட மறுக் கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அந்நாட்டை சின்னாபின்னமாக்க மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. ஐ.நா. பாது காப்பு சபையில் சிரியா மீது அமெரிக்கா முதலில் பொருளாதாரத் தடையை கொண்டு வந் தது. அதனை சீனாவும், ரஷ்யாவும் சேர்ந்து தங் களது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தோல்வியுறச் செய்தன.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா தங் கள் உளவு நிறுவனங்கள் மூலம் சிரியாவில் உள் நாட்டுக் கலவரத்தை உருவாக்க உத்தரவிட்டி ருக்கிறார். இந்த ரகசியத்தை கடந்த வாரம் அமெ ரிக்கப் பத்திரிகைகளே அம்பலப்படுத்தின.
 இதையடுத்து சிரிய அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய கலகக் குழுவினருக்கு 250 லட்சம் அமெரிக்க டாலர் உதவி அளிக்க நேரடியாக உத் தரவிடப்பட்டது.
சுரன்

 இதோடு மட்டுமின்றி சிரியா எல்லையில் துருக்கி, சவூதிஅரேபியா, கத்தார் ஆகிய நாடுகளையும் இணைத்து சிரியாவில் உள்ள தீவிரவாத குழுவினருக்கான உளவுமை யத்தை ஏற்படுத்தியிருந்தது வெட்டவெளிச்சமானது.

இதே போல் தெற்கு துருக்கியில் உள்ள அடானா நகரில் இருந்து தீவிரவாதக்குழுவி னரை இயக்கும் அமெரிக்காவின் நரம்பு மண்டல இணைப்பு இருந்ததும் அம்பலமானது. தற் போது பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம்ஹக், இது வரை நாங்கள் சிரிய தீவிர வாதக் குழுவினருக்கு 36 கோடி உதவி அளித் திருப்பதாக வெளிப் படையாக அறிவித்திருக் கிறார்.
சுரன்

 இதன் மூலம் சிரி யாவில் இதுவரை நடை பெற்றிருக்கும் ரத்த கள ரிக்கு மேற்குலக நாடு களே காரணம் என்பது இதன் மூலம் உறுதி செய் யப்பட்டிருக்கிறது. இப் படி ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் அத்துமீறி மூக்கை நுழைத்து சீர்குலைவை ஏற்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட பலவீனத்தை சமாளிக்க ஆக்கிரமிப்பு சாகசத் தில் ஈடுபட மேற்கத்திய நாடுகள் முயன்று வரு கின்றன. அதன் தொடர்ச்சிதான் சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது பல்முனை தாக்குதல். அதற்கு நேட்டோ அமைப்பை ஒரு கருவியாக ஏகாதிபத்தியம் பயன்படுத்தி வருகிறது. இதே போல் ஐ.நா. சபையையும் நேர்மையற்ற முறை யில் பயன்படுத்துகின்றன.

அதன் ஒரு பகுதிதான் அமெரிக்கா ஒலியின் வேகத்தை விட 30 மடங்கு அதிவேகமாகச் சென்று தாக்கிப் பேரழிவை உருவாக்கும் ஹைபர்சானிக் பாமர்ஸ் என்ற நவீன போர் விமானத்தை தயா ரித்து முடித்திருக்கிறது. இதே பேரழிவு ஆயு தத்தை மூன்றாம் உலக நாடுகள் உருவாக்கியி ருந்தால் இந்நேரம் அந்த நாட்டையே அமெரிக்கா நாசப்படுத்தியிருக்கும்.
சுரன்

 இந்த சட்டாம்பிள்ளைத் தனத்திற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் துணை போவதுதான் வேதனையிலும் வேதனை. இனி யாவது இந்தியா சுதாரித்துக் கொண்டு அமெரிக் காவை விட்டு விலகிட வேண்டும், கடைசி யாக ஐ.நா. சபையில் சிரியாவிற்கு எதிராக ஏகாதி பத்தியம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதர வாக வாக்களிக்காமல் புறக்கணித்தது வரவேற் கத்தக்கது. இதே வழியில் தனக்கென இருக்கும் அணிசேராக் கொள்கையில்  உறுதியாக இருக்க வேண்டும்.
________________________________________________________________

சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?