திருநங்கைகளுக்கு உரிமை

 திருச்சி சிவா சாதனை!
45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி!!

"திருநங்கைகளுக்கு சம உரிமை" மசோதா. 

கடந்த 45 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நபர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று முதன்முறையாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்தவர் திமுக எம்பி திருச்சி சிவா.
 
மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதம், திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தாக்கல் செய்தார். அதில், "சமூகத்தில் சுமுகமான முறையில் திருநங்கைகளும் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களை போலவே திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும்"  என்று குறிப்பிட்டிருந்தார். 

திருநங்கைகளின் வாழ்க்கைக்கான உரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாத்தல், உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பது, அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கவுரவமான வசிப்பிடங்கள் மற்றும் அவர்களுக்கான குடும்பங்களை அமைப்பதற்கான உரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. 

இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய திருச்சி சிவா, ‘இது தான் சரியான நேரம். இந்த மசோதாவை நிறைவேற்ற இதைத் தவிர வேறு வழியில்லை என்றே நான் கருதுகிறேன். 
எனவே அரசு பெருந்தன்மையுடன் இதனை ஆதரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து இந்த மசோதாவை ஆதரித்து பல உறுப்பினர்களும் பேசினர். பின்னர் இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ‘திருநங்கைகள் உரிமை சட்டம் 2014’ என்ற பெயரிலான இந்த சட்டம் இனிமேல் நாடாளுமன்றத்துக்கு விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் அனுப்பிவைக்கப்படும். நாடாளுமன்றத்திலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதி ஒப்புதலுடன் இச்சட்டம் அமலுக்கு வரும்.

இது குறித்து செய்தியாளர்களிடம் திருச்சி சிவா கூறுகையில், ‘‘சமூகத்தில் திருநங்கைகள் புறக்கணிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு எதிரான உடலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் கருத்து ரீதியான வன்முறைகள் அதிகரித்த நிலையில் இது போன்றதொரு மசோதாவை தாக்கல் செய்யும் முடிவுக்கு வந்தேன். இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற ஒத்துழைத்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

இதற்கு முன்பு 1970ஆம் ஆண்டு தான் ஒரு தனிநபர் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. 
அது உச்ச நீதிமன்றம் (கிரிமினல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அதிகார வரம்பை விரிவுபடுத்துதல்) தொடர்பானது ஆகும். 
அதன் பின்னர் 45 ஆண்டுகளில் இப்போது தான் ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் 

இது தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தனி நபர் தீர்மானம் மூலம் கொண்டு வந்த "திருநங்கையர்களின் உரிமைகள் தொடர்பான மசோதா 2014" ராஜ்ய சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்நாள் வரலாற்றில் மிக முக்கிய நாள். கடந்த 45 வருடங்களுக்குப் பிறகு தனி நபர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று இப்படி நிறைவேற்றப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. 

வேறுபட்ட அரசியல் நிலவும் இந்த சூழ்நிலையில், இது போன்ற முக்கியமான மசோதாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதுடன் செயல்பட்டிருப்பது இதயத்திற்கு இனிமையான செய்தியாக அமைந்திருக்கிறது. திருநங்கையரின் முன்னேற்றத் திட்டங்களுக்கு தேசிய அளவிலான கொள்கை உருவாக்கவும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கவும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

அவர்களின் நல் வாழ்விற்காகவும், இந்த சமுதாயத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கும் தி.மு.க என்றும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு திருநங்கைகள் என பெயர் சூட்டி,வாரியம் அமைத்து, தொழில் துவங்க வழி வகுத்து, பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்ற காரணமாக இருந்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே வேளையில், இது மக்களவையிலும் நிறைவேற்றப்படும் .அதற்கு மற்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பாளர்கள் என்று நம்புகிறேன்" 
                                                                                                                -என்று கூறியுள்ளார்.
========================================================================


