சனி, 9 ஜூலை, 2016

பனங்கன்டி ராமராயநிங்கார்


 என்ற பனகல் அரசர் 


பனகல் அரசர் தமிழ் நாட்டில் 1917ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தில்  நீதிக் கட்சியின் தலை வராகவும் - அதைத் தொடர்ந்து 1923ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பிரதான மந்திரியாகவும் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் அப்பதவிகளில் வீற்றிருந்து 1928ஆம் ஆண்டு காலமானார்.

மருத்துவக் கல்லூரியில் மற்ற இனத்தவர் சேர்வதை தடுக்க பார்ப்பனர்களால் மருத்துவக் கல்லூரியில்  சேருவதற்கு கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட  தடையை உடைத்துத் தூக்கி எறிந்தவர்.


அந்தக் காலகட்டத்தில் கல்லூரிகளில் முதல்வர்களாக இருந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தாம். 

பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரியில் நுழைவது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது.அத்தகு கசப்பான சூழலில், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கென்றே ஒவ்வொரு கல்லூரியிலும் குழு ஒன்றை அமைத்து, அவர்கள் மாணவர்களைச் சேர்க்க வழிவகை செய்து, பார்ப்பனர் அல்லாதார் வயிற்றில் பாலை வார்த்தார்.

பார்ப்பனர்களின் வேட்டைக்காடாக இருந்த கோயில்-களின் நிருவாகத்தை ஒழுங்குபடுத்த இந்து அறநிலையத் துறை என்ற ஒன்றைக் கொண்டுவந்தவரும் அவரே!

பறையன், பஞ்சமன் என்றிருந்த பெயர்களை மாற்றி ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தவரும் அவரே!

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். 

மகாமகா தந்திரசாலி என்று பார்ப்பனர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டவர்.

தலைநகரமான சென்னையை விரிவாக்க வேண்டும் எனும் நிலை வந்தபோது, சைதாப் பேட்டைக்கும் சேத்துப்பட்டுக்கும் இடையில் இருந்த பெரிய ஏரியை வற்றச்செய்து, அங்கு பெரிய குடியிருப்புத் திட்டத்தை உருவாக்கினார். அதுதான் இன்றைய தியாகராயர் நகர். 

புதுடெல்லி போல திட்டமிட்டு உருவாக்கப் பட்டது இந்த நகர்.

=====================================================================================
இன்று,
ஜூலை-09.


  • அர்ஜென்டீனா விடுதலை தினம்(1816)
  • சென்னை  மாகாண முதல்  முதல் அமைச்சர்  பனகல் அரசர்(பனங்கன்டி ராமராயநிங்கார்) பிறந்த நாள்.(1866)

  • ஆப்ரிக்க ஒன்றியம், அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது(2002)

  • அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது(2006)

இயக்குனர் கே .பாலசந்தர் பிறந்த நாள்.


=======================================================================================