வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

மருத்துவமும் பன்னாட்டு வேட்டை களமா?

-என்.சிவகுரு
மருந்து விற்பனை என்பது இன்று வேகமாக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள் ளதை உலகமய சூழலில் நாம் காண்கிறோம். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட தங்கள் வர்த்தகத்தை அதிகப்படுத்திட, இத்துறையில் கால் பதிக்க துவங்கியுள்ளன. சேவை என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. லாபம்.. லாபம்.. கூடுதல் லாபம் எனும் தாரக மந்தி ரத்தை பின்புலமாய் கொண்டு இத்துறையில் உள்ளவர்கள் செயலாற்றி வருகின்றனர்.
ச்சுரன்

ஒரு மருந்து சிலகுறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே கொடுக்கப்படாமல், அதன் விரி வான பயன்பாட்டின் காரணமாக வேறு சில நோய்களுக்கும் கொடுக்கப்படும் வாய்ப் புள்ளது. சமீப காலமாக உலக அளவில் புதிய மருந்து கண்டுபிடிப்பில் தேக்கமும் வறட்சி யும் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி பணிகளுக்கு ஆகும் பெரும் செலவே இதற்கு முக்கிய கார ணமாகும்.

ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் ஏற் பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இதற்கு கூடுதல் காரணமாகவும் அமைந்துள்ளது.

இது தான் இன்றைய நிலவரம். இந்தப் பின் னணியில் லண்டனை தலைமையிடமாக கொண்டு வர்த்தகம் செய்யும் கிளாக்சோ ஸ்மித் கிளைன் எனும் நிறு வனம் தான் தயாரித்து விற்பனைக்கு வந் துள்ள, சில நோய்களுக்கு மட்டுமே பயன் படுத்திட வேண்டிய சில மருந்துகளை விதி களை மீறி மற்ற நோய்களுக்கும் விற்பனை செய்தது இப்போது உலகுக்கு தெரியவந் துள்ளது.

மன நோய்க்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டிய ஒரு மருந்தின் பக்க விளைவான, இளம் வயதினருக்கு தற்கொலை உணர்வை தூண்டும் எனும் தகவலை தனக்கு சாதகமாக இந்நிறுவனம் மறைத்துள்ளது. பாக்சில்  எனும் வர்த்தகப் பெயரில்  வந்துள்ள இம்  மருந்துகளின் தன்மை கள் மறைக்கப்பட்டுள்ளது. இளம் வயதின ருக்கு-குழந்தைகளுக்கு இம்மருந்து கொடுக் கப்படலாம் என்பதற்கு சாதகமாக சில மருத் துவ அறிக்கைகளை பிரபலமான மருத்துவ புத் தகங்கள் மூலம் வெளியிட்டுள்ளது.
சுரன்

இதே கிளாக்சோ நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான வெல்பர்டின்  மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட வேண்டிய மருந்தாகும். ஆனால் இம்மருந்தை உடல் எடை குறைப்பிற்கும், பாலியல் பிரச்ச னைகளுக்கும் இந்நிறுவனம் பரிந்துரைக்க சொன்னது. இதற்கு ஆதாரமாக தங்கள் நிறு வனமே பரிசோதனைகள் செய்ததாக அறிக் கைகளை வெளியிட்டது. இப்போது அவ்வ றிக்கைகள் அனைத்தும் தவறானது, முறையற் றது எனவும், அந்த அறிக்கைகள் வெளியிடப் பட ஆராய்ச்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுக் கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாக்சோ நிறுவனத்தின் இந்த தவறான வழிகாட்டுதல்களை மிகப் பெரிய குற்றம் என்று அந்நாட்டு கட்டுப்பாடு அதிகாரிகள் சொல்லியுள்ளனர். எப்போதும் போல இந்த பன்னாட்டு பெரும் வணிக நிறுவனமும் இதற்கு சில மூத்த அதிகாரிகளே காரணம் என ஒரு சில பேர்களின் பக்கம் தள்ளி விடப் பார்க்கின்றது. இது ஓர் நிறுவனத்தின் வர்த்த கம்/வியாபாரம் சம்பந்தப்பட்ட கொள்கை (ளை) முடிவுகள். அப்படியிருக்க ஒட்டுமொத்த நிறுவனமே தண்டிக்கப்பட வேண்டியுள்ளது.
சுரன்

இப்படி தவறு செய்யும் நிறுவனங்கள் மீது நஷ்டஈடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக் கான டாலர்கள் செலுத்த வேண்டும் எனும் வழக்கு தொடரப்படுகின்றது.

