வருந்தும் கசாரே

பத்திரிகையாளர்களை தனது கூட்டத்தினர் அடித்ததற்கு அன்னா கசாரே வருந்தியள்ளாராம்.
அடிக்க காரணம் .இம்முறை உண்ணா நிலை போராட்டத்திற்கு கூட்டம் இல்லை.200,300 பேர்கள் அளவிலேயே இருந்தனர் என்ற உண்மையை எழுதியதற்காகத்தான்.அதை ஊடகங்கள் பிரசுரித்ததும் காட்டியதும்தான் காரணம்.
சுரன்

நடப்பதை காட்டியதற்கு ஊடகங்கள் மீது தாக்குதலா?
முந்தயை போராட்டங்களை மக்கள் கூட்டத்தை,அணியணியாக வந்தவர்களை குடியிருந்து ஊடகங்கள் காட்டியதே அப்போது என்ன செய்தார்கள்.ஊடகத்தினரை தலை மீது தூக்கி வைத்தா ஆடினர்.
உள்ளதை காட்டுவதுதானே ஊடக வேலை.அதில் தமக்கு ஆகவில்லை என்றால் தாக்குவதா?

இந்த முறை கசாரே ஆதரவாளர்கள் நடந்து கொண்ட முறை சற்று அநாகரிகமானது.
தடை செய்யப்பட்ட பிரதமர் வீடு பகுதிக்குசென்று கல்வீச்சு,சிதம்பரம் வீடு முற்றுகை.ஊடகங்கள் மீது தாக்குதல்.
கசாரே போராட்டம் சிலரால் திசை திரும்பி போய் விடுமோ என்ற கவலை வருகிறது.
A Tactful Mr. Bean GIF - A Tactful Mr. Bean
see more Gifs கசாரே நோக்கம் மிக சிறந்ததுதான்.ஒவ்வொரு வாக்களரின் மனதில் உள்ளதுதான்.அதனால்தான் அவரின் போராட்டம் இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கி கசாரேவை இன்னொரு காந்தி என்று கூறும் அளவு போனது.
ஆனால் ஊழலில் ஊறிப் போயுள்ள இந்திய அரசியல்வாதிகள்-அதிகார வர்க்கத்தினர் அவர் கூறுவதை முழுக்க ஏற்றுக்க்கொள்வார்கள் என்றும்,உடனே செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது நடமுறைக்கு சாத்தியாமில்லை என்பதை கசாரே உணர வேண்டும்.
இப்போதைய லோக்பால் வரைவை மக்களவையில்  நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.அதற்கு ஒவ்வொரு கட்சினரையும்சந்தித்து ஆதரவளிக்க வேண்டும்.முதலிலேயே தனது வரைவுதான் நிறைவேற்ற வேண்டும் என்ற பிடிவாதம் ஒட்டு மொத்த நல்ல நோக்கத்தையும் தர்த்துவிடும்..
முதலில் தலையை நுழையுங்கள்.பின் உடலை ஒட்டகம் போல் நுழைத்து கூடாரத்தையே சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
அதுவரை கொஞ்சம் கால இடைவெளியில் போராட்டங்களை நடத்துங்கள்.
அப்போதுதான் கூட்டம் வரும்.
எல்லோரும் உங்கள் குழு போல் ஓய்வுபெற்றவர்கள் அல்ல.அவர்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும்,வேலைக்கு செல்ல வேண்டும்.அதன் பின்தான் ஊழல் ஒழிப்பு சேவை எல்லாம்.ன் உங்கள் போராட்டங்களுக்கும் கூட்டம் வரும்.
உங்களுக்கு ஊடகங்கள் மீதும் கோபம் வராது.
_________________________________________________________________________________

இந்தியா ஒளிர்கிறது...

