காவல் நாய்களா.....?


சுரன்


சுரன்

தணிக்கை பயிலும் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படும் முக்கியமான விதி களில் முதலாவது, தணிக்கையாளர் என்போர் காவல்நாய்கள் போன்று செயல்பட வேண்டுமேயொழிய, மோப்ப நாய்கள் போன்று வேட்டையாடக்கூடாது என்பதே யாகும். 
மன்மோகன் சிங் அரசாங்கம், இந்த விதியைத் தற்போதைய மத்தியத் தணிக் கைத்துறைத் தலைவர் (சிஏஜி) மீறியி ருப்பதாக மக்கள் நம்ப வேண்டும் என்று எதிர் பார்க்கிறது.
 சிஏஜி, முன்பு 2ஜி வழக்கிலும், தற்போது நிலக்கரிச் சுரங்க வழக்கிலும் அளித்துள்ள அறிக்கைகள் அதனை அவ் வாறு சிந்திக்கத் தள்ளியுள்ளன. சிஏஜி ஏன் இவ்வாறு விமர்சித்திருக்கிறார் என்று அமைச்சர்கள் கேட்கிறார்கள். 
இது, அவர் தன் அதிகார வரம்பெல்லையை மீறிய தாகாதா? இவ்வாறு இவர்கள் கேட்பதற் கான காரணம், தனியார் நிறுவனங்களுக்கு இருப்பதுபோன்று தணிக்கை முறைகள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இல் லாமல் இருப்பதுதான். 
சுரன்
இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் இயற்கை வளங்களுக்கு -அது 2ஜி ஸ்பெக் ட்ரம் அலைவரிசைகளாக இருந்தாலும் சரி, அல்லது நிலக்கரி போன்ற கனிம வளங்க ளாக இருந்தாலும் சரி - நடைமுறையில் அவற்றின் பாதுகாவலர்களாக இருப்பது நாட்டை ஆளும் அரசியல்வாதிகள்தான். அவர்கள் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக நாட்டின் செல்வங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும்போது, அத்தகைய ஊழல் நடவடிக்கைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பொறுப்பை சிஏஜி எடுத் துக்கொள்கிறார். ஆம், கேட்பவர் மனதைத் திடுக்கிடச் செய்யும் அளவிற்கு முன்பு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீட்டிலும் சரி, இப்போது நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தி ருப்பதிலும் சரி, அரசின் கஜானாவிற்கு வந் திருக்க வேண்டிய தொகை சம்பந்தமாக சிஏஜி தெரிவித்திருக்கும் தொகையின் அளவு என்பது வெறும் ஊகத்தின் அடிப் படையில்தான். 
ஆயினும், தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச் சரவை நிர்ணயித் திருக்கும் குறைந்தபட்ச ரிசர்வ் தொகையை ஆராய்ந்தோமானால், சிஏஜி கூற்று எந்த அளவிற்குச் சரியானது என்பது புலனாகும்.

 இவ்வாறு நாட்டின் வளங்கள் கொள்ளை போவது குறித்து நேர் மையான முறை யில் உலகுக்கு வெளிச் சம்போட்டுக் காட்டியுள்ள சிஏஜியும் அவ ருக்குக் கீழ் பணியாற்றும் தணிக்கையாளர் களும் மிகவும் பாராட்டப்பட வேண்டிய வர்களா வார்கள்.

நாட்டின் அபூர்வமான இயற்கை வளங் கள் ஒதுக் கீடு செய்யப்படுகையில், நியாய மான முறையிலும் நேர்மையான விதத் திலும், அரசுக்கு அதிகபட்சம் ஆதாயம் அளிக்கக்கூடிய விதத்தில் ஒரு வழி முறை வகுக்கப்பட வேண்டும் என்பது மேற்கண்ட அறிக் கைகள் மூலம் தெளிவாகி இருக் கிறது. உச்சநீதிமன்றம், 2ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப் புரையில் ஏற்கனவே அளித்துள்ள கட்ட ளைப்படி, ஏலம் விடும் முறை சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் (வளர்ச்சி மற்றும் முறைப்படுத்தல்) சட் டத்திலும் சேர்க்கப் பட்டுவிட்டது. 

சுரன்

ஏலம் விடும் முறை நன்கு வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், வெளிப் படையாக இருப்பதாலும் நேர்மையான முறையாகும்.
 உச்ச நீதிமன்றம் பரிந்துரைத் துள்ள அதே சமயத்தில், இம்முறையை எதிர்த்திடுவோரும் உள்ளனர். ஒரு மதிப்பு மிக்க வளம் அபூர்வமாகக் கிடைக்கக் கூடிய சமயத் தில், அதனை ஒதுக்கீடு செய் கையில் அதிகபட்சம் அரசுக்கு ஆதாயம் கிடைக்கக்கூடிய விதத்தில் ஆட்சியாளர் கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை எவரும் மறுக்க முடியாது. இதில் உள்ள ஆபத் தைச் சரிப்படுத்திட, ஏலம் விடும் முறையே சிறந்த வழி யாகும். 

வெள்ளிக்கிழமையன்று மாநிலங் களவையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி-யின் மூன்று அறிக்கைகளும் புயலைக் கிளப்பும் என்பதும் நிச்சயம். ஏனெனில், மேற்கண்டவாறு நிலக்கரிச் சுரங்கங்கள் தொடர்பாக சில ஒதுக்கீடுகள் நடைபெற் றுள்ள சமயத்தில் நிலக்கரி அமைச்சகம் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந் திருக்கிறது.


 நாடாளுமன்றத்திற்கு உள் ளேயும், வெளியேயும் இதனைச் சமாளித் திட ஆட்சி யாளர்கள் தங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்துவார்கள் என்ற போதிலும், அவர்கள் இவ்வூழல்களை வெளிக்கொணர்ந்த காவல்நாயையே சுட் டுக் கொன்றுவிட வேண்டும் என்று ஆத் திரப்படக்கூடும். 
ஆனால் அதனை அவர் கள் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறில்லாது, அவ்வாறு செய்வதற்காக ஏதேனும் முயற்சி அவர்கள் மேற்கொண் டால், அது மீளவும் அவர்களையே தாக் கிடும்.

தி இந்து, ( 20-08-12) தலையங்கம்,
----------------------------------------------------------------------------------------------------------------------------------
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?