இப்படி ஏதோ ஒரு நிறுவனம் தான் தவறு செய்கின்றது என்பது மட்டுமல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி ஓட்டத்தில் இது ஒரு சிறு புள்ளியே!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அபோட்  எனும் நிறுவனம் நரம்பு தளர்ச்சி மற்றும் மன உளைச்சலை கட்டுப்படுத்தும் மருந்தான டெபாகோட் வேறு சில பிரச்ச னைகளுக்கும் எழுதப்படலாம் எனும் தவ றான தகவல் கொடுத்ததற்காக ஆறு மாதம் முன்பு 1.6 பில்லியன் டாலர் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
                                   

அதே போல் ஜான்சன் & ஜான்சான் நிறு வனம் தயாரித்துள்ள ஒரு மருந்தை விற் பனை செய்ய மட்டுமே உரிமை பெற்ற அபோட் நிறுவனம் தவறான தகவல்களை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டு , 2 பில்லியன் டாலர் அபராதத் தொகையாக செலுத்திட வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது. இந்த அபராதத் தொகைகளை கட்டாமல், தட்டிக்கழித்து விட லாம் எனும் எண்ணத்தில், நிறுவனம் வழங் கிய தகவல்கள் அனைத்தும் உண்மையே என மருத்துவர்கள் மூலம் சொல்ல வைத்தது. அதுவும் முற்றிலும் தவறு என தெரியவந்தது.

எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள் எனும் விஷம பிரச்சாரமும் செய்யப்பட்டது. தங்க ளின் கார்ப்பரேட் நற்பெயரை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த நிறுவனங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை பல வரலாறுகள் நமக்கு சொல்லியிருக்கின்றன.

இந்த மோசமான வழித்தடத்தை கொண் டுள்ள பன்னாட்டு நிறுவனங்களான கிளாக் சோவும் - அபோட்டும் தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க, வளரும் நாடுகள் மீது கவனம் திருப்பி சந்தைகளை தங்கள் வசமாக்கி, ஒட்டு மொத்தமாக மக்களை ஏமாற்றி சுரண்டப் பார்க்கின்றன. மேற்சொல்லப்பட்ட நிறுவனங் கள் தங்கள் சொந்த நாடுகளிலேயே தவறான அனைத்தையும் செய்து அபராதம் கட்டி விதியை மீறியவைகள். நம்நாட்டில் என்ன செய்தார்கள்? ஆட்சியாளர்களோ கதவுகளை அகலமாக திறந்துவைத்து எதை வேண்டு மானாலும் செய்யுங்கள்- என ரத்தினக் கம் பளம் விரிக்கின்றனர்.


அதனால் தான் இன்று தடுப்பூசிகள் வர்த் தகத்தில் சுமார் 70 சதவீதத்திற்கு மேலான சந்தையை தன்னுடைய ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கிறது கிளாக்சோ நிறுவனம். இவர் கள் வசதியாக நம்நாட்டு மக்களை சுரண்ட இந்தியாவிலுள்ள தடுப்பூசி நிறுவனங்கள் (பொதுத்துறை) இயங்காமல் - உற்பத்தி செய் வது தடுக்கப்பட்டு முடக்கி வைக்கப்பட்டது. விளைவுகளை இன்று நாம் சந்திக்கின்றோம். இதற்கு ஏற்றாற்போல், சில ஆண்டுகளுக்கு பிறகு (சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல்) இப் போது இந்தியாவின் மூன்று தடுப்பூசி நிறு வனங்களில் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்த நிறுவனங்களின் வெளியீட்டு திறன் அரசு மருத்துவமனை களின் தேவைக்கும் குறைவாகத்தான் இருக் கும். இதைத்தவிர வெளிச்சந்தை உள்ளது. ஆக, நாமே அறியாமல் நமது எதிர்கால தலை முறை பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் பிறந்த நாள் முதல் இருக்கும். மற்றொரு புறத்தில் அபோட் நிறுவனம் இந்தி யாவில் உள்ள பெரும் இந்திய நிறுவனங்களை விழுங்கி இந்திய சந்தையில் அழுத்தமான கால் பதித்து, சந்தையில் 30 சதவீதம் இடத்தை பிடிக்க மேலும் நிறுவனங்களை வாங்கவும் முயற்சிக்கின்றது. இப்படி செய்யும் போது பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் (தொழிற்சாலை மற்றும் மருத்துவ பிரதிநிதிகள்) எந்தவிதமான உரிமைகளும் இன்றி நசுக்கப் படுகின்றனர்.


