காலியான பதக்கங்கள்,


சுரன்

இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்திருக்கலாம்.
கிட்டதட்ட 110 கோடிகள் மக்கள் தொகையை கொண்ட சீனாவுக்கு அடுத்த மக்கள் தொகை பெருக்கத்தில்  இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியா வெறும்4 வெண்கல பதக்கங்களுடன் ஒலிம்பிக் முடிவில் வெளியேறுவது கொஞ்சம் அல்ல ரொம்பவே கவலைக்கிடமானது.
பேசாமல் ஒலிம்பிகில்  இந்தியன் கார்பைடு டவ் நிறுவன பங்கேற்புக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் போட்டியில் இருந்து மண்ணைக்கவ்வுவதில் இருந்து தப்பித்திருக்கலாம்.

எப்போதும் சிறப்பாக விளையாடும்,முந்தைய போட்டிகளி தங்கம் வென்ற போட்டிகளில் நாம் தகுதி சுற்றை விட்டு உள்ளே நுழையாததே நமது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை உணர்த்தி விட்டதே.
தோல்விகளில் தோற்றதற்கு  பங்கேற்ற வீரர்களை குறை சொல்லுவதில் அர்த்தமே இல்லை.
சுரன்

தகுதியும் ,திறமையும் மிக்க விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே இல்லை.ஆனால் தகுதியானவர்கள் தேர்ந்தெடுப்பதில் உள்ள முறைகேடுகள்தான் பதக்க கனவை சிதைத்து உலகின் முன் இந்தியாவை கடைசிக்கு தள்ளி விடுகிறது.
எப்போதுமே விளையாட்டு வீரர்கள் தேர்வில் நடக்கும் அரசியலும் ,முறைகேடுகளும்தான் இந்தியா இரண்டு,மூன்று வெண்கலத்துடன்கடைசியாக பட்டியலில் இடம் பெற காரணமாகி விடுகிறது.
ஹாக்கியில் இந்திய சாதனைகள் படைத்த காலம் போய் வேதனையாக வெளியேறியுள்ளது.

இதற்கு காரணம் வீரர்கள் தேர்வில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடந்து கொண்ட முறைதான் என்று ஹாக்கி வீரர் தனராஜ் வேதனையுடன் அறிவித்துள்ளார்.
இதுதான் கிரிக்கெட்டிலும் நடக்கிறது .சில கிரிக்கெட் வீரர்கள் அல்லாத கல்மாடி ,சரத் பவார் போன்ற அரசியல்-பணமுதலைகள் கையில் கிடிக்கெட் வாரியங்கள் சிக்கியுள்ளதால் பிக்சிங் போன்ற பண விளையாட்டுகளில் உண்மையான கிரிக்கெட் விளையாட்டு சீரழிகிறது.
முதலில் சீனா முதல் குட்டி நாடான கொரியா வரை விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதையும் ,அளிக்கும் பயிற்சிகளையும் இந்தியா தானும் பின் பற்றவேண்டும்.

அதன் பின்னரே உலக போட்டிகளில் கலந்து  கொள்ளவேண்டும்.
யார் என்று தெரியாத பெண்மணி ஒலிம்பிக் போட்டி ஆரம்ப அணிவகுப்பில் இந்திய அணியுடன் கையை காட்டி க்கொண்டு செல்லும் அளவில்தான் நமது இந்திய அணியும்-விளையாட்டு துறை அதிகாரிகளும் இருக்கின்றனர்.

இவர்களைப்போன்றவர்கள் இன்னமும் இதே போன்று நடவடிக்கைகளில் இறங்கிக்கொண்டிருந்தால்,இருவர் ஓடும் ஓட்டத்தில் கூட நம்மால் வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே?




------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?