தேன் +பட்டை .
======================
இயற்கை மருத்துவத்தில்  நமக்கு மிகவும் அறிமுகமான பொருட்கள் தேன் ,மற்றும் பட்டை என்று கூறப்படும் இலவங்க மர ப்பட்டை கொண்டு நம் நோய்கள் பலவற்றை சமாளிக்கலாம்.அவை பற்றி;
முட்டி வலிகள்
ஒரு பகுதி தேனுக்கு இரண்டு பகுதி சூடான தண்ணீர்  எடுத்து அதில் ஒரு சிறிய ஸ்பூன் அளவு பட்டை பொடியை கலந்து பேஸ்ட்டாக்கி வலியுள்ள பகுதியில் மெதுவாக தேய்த்து வந்தால், இரண்டு நிமிடங்களில் குறையத் தொடங்கும். 
ஆர்த்தரடிஸ் நோயாளிகள், தினமும் காலையில் ஒரு கப் சுடு தண்ணீரில், 2 ஸ்பூன் தேன், ஒரு சிறிய ஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து தினமும் குடித்து வந்தால் போதும்.
முடி உதிர்தல்
முடி உதிர்வு மற்றும் வழுக்கை தலையுள்ளவர்கள் சிறிதளவு  ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பட்டை பொடி மூன்றையும் கலந்து களிம்பு பதத்தில்  கலந்து, குளிப்பதற்கு, 15 நிமிடத்திற்கு முன்பு 
தேய்த்து அதன் பிறகு  சூடான நீரில் தலையை கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கொலஸ்டிரால்
இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், மூன்று ஸ்பூன் பட்டை பொடி , 16 அவுன்ஸ் தண்ணிரில் கலந்து கொலஸ்டிரால் நோயாளிகளுக்கு கொடுத்தால், இரண்டு மணி நேரத்தில் ரத்தத்திலுள்ள கொலஸ்டிரால், 10% குறைந்து விடும். 
தினசரி மூன்று முறை கொடுத்தால் நாள்பட்ட கொலஸ்டிராலும் குணமாகிவிடும்.

ஜலதோஷம்
ஜலதோஷத்தால் அவதிப்படுகிறவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன்  தேனை சூடாக்கி , 1/4 ஸ்பூன் பட்டை பொடியை  கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஜலதோஷம், இருமல், சைனஸ் குணமாகிடும்.

வயிற்றுக்கோளாறு
தேனுடன் சிறிது பட்டை பொடியை  கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும். 
அது போல சரிசம அளவு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்னையும் குணமாகும்.


நோய் எதிர்ப்பு தன்மை:
 தேனையும் பட்டை  பொடியையும் தினமும் உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு தன்மை கூடி உடம்பை பாக்டீரியா மற்றும் வைரஸ் நம்மை தாக்குதலிருந்து காப்பாற்றும்.

நீண்ட வாழ்வு: 
நான்கு ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பட்டை பொடி  மற்றும் 3 கப் சூடான நீருடன் கலந்து தேனீர் போல்  தயாரித்து குறைந்தது தினசரி மூன்று வேளை 1/4 கப்பா அளவு அருந்த வேண்டும். 
இது உங்கள் தோலை புதுப் பொலிவுடன் வைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் முதுமையடைவதை தடுக்கும்.

உடல் எடை குறைய: 
அதிகம் சதை போட்டு  குண்டானவர்கள், தினசரி தேனையும் பட்டை பொடியை கொதி தண்ணிரில் கலந்து, ஆறியதும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். தொடர்ந்து  குடித்து வந்தால், உடம்பில் கொழுப்பு சேராது. 
========================================================================
இன்று,
ஏப்ரல்-25.

  • சர்வதேச மலேரிய விழிப்புணர்வு தினம்
  • போர்ச்சுகல் விடுதலை தினம்(1974)
  • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த தினம்(1874)
  • அமெரிக்கா, ஸ்பெயின் மீது போரை அறிவித்தது(1898)
நேபாளத்தில் இன்று கடுமையான நில நடுக்கம்.கடும் சேதம் .








========================================================================
தமிழகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 1,420; கூட்டுறவு சங்கம், 32,553 என, மொத்தம், 33,973 ரேஷன் கடைகள் உள்ளன. 

பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷனில், அரிசி இலவசம்; சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. 

நுகர்பொருள் வாணிப கழகம், ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்து, ரேஷன் கடைக்கு நகர்வு செய்கிறது. ரேஷன் கடைக்கு, மாதம்தோறும் 60 சதவீத பொருட்களை, 5ம் தேதிக்குள்ளும்; எஞ்சிய, 40 சதவீத பொருட்களை, 20ம் தேதிக்குள் நகர்வு செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டிற்கு, அதை கொள்முதல் செய்யும் வாணிப கழகத்தின் அலட்சியமே காரணம்.இதற்கு, வாணிப கழக இயக்குனர் குழுவின் தலைவராக இருக்கும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உணவு பொருட்கள் கொள்முதலில், தவறான முடிவுகளை எடுப்பதால், உரிய நேரத்தில் பொருட்களை கொள்முதல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், ரேஷன் ஊழியர் தற்கொலை, அமைச்சரின் பதவிக்கு, ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?