நான் எழுதுவது கடிதம் அல்ல..

தங்கம் விலை உலக அளவில் குறைந்து வருகிறது,
இதற்கு காரணம் சீனாவும்,இந்தியாவும் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொண்டதுதானாம்.
இப்போடு தெரிகிறதா உலக அளவில் தங்கம் விலை உயர்வுக்கு யார் காரணம் என்று?

மற்றொரு காரணம் .டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் டாலரில் தங்கள் சேமிப்பை வைத்திருந்த நாடுகள் டாலரை கை கழுவி விட்டு தங்கத்தை சேமிக்க ஆரம்பித்தன.அதனாலும் தங்கம் விலை உயர்ந்தது.
ஆனால் தற்போது அமெரிக்க டாலர் விலை உயர ஆரம்பித்து விட்டதால் தங்கம் சேமிப்பை உலக நாடுகள் குறைத்துக்கொண்டன.
அதுவும் தான் தங்கம் விலைஅ குறைய காரணமாகி விட்டது.
எப்படியோ தங்கம் விலை குறைந்தால் சரி.அப்படி விலை என்ன கிராம் 1500க்கா வந்து விட்டது.10 ரூபாய் கிராமுக்கு குறைந்துள்ளது,இதெல்லாம் ஒரு விலை குறைவா?என்று நீங்கள் சொல்வதும் காதில் விழுகிறது.
---------------------------------------------------------------------------------------------
இன்று புகைப்பட தினம்->->->
-----------------------------------------------------------------------------------------------------------

புகைப்படம் பேசிட

உங்கள் புகைப்படம் மட்டுமல்ல, இறந்தவர்களையும் கூட பேச வைக்க முடியும். நம்ப முடிய இல்லையா? புகைப்படம் cameraஆல் எடுக்கப்பட்டாலும் சரி, Scanner மூலம் பெறப்பட்டது என்றாலும் பரவாய் இல்லை.
உங்கள் குரல் அல்லது பாடல் எப்படி பலதிற்கும் புகைப்படம் வாய் அசைக்கும்.. அது மட்டும் அல்ல , உங்கள் குரலுக்கு வரையப்பட்ட உருவங்களை கூட பேச வைக்கலாம். எலி, பூனை கூட உங்களுடன் கதைக்கும், தலை அசைக்கும், சிரிக்கும்…
இதை எப்படி மென்பொருள் மூலம் செய்வது என்று பார்ப்போம்.
இப்பகுதியில் ஏற்கனவே பிறக்கப்போகும் குழந்தை மற்றும் எதிர்கால தோற்றங்கள் பற்றி பதிவிடப்பட்டு இருக்கின்றன. நான் இங்கு புகைப்படங்களை பேச வைக்கும் முறையை விபரிக்க உள்ளேன்.
நீங்கள் பல உருவங்களை கூட பேச வைக்கலாம். அதை பார்த்தவுடன் உங்களுக்கே புரியும்.. அவ்வளவு இலகுவானது.
சாப்ட்வேர் பெயர் : Crazy talk (6.2)
தள முகவரி: www.reallusion.com crazytalk
தரவு இறக்கம்: crazytalk
3D Stereo
Dynamic Dialogue with Multi-character Editing Tracks
Enhanced Facial Mesh
Advanced Eye Settings
Export for web use
முதலில் குறித்த புகைப்படத்தை திறவுங்கள்.
வாய் கண் முக்கு தலை நெற்றி பகுதிகளை குறியுங்கள்
ஒலி பகுதியில் உங்கள் குரல் அல்லது பாடலை தெரிவு செய்யுங்கள்.
தலை அசைவை கட்டுப்படுத்துங்கள்
இப்போது உங்கள் காணொளி தயார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

முதல்வரின் கடிதம்

உதயகுமார் குழுவினர் கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடவும்-எரி பொருள் நிரப்புவதை நிறுத்தவும் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவுடன் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டார்.

ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 
"கூடங்குளம் அணுமின் நிலையத்தில், 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் யூனிட்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே ஒதுக்க தாங்கள் உதவவேண்டும் எனக்கோரி, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 25 ஆகிய தேதிகளில் தங்களுக்கு நான் கடிதம் எழுதி இருந்ததைமீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். "
--இப்போது உதயகுமாருக்கு திருப்தியாயிற்றா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரா கி ரங்கராஜன் எழுதுவதை கை விட்டார்.

பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ரா.கி.ரங்கராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 85. 

கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரா.கி.ரங்கராஜன்,இன்று அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மரணம் அடைந்தார்.

வரலாற்றுப் புதினங்கள், மொழி பெயர்ப்புகள், கிரைம் கதைகள், கட்டுரைகள் என வித்தியாசமான பாணியில் எழுதியவர் ரா.கி.ர. இவர் 1947 முதல் சுமார் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். 
குமுதம் இதழில் அரசு - என்ற பெயரில் கேள்வி பதில் எழுதியவர்களில் 'ர’ என்ற நடு எழுத்துக்குச் சொந்தக்காரர் ரா.கி.ரங்கராஜன். 


சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் இவை எல்லாம் ரா.கி.ரங்கராஜனின் புனைபெயர்கள்.


ரங்கராஜன் 1927ல் கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் ஆர்.வி.கிருஷ்ணமாசாரி ஒரு சம்ஸ்கிருதப் பண்டிதர். ரங்கராஜனின் பத்திரிகை அனுபவம் சக்தியில் துவங்கி, காலச்சக்கரம், கல்கண்டு என தொடர்ந்தது. இவருடைய வரலாற்றுப் புதினமான நான் கிருஷ்ண தேவராயன் புகழ் பெற்ற ஒன்று. 
கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்திற்கு ரா.கி.ரங்கராஜன் வசனம் எழுதியுள்ளார்.


பின்னாளில் விகடன் இதழ்களிலும் எழுதினார். சில விகடன் பிரசுரத்தில் இருந்து புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. சில காலம் வரை அண்ணாநகர் டைம்ஸ் என்ற உள்ளூர் இதழில் நாட்டு நடப்புகளை எழுதி வந்தார்.இவரின்
சுவையான எழுத்துக்கு அதிகமான வாசகர்கள் இவருக்கு உண்டு.
அதிக வயது,நோய் பட்டபோதும் எழுதுவதை கைவிடா ரா கி ர இப்போதுதான் எழுதுவதுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?