பரிகள் யாருக்கு?


சுரன்
முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்,தான் குடியரசுத் தலைவர்  பதவி வகித்த காலத்தில் அளிக்கப்பட்ட  விலை உயர்ந்த பரிசு பொருட்களையெல்லாம் தன் வீட்டுக்கு எடுத்துச்  சென்றுவிட்டார்..
பிரதிபா பாட்டீல் கடந்த ஐந்தாண்டு காலம் இந்திய குடியரசு தலைவராக பதவி  வகித்தபோது, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், உலக நாடுகள் பலவற்றிற்கும் இதுவரை எந்த குடியரசுத் தலைவரும் செல்லாத அளவு அரசு   பயணமாக சென்று சாதனை படைத்துள்ளார்..
அப்போது அவருக்கு பல நாட்டு அரசுகளும்,சந்திக்கும் முக்கிய  பிரமுகர்களும்,மாநிலங்களில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் விலை மதிப்புடைய  பரிசு பொருட்கள் குடியரசுத் தலைவர் என்ற மரியாதைக்காக அளிக்கப்பட்டுள்ளன.
பிரதிபா தனது பதவி காலத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட  பலரிடமிருந்து விலை மதிப்புமிக்க பரிசு பொருட்களை பெற்றுள்ளார்.
சுரன்

குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்படும் பரிசு பொருட்கள் அரசுக்கும்,நாட்டு  மக்களுக்கும் சொந்தமானது என்பதால்,அவற்றை குடியரசுத்தலைவர் மாளிகையிலேயே காட்சிக்காக வைத்துவிடுவதுதான் மரபு.
 பதவியிலிருந்து ஓய்வுபெற்று  செல்லும்போது,தன்னுடன் எந்த பரிசு பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது.
ஆனால்பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிரதிபா  பாட்டீல்,தமக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருட்களில்,விலை மதிப்புடைய 150 பரிசு  பொருட்களை, அவர் தற்போது தங்கியிருக்கும் மராட்டிய மாநிலம் அமராவதியில்  உள்ள தமது பண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.
பிரதிபாவின் இந்த செயல் அரசியல் சாசன நிபுணர்கள், இது மரபுக்கு மாறானது என்று  கூறியுள்ளனர்.
பரிசுகள் பிரதீபா பாட்டில் என்ற பெண்மணிக்காக அல்ல.இந்திய குடியரசுத்தலைவர்-இந்திய முதல் குடிமகள் என்பதற்காகத்தான்.இதை பிரதீபாபுரிந்து கொள்ளாதது தவறு.அவரது அன்னை சோனியாவாவது கூறியிருக்கலாம். 
பிரதிபா மீது அவர் பதவி காலத்தில் அதிகமுறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்  சென்றதாகவும்,தமது குடும்பத்தினர்களை அதிக அளவில் ஜனாதிபதி மாளிகையில் தங்க  வைத்ததாகவும்,வெளிநாட்டிற்கும் அரசு செலவில் குடும்பத்தினரை அழைத்து  சென்றதாகவும் பல்வேறு வரம்பு மீறல்களை செய்துள்ளார்..
அதை விட தனது பதவியை பயன்படுத்தி ஓய்வுபெற்ற பின்னர் தான் குடும்பத்துடன் தங்குவதற்காக புனேவில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான  ஆயிரக்கணக்கான ஏக்கர் இடத்தை இலவச ஒதுக்கீடாக கேட்டார் பிரதிபா.
இந்த அதிகார மீறல்  குறித்து ஊடகங்களில் செய்தி  வெளியாகி பலத்த கண்டனங்கள் ஏற்பட்டதால் அந்த கோரிக்கையை பிரதிபா கைவிட்டார் .
இது நாம் இதுவரை குடியரசுத்தலைவர் பதவிக்கு பொறுத்தமில்லாத -நாட்டை விட தனது குடும்பத்தின் வளத்தை மட்டுமே கருத்தில் கொண்டஒருவரை அப்பதவியில் வைத்திருந்தோம் என்று தெரிகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?