வதந்திகள்: தரும் எச்சரிக்கை தந்திகள்.

 என்னவோ இந்த வாரம் அல்லது மாதம் வதந்திகள் மாதமாகி போய் விட்டது.முதலில் அசாம் கலவரத்தை சாக்காக வைத்து மும்பையில் முஸ்லீம்கள் நடத்திய எதிர்ப்பு ஊர்வலத்தில் கலவரம் வெடித்து பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டத்தை வைத்து கைப்பேசியில் குறுஞ்செய்தி மூலமாக அசாம் மற்றும் வடகிழக்கினரை தாக்கி வருவதாகவும்-தாக்கப்பட இருப்பதாகவும்  செய்திகளை பரவலாக அனுப்பி வைக்க
வடகிழக்கு மாநிலத்தவர்கள் கலவரப்பட்டு மூட்டை முடிச்சுகளுடன் ரெயில் கொள்ளா அளவு கூட்டம் ,கூட்டமாக புறப்பட்டு சொந்த மாநிலங்களுக்கு செல்கிறார்கள்.
இக்குறுஞ்செய்தியின் பிறப்பிடம்  பாகிஸ்தானில் இருந்து அல்லது பாகிஸ்தான் உளவுத்துறையின் வேலை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதை தடுக்க பாகிஸ்தானிடம் பேசினால் பாக் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் "வடகிழக்கு மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் இருந்து எஸ்.எம்.எஸ். மற்றும் இணையதளங்கள் மூலம் வதந்தி பரப்பியதாக உரிய ஆதாரங்களை இந்தியா வழங்கினால் பாகிஸ்தான் அரசு விசாரணை மேற்கொள்ளும்'
-என்று வழக்கமான பாட்டையே பாடியுள்ளார்.அது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கத்தான் சொல்கிறோம் என்பது கூட தெரியாமலா இருக்கிறார்.
அப்படியே அனைத்து ஆதாரங்களை கொடுத்தாலும் அவை பொய்யானவை என்றுதான் சொல்லப் போகிறார் அவர்.
நாம் ஏற்கனவே மும்பை வாசல் -தாஜ் மகால் ஓட்டல் குண்டு வெடிப்பு விவகாரத்தில் கசாப்பை கையுங்களவுமாக பிடித்து ஆதாரங்களை அனுப்பியும் இன்னமும் கசாப் பாகிஸ்தானி அல்ல என்றுதான் கூறிவரும் பாக்கிஸ்தானை போய் நடவடிக்கை எடுக்க சொல்வது நமது அரச்சின் தவறுதான்.இங்கு நாம் இஸ்ரேல் போல் சில அதிரடிகளைத்தான் கையாள வேண்டும்.மற்றபடி ஒன்றும் நடக்காது.
அசாம் வதந்தி முடிவதற்குள் ரமலான் மெகந்தி வதந்தி அதே கைப்பேசி குறுஞ்செய்தி வழியே தாக்குதல் நடத்தி விட்டது.
ரமலானை முன்னிட்டு மெகந்தி வைத்துக்கொண்ட பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்,இரண்டு -மூன்று பேர்கள் வபாத் ஆகி விட்டதாகவும் அந்த தாக்குதல் இருந்தது.
சுரன்

விளைவு மெகந்தி போட்ட பெண்கள் மருத்துவமனையை நோக்கியும்,போட காத்திருந்தவர்கள் வீட்டை நோக்கியும் ஓட்டம் பிடித்து கலபேரமாகியுள்ளது.மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ,போலீசு மீது கல்வீசிய சம்பவங்கள் நம் தமிழ் நாட்டில் நேற்றிரவு நடந்துள்ளது.
வதந்திகளை பரப்பி விட்டு அதன் மூலம் கலவரத்தை தூண்டிட ஒரு கும்பல் வேலை செய்கிறது என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்ச்சமாகியுள்ளது.அவர்களை கண்டு பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயஅரசுக்கு உள்ளது.அதன் மூலமே இது போன்ற நிகழ்வுகளை இனி வருவதை நாம் தடுக்கமுடியும். 
ரமலான் மகிழ்ச்சி பயமாகி விட்டது.
இதெல்லாம் யார் செய்கிறார்கள்.?
எதற்காக ?
நிச்சயம் இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிகாய நினைக்கு தேசத் துரோகிகள்தான்.
வேடிக்கை என்று இதை செய்தாலும் அவர்கள் செய்வது தேசத்துரோக குற்றம் என்பதை உணர வேண்டும்.
இந்த வதந்திகளால் மக்களிடையே ஏற்படும் பயமும்,உயிர் பயமும் அவர்களை துணிச்சலாக சில தீவிர வாதத்தை செய்ய தூண்டி விடும் .
சுரன்
அது நிச்சயம் நடக்க வாய்ப்புள்ளது எனபதைத்தான் வடகிழக்கு மாநில மக்கள் சென்ற ரெயிலில் ஏற்பட்ட மோதலும் அதனால் ரெயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டவரகளில் நான்கு பேர்கள் இறந்து போனதும் உணர்த்துகிறது.
இந்தியா பல மொழி,பல இன,பல மத மக்கள் இணைந்து வாழும் பெருந்தேசம் அதை சூடான் ,போன்ற ஆப்ரிக்க நாடுகளில் நடக்கும் இனவழி மோதல் தேசமாக்கி விடாதீர்கள்.அப்படி இந்திய மக்கள் ஆக மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும்.சில தலைவர்களின் குறுகிய இன,மத வழி  வாக்கு வாங்க பயன் படுத்தும் பேச்சுக்கள் அந்நிலைக்கு தள்ளி விடும் ஆபத்து உள்ளதை நாம் மறந்து விடக்கூடாது.அதற்காகத்தான் சில நாடுகள் பாடுபட்டும் வருகின்றன.
தூத்துக்குடியில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பலியா பகுதியை சேர்ந்தவர் ஹர்தேவ்சிங் கல்கட்.
சுரன்
 இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காண்டிராக்ட் முறையில் பணிகள் எடுத்து செய்து வருகிறார். அவரிடம் பலியா பகுதியை சேர்ந்த நித்தியானந்த், ராஜ், லால்ஜி, மனோகர், பால்ஜி, விஷ்கோஸ்வர், கலீல்கான், விஜய், ராம்பிரசாத் ஆகிய 9 பேர் வேலை பார்த்து வருகின்றனர். 
இவர்கள் அனைவரும் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். நேற்றிரவு அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.அப்போது 15 பேர் கொண்ட கும்பல் கத்தி, கம்பு, அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் ஹர்தேவ்சிங்கல்கட் வீட்டிற்கு வந்தது. 
திடீரென அந்த கும்பல் தூங்கிகொண்டிருந்த 10 பேரையும் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் 10 பேரும் பலத்த காயமடைந்தனர்.
சுரன்
பாது காப்பு தருகிறோம் என்று கூறும் காவல்துறையினர் உண்மையிலேயே பாதுகாப்பு தருவதில் மெத்தனமாகவே உள்ளனர்.
வட மாநிலத்தவர் வாழும் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியை மேற்கொண்டாலே இது பொன்ற தாக்குதல்கள் நிகழாதே.
வதந்திகள் என்று சொல்லிவரும் ஆட்சியாளர்கள் இதற்கு விரைவான தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்கள் மெத்தனமே வதந்திகள் உண்மையாகி விடும் வாய்ப்புகளைத் தந்து விடும்.
அடுத்தவதந்தி கிளம்பும் முன் இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.அல்லது வரக்கூடிய அடுத்த வதந்தி மிகப்பயங்கரத்தை உண்டாக்கிவிடலாம். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?