இந்த பன்னாட்டு நிறுவனங்களின் படை யெடுப்பை - கொள்ளை முயற்சியை தடுப்பது தேச பக்த கடமையாகும். மருத்துவ அரங்கில் பல சாதனைகளை நம்நாட்டு அறிஞர்கள் புரிந்து வருவது ஒரு புறம். அதே நேரத்தில், சுகாதார மேம்பாட்டிற்காக அரசு செலவிடும் தொகையோ ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றது. தனியார் மயத்தை நோக்கி இந்த துறையை அரசே தள்ளி விடுகின்றது. இன் னும் பெருவாரியான மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் கிடைப்பதில்லை. சமீபத்திய ஆய்வு அறிக்கை மூலம் நமக்கு கிடைக்கும் செய்தி நம்மை அதிர்ச்சியில் தள்ளுகின்றது.

உலகப் புகழ்பெற்ற தி லான்செட்எனும் மருத்துவ இதழில், 2010ம் ஆண்டு மட்டும் 1.7 மில்லியன் மக்கள் உயிர் இழந்துள்ளனர்; அதில் சுமார் 4 லட்சம் பேர் நிமோனியா காய்ச்சலால்  மடிந் துள்ளனர்; அடுத்ததாக, சுமார் 2 லட்சத்தி பத் தாயிரம் பேர் வயிற்றுப் போக்கால் மறித்துள் ளனர் எனும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது..
சுரன்

இப்படி வயிற்றுப்போக்கு நோய் வருவ தற்கு பல காரணங்கள் உண்டு. ஆனாலும் சுதந்திர இந்தியாவில் எந்த ஆட்சியிலும் அதைப்பற்றிய கவலையோ, அதை போக்கு வதற்கு உருப்படியான உறுதியான நடவடிக் கைகளோ எடுக்கப்பட்டதில்லை.

சமீபத்திய யுனிசெப் நிறுவனத்தின் அறிக் கையை படிக்கும்போது மேலும் வேதனை யளிக்கிறது. அதாவது நம் நாட்டின் மொத்த மக் கள்தொகையில் கிட்டத்தட்ட 54 சதவீத மக் கள் (சுகாதாரமான) கழிவறை வசதியின்றி திறந்தவெளிகளில் மலம் கழிக்கின்றனர். நம்மைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏன் ஏழ்மை நாடான வங்கதேசத்தில் கூட நம்மை விட முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் நமது நாட்டின் நிலை மிகவும் மோச மானதாக உள்ளது.

சுற்றுச்சூழல் துறையில் தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான அமைச்சராக உள்ள ஜெய் ராம் ரமேஷ், 2017க்குள் மொத்த மக்கள் தொகைக்கும் கழிவறை வசதி கிடைத்து விடும் என ஆரூடம் போல சொல்லி வருகின் றார். திட்டங்கள் எதுவும் உருப்படியாக வடி வமைக்கப்படவில்லை.

கழிவறை கட்டுவதற்கு மானியங்கள் வழங் கப்படுவதாக பெரும் விளம்பரங்கள் அரசு தரப் பில் செய்யப்பட்டாலும், அதை வாங்குவதற் குள் மக்கள் படும்பாடு ?

சுகாதாரமான தண்ணீர் இல்லை.
சுரன்


 குடிப் பதற்கு தண்ணீர் கிடைக்க பல மைல் தூரம் நடக்கும் பெண்களின் அவலம் நீடிக்கும் நமது நாட்டில், முறையற்ற பன்னாட்டு நிறுவனங் களின் படையெடுப்பு ஒரு பக்கம்; திட்டமிட்டு தனியார் மயத்தை நோக்கி தள்ளும் மத்திய, மாநில அரசுகள் மறுபக்கம்.
சில்லறை விற்பனையை கூட உள்ளூர் மக்களிடமிருந்து பறிக்கும் அரசை மக்கள் நலன்=நாட்டு நலன் கொண்டது என்று பாமரன் கூட சொல்லமாட்டான்.
___________________________________________________________________-

சுரன்