கொடி வணக்கம்.


பள்ளியில் படிக்கும் போது ஆகஸ்டு -15 காலை தூக்கமே வராது.
விடிந்ததும் கொடியேற்றப் போக வேண்டுமே.
உற்சாகத்தில் உறக்கமே வராது.
விடுதல் நாள் கொண்டாட்டத்திவிட வாத்தியார் கொடியேற்றியதும் தரும் ஆரஞ்சு மிட்டாய் தான் சுதந்திரத்தின் அடையாளச் சின்னமாக திகழ்ந்த காலம்.
ஆனால் இப்போது கொஞ்சம் விபரம் நாட்டு நடப்பு தெரிந்தது தவறாக போய் விட்டது.
சுரன்

 இந்திய விடுதலை நாளை கொண்டாட ஆவல்தான்.ஆனால் இன்றைய தலைவர்களை பார்த்தால் இப்படி கொண்டாட வெட்கமாக இருக்கிறது.
விடுதலைப் பெற்றதே ஏந்தானொ என்றிருக்கிறது.மிட்டாய் கிடைக்காததால் அல்ல.

அரசாள்வோர் கொண்டுவரும் திட்டங்கள் நாட்டை ஒரு வழியாக்குவதாகவே உள்ளது.

வாக்குகள் பெறும் வரை மக்களின் அடியாளாக வேடமிட்டு-நாட்டை முன்னேற்றுவதே லட்சியம் என்று சொல்லி ஆட்சியில்  அமர்ந்தவுடன்
மேல் நாடுகள் சொல்வதை தலை மேல் கொண்டாடும் ஆட்சியாளர்கள்
இருக்கும் நாட்டின் விடுதலை ரசிக்க இயலாதது.
உலகின் அடிப்படைத்தொழிலாளியான  விவசாயிகள் தற்கொலைக்கு கொண்டு செல்லும் ஆட்சியாளர் மேதன்மை வெறுக்க வைக்கிறது.
சுரன்
நாட்டை முன்னெடுக்க பொதுத்துறையில் நிறுவனங்களை ஆரம்பித்து தொழிலில் முன்னேறியதை வெளி நாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்து தன் குடும்பத்தை மட்டுமே சுவிஸ் வங்கி மூலம் வளப்படுத்தும் தலைவர்கள்
சேவை கடுப்படைய செய்கிறது.
விடுதலை நாளை கூட குண்டு வெடிப்புகளுக்கு பயந்து கொண்டாடும் அவலம்
கண்ணீரை வர வைக்கிறது.
தங்களி ராஜ தந்திரங்கள் மூலம் நாட்டில் மத-இன கலவரங்களை வர வைத்து ஓட்டுகளைப்பொறுக்கி பின் குண்டு துளைக்கா கூண்டில் இருந்து கொடிகளை ஏற்றி மக்களுக்கு ஆரஞ்சு மிட்டாய்களை மட்டும் வழங்கும் இன்றைய  தியாகத் தலைவர்களை கண்டு உள்ளமே பதைக்கிறது.

இருப்பினும் நாம் பிறந்த நாடு இந்தியா.
சுரன்

பகத் சிங்,வ.உ.சி,சுப்பிரமணிய சிவா,உத்தம் சிங்,பாரதி,திருப்பூர் குமரன் கொண்டாடிய இந்திய விடுதலை நாளை

அது நம் விருப்பம் போல் இந்தியாவை

வைத்திருக்க வில்லை என்றாலும்

வணக்கத்துடன் வாழ்த்த தான்

வேண்டியிருக்கிறது.

இந்த 65-வதுவிடுதலை நாளாவது நம் ஆட்சியாளர்களுக்கும்-தலைவர்களுக்கும்

இந்திய நாட்டுப் பற்றை உண்டாக்கட்டும்.
இனிய இந்திய விடுதலைப்பெருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரியதாகட்டும்.

சுதந்திர தின செய்தி
====================
மேற்கு வங்க இன்றைய முதல்வர் மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் பேசிய போது
"அதை செய்யப்போகிறேன்.இதை செய்யப்போகிறேன் என்று
சுரன்

முதல்வரானீர்கள்.விவசாயிகளுக்காக என்ன செய்துள்ளீர்கள்?"
என்ரு கூட்டத்துக்கு வந்த விவசாயி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரை மாவோயிஸ்ட் இவர் உடனே கைது செய்து சிறையிலடைத்து விசாரியுங்கள் என்று காவலர்களுக்கு மம்தா கட்டளையிட .இன்று விவசாயி சிறையில் அடைகக்ப்பட்டுள்ளார்.

இந்திய விடுதலை அதுதாங்க சுதந்திரம் எப்படி வளர்ந்துவிட்டது .கண்டு கொண்டீர்களா?
சுரன்

தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா பரவாயில்லை.

காலரா பரவுகிறதுநடவடிக்கை யில்லையா ?
என்ற ஸ்டாலின்,கொட நாடு ஓய்வு பற்றி கருத்து சொன்ன

கருணாநிதி,விஜய்காந்த்,ராம்தாஸ் ஆகியோர் மீது அரசு வழக்கு மட்டுமே

போட்டுள்ளது.மேற்கு வங்கத்தை  விட இங்கு கொஞ்சம் சுதந்திரம் இருக்கு.
_________________________________________________________________________________

சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?