அடுத்த லட்ச கோடிகள் இழப்பு சாதனை

மன்மோகன் சிங்-சோனியா இந்த ஆட்சிகாலம் முழுக்க மக்கள் நலனுக்காக அல்லும் -பகலும் பாடு பட்டு வருகிறார்கள்.
2ஜி,கேஜி ,3ஜி,இஸ்ரோ அலைவரிசை என்று முறைகேடுகள் அல்லது நாட்டுக்கு இழப்புகள் அனைத்தையும் எத்தனை வட்டங்கள்[பூஜ்யம்] போட வேண்டும் என்று கணிக்க பாமரன் துன்பப்படும் அளவுக்கு லட்சம் கோடிகளில்தான் வரும் மாதிரியாக பார்த்துக்கொள்கிறார்கள்.
இதோ அடுத்த லட்சம் கோடிகள் கணக்கில் அடுத்த இழப்பு சாதனை.
சுரன்
நாடு முழுவதும் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் லாபம் அடைந்த நிறுவனங்கள் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ஆகியவை குறித்து பாராளுமன்றத்தில் இன்று மத்திய கணக்கு தணிக்கை குழு (சி.ஏ.ஜி.)  அறிக்கை தாக்கல் செதுள்ளது. 

இந்த அறிக்கையில் 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களுக்கான நிலக்கரி ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்ஸார் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் உட்பட 25 நிறுவனங்கள் சுரங்க உரிமங்கள் பெற்றுள்ளதாகவும்,

 இதற்கு சரியான ஏல நடைமுறைகளை அரசு கடைப்பிடிக்காததால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

 புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் வேண்டுமென்றே செய்யப்பட்ட காலதாமதம் காரணமாக, உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமான கோல் இந்தியா நிறுவனத்திற்கு 116 மில்லியன் டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
சுரன்

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான சாசன் மின் உற்பத்தி நிறுவனத்திற்கு கூடுதலாக 3 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும்,  ரிலையன்ஸ் நிறுவனம் 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்துள்ளது. 



-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுரன்
இந்திய மன்மோகன் சிங் அரசின் கறைகள் முன் என் உடல் கறை தூசு.
தலை குனிகிறேன்.

---------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?