232 பேர்களில் 170 கோடீஸ்வரர்கள்.



தமிழக்கத்தில் சட்டசபையில் தற்போது  170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள் இருக்கிறார்கள் . 
சராசரியாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும், 8.21 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் உள்ளன. 
100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் உடைய மூன்று எம்.எல்.ஏ.,க்களில், முதல்வராக பதவியேற்க உள்ள ஜெயலலிதா முதல்வராவும் இடம் பெற்றுள்ளார்.
தேர்தலின் போது வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த, ஏ.டி.ஆர்., என்ற, ஜனநாயக சீர்திருத்த சங்கமும், 'தமிழ்நாடு எலக் ஷன் வாட்ச்' அமைப்பும், புதிய எம்.எல்.ஏ.,க் களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. 
மொத்தம், 232 எம்.எல்.ஏ.,க்களில், 223 பேரின் விவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க் களில், சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள, 223 பேரில், 170 பேர் கோடீஸ்வரர்கள்.
இது, மொத்த எம்.எல்.ஏ.,க்களில், 76.2 சதவீதம்.
கடந்த, 2011ல், 120 கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்; இது, 51 சதவீதம்.
14வது சட்டசபையை விட, 15வதுசட்டசபையில், கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 25 சதவீதம் அதிகம். 
புதிய எம்.எல்.ஏ.,க்களில், 36 பேருக்கு, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன.
புது எம்.எல்.ஏ.,க்களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் வைத்திருப்பவர்கள் மூன்று பேர். அவர்களில், 337 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் இருப்பவர், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., வசந்தகுமார். 

170 கோடி ரூபாயுடன் தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன், இரண்டாவது இடத்தில் உள்ளார். 

முதல்வராக பதவியேற்க உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, 113 கோடி ரூபாய் சொத்துகளுடன்,இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்த, 15வது சட்டசபையில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும், சராசரியாக, 8.21 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இது, 2011ல், 3.98 கோடி ரூபாயாக இருந்தது.

கட்சி வாரியாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் சராசரி சொத்து மதிப்பு, 4.54 கோடி ரூபாய்;
தி.மு.க.,வுக்கு, 10.25 கோடி ரூபாய்;
காங்கிரசுக்கு, 50.18 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
புதிய எம்.எல்.ஏ.,க்களில், 32 பேர், வருமான வரி விவரங்களை தெரிவிக்கவில்லை.
அதேபோல, 223 எம்.எல்.ஏ.,க் களில், 90 பேர், ஐந்தாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையும்; 127 பேர் பட்டப்படிப்பு வரையும் படித்துள்ளனர். 

மேலும், 82 பேர், 25 முதல், 50 வயது உடையவர்களாகவும்; 140 பேர், 51 வயது முதல், 80 வயது உடையவர்களாகவும் உள்ளனர்.
223 எம்.எல்.ஏ.,க்களில், 18 பேர் பெண்கள். 2011ல், 17 பெண் எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் இருந்தனர். 
=======================================================================================
இன்று,
மே-26.
  • ஜார்ஜியா மக்களாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1918)
  • பிரிட்டன் கலானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது(1966)
  • ஐரோப்பிய கொடி, ஐரோப்பிய சமூகத்தால் பெறப்பட்டது(1986)
=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?