இந்தியா ஒளிர்ந்த நிலை போய் இப்போது இருள்கிறதாகி விட்டது.
21 வட பகுதி மாநிலங்கள் இரண்டு நாட்களாக 12 முதல் 14 மணி நேரம் இருளில் மின் தடையால் மூழ்கி எழுந்து வருகிறது.இன்றும் இந்த மூழ்கல் தொடரும் என்றே தெரிகிறது.
காரணம் மத்திய அரசு என்று மாநிலங்களும்,-மாநில அரசுகள்தான் என்று மத்திய அரசும் குற்றம் சாட்டி வருகிறது.
சுரன்

ஒட்டு மொத்த காரணம் சரியான நிர்வாகம் இல்லாததுதான் காரணம்.
இப்போதயை காரணமாக தெரிவது  மத்திய அரசின் தொகுப்பில் இருந்து ஆந்திரா உட்பட சில மாநிலங்கள் மின் சக்தியை அதிகமாக உறிஞ்சியதுதான் ஆக்ரா மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டு இந்த தடைஉண்டாகியது கண்டு பிடிக்கப் பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால் மத்திய அரசு அனல் மின் நிலையங்களுக்கு சரியாக நிலக்கரி விநியோகிக்காததால்தான் இந்திய அளவில் மின் உற்பத்தி குறைந்து போய் உள்ளது.அதானல்தான் இப்படி திருட்டுத்தனமாக உறிஞ்சி தேவையை சரி செய்ய வேண்டியுள்ளது என்பது மாட்டிக் கொண்ட மாநிலங்களின் குரலாக உள்ளது.
எப்படியோ தனியாரிடம் மின் விநியோகத்தை தள்ளி விட மத்திய அரசு கையாளும் நடமுறைதான் இந்த நிலக்கரி குறைவாக தருதல்-மின் வெட்டு எல்லாம்.
=======================================================================
சுரன்
இப்போதைய ஒலிம்பிக் பதக்க வரிசை


தகுதி நிலைநாடுதங்கப் பதக்கம்வெள்ளிப் பதக்கம்வென்கலப் பதக்கம்மொத்தம்
1சீனாசீனா136423
2அமெரிக்காஅமெரிக்கா98623
3பிரான்ஸ்பிரான்ஸ்43411
4தென் கொரியாதென் கொரியா3238
5வட கொரியாவட கொரியா3014
6கஸகஸ்தான்கஸகஸ்தான்3003
7இத்தாலிஇத்தாலி2428
8ஜெர்மனிஜெர்மனி2316
9ரஷ்யக் கூட்டமைப்புரஷ்யக் கூட்டமைப்பு2248
10தென் ஆப்பிரிக்காதென் ஆப்பிரிக்கா2002
11ஜப்பான்ஜப்பான்14813
12ஆஸி அணிஆஸி அணி1326
13ருமேனியாருமேனியா1225
14ஹங்கேரிஹங்கேரி1113
14பிரேசில்பிரேசில்1113
16நெதர்லாந்துநெதர்லாந்து1102
17உக்ரைன்உக்ரைன்1023
18லித்துவேனியாலித்துவேனியா1001
18ஜார்ஜியாஜார்ஜியா1001
18ஸ்லோவேனியாஸ்லோவேனியா1001
21பிரிட்டிஷ் அணிபிரிட்டிஷ் அணி0224
22மெக்ஸிகோமெக்ஸிகோ0202
22கொலம்பியாகொலம்பியா0202
24இந்தோனீசியாஇந்தோனீசியா0112
25போலந்துபோலந்து0101
25கியூபாகியூபா0101
25டென்மார்க்டென்மார்க்0101
25எகிப்துஎகிப்து0101
25ஸ்வீடன்ஸ்வீடன்0101
25தாய்லாந்துதாய்லாந்து0101
25சீன தாய்பேய்சீன தாய்பேய்0101
32கனடாகனடா0044
33ஸ்லோவாக்கியாஸ்லோவாக்கியா0022
34கத்தார்கத்தார்0011
34இந்தியாஇந்தியா0011
34அசர்பைஜான்அசர்பைஜான்0011
34பெல்ஜியம்பெல்ஜியம்0011
34மங்கோலியாமங்கோலியா0011
34மால்டாவோமால்டாவோ0011
34நார்வேநார்வே0011
34நியூசிலாந்துநியூசிலாந்து0011
34செர்பியாசெர்பியா0011
34உஸ்பெகிஸ்தான்உஸ்பெகிஸ்தான்0011
--------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?