நடுநிலை முகமூடி
இன்றைய அக்னி நடசத்திர விவாதமே தினமலர்-நியூஸ் 7 "மாபெரும் கருத்துக்கணிப்பு பற்றித்தான் இருக்கிறது.
அதன் முடிவுகளை பற்றி திமுகவினர் மகிழ்ச்சியை விட நடுநிலையாளர்கள்[?]பொருமல்தான் அதிகம்.
இதற்கு சில நாட்கள் முன்னாள் தந்தி தொலைக்காட்சி தனக்குள் நடத்திய கருத்துக்கணிப்பை பற்றி யாருமே எந்த விவாதமும் நடத்தவே இல்லை.
அதை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்.
மாபெரும் அரசியல் தரகர் வைகோ கூட அதிர்ச்சி தெரிவிக்கவில்லை."அதெப்படி எங்கள் கே.ந.கூ ட்டணிக்கு ஒரு இடம் கூட தரப்படவில்லை "என்று வெறும் கண்டனம் கூட சொல்லவில்லை.
காரணம் அதில் அனைத்து தொகுதிகளுமே அதிமுக தான் வெற்றி என்பது போல் கருத்து திணிப்பு நடந்தது.
ஆனால் தினமலர்-நியூஸ் -7 மட்டும் கடும் கண்டனங்களை பதிவு செய்யக் காரணம்.மக்கள் மத்தியில் திமுகவுக்கு உண்டான ஆதரவை சுட்டிக்காட்டியதால்தான்.
பொதுவாக கருத்துக்கணிப்பையே பொய் என்று சொல்லும் அரசியல் நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட இந்த கருத்துக்கணிப்பை அவசரமாக கண்டித்துள்ளார்கள்.
சில நடு நிலையாளர்கள் ஒரு படி மேலேயே போய் தினமலர் கோடிகளில் திமுகவுக்கு விலை போய் விட்டார்கள் என்று தங்கள் கண்டு பிடிப்பை சொல்லியுள்ளார்கள்.
ஏன் இவர்களால் மற்ற கருத்துக்கணிப்பை போல் தினமலர் கருத்துக்கணிப்பை கடந்து செல்ல முடியவில்லை?
தாங்கள் நடுநிலையுடன் ஆதரவு தரும் அதிமுகவுக்கு எதிரான முடிவுகள் வந்ததாலா?
இதுவரை தங்களால் சாதி அடிப்படையில் தினமலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவானது என்று கொண்டிருந்த எண்ணம் இந்த கணிப்பினால் சிதறி விட்டது என்பதாலா?
தினமலர் விலை போயிருப்பதாக இவர்கள் சொல்லுவதை ஏற்றுக்கொண்டாலும் கூட இணைந்து கணிப்பை நடத்திய நியூஸ்-7 தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சியில் பெரும்பான்மையான பங்குகளைக்கொண்ட கார் மணல் வைகுண்டராஜனுக்கு முழுக்க சொந்தமான தொலைக்காட்சி என்பதை இவர்கள் மறந்து விட்டார்களா என்று கேட்கத்தோன்றுகிறது.
அவரும் கூட திமுகவுக்கு விலை போய்விட்டிருப்பாரோ?
இதுவரை எந்த பத்திரிகையும்,தொலைக்காட்சியும் கருத்துக்கணிப்பை நடத்தியதில்லையா என்ன?
மக்கள் முன் தந்தி தொலைக்காட்சி தனது பக்கா அதிமுக ஆதரவு செய்திகள்,விவாதங்கள்,கருத்துக்கணிப்புகள்,போன்றவற்றை பார்த்து சிரித்ததை மறந்து விட்டார்களா?
எல்லாப் பத்திரிகைகளையும்போலத்தானே தினமலரும் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.இதில் ஏன் கடுப்பு.
தந்தி போன்று செய்தியாளர் அறைக்குள் நடத்தி ஒரு சார்பாக கணிப்பை எல்லோரும் நம்பிக்கையின்றி பார்க்கவைத்தைதை போல் அல்லாமல் தினமலர்-நியூஸ்-7 மகா கருத்துக்கணிப்பு பலமாக திட்டமிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் மூலம் படிவம் மக்களிடம் தொகுதிக்கு 1000 பேர்கள் எனக்கணக்கிட்டு கொடுக்கப்பட்டு நிரப்பி வாங்கப்பட்டடுள்ளது.
உடனே நிரப்பாதவர்கள் தபாலில் அனுப்பவும் எற்பாடு எய்யப்பட்டது.
பின் அவை அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலமாக ஆதரவு எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் காணொளி மூலம் பதிவு செய்யப்பட்டு அதுவும் ஒளி பரப்பப் பட்டும் விலை போன விமர்சனம் எழுகிறது என்றால் ஒரே காரணம் மட்டுமே உள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு அதரவாக இருப்பது மட்டுமே.
அது அப்படியே அதிமுகவாக இருந்திருந்தால் தினமலர் மீது நம்பிக்கை அதிகரித்துக்கும் நியாயமான கணிப்பு என்று கொண்டாடப்படிருக்கும்.
ஆக கோபம் கருத்துக்கணிப்பின் முடிவுகள் மீதும்,அதை அப்படியே வெளியிட்டதால் விலை போன தினமலர் மீதும் மட்டும்தான்.அதன் உள்ளார்ந்த கோபம் திமுக மீது மட்டும்தான் என்பதை விளங்கிக்கொள்ள நாம் நடு நிலையாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்றைய பத்திரிகைகள்,மின்னணு ஊடகங்கள் ,தொலைக்காட்சிகள்,சமூக வலைத்தளங்களில் உள்ள நடுநிலையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் ஏன்றாலே அவர்களின் அடிப்படை தகுதி திமுக எதிர்ப்பு,ஜெயலலிதா ஆதரவு என்பதுதான்.
எனவேதான் இக்கருத்துக்கணிப்பு இவ்வளவு அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.
அதிமுக சார்பான நாளிதழ் என்று இருந்த தினமலரில் இப்படி செய்தி வெளியானதில் உண்டான அதிர்வுகள்தான் இவை.
1972 முதல் தினமலரின் வளர்ச்சி என்பது உச்சத்தை எட்ட வேகமேடுத்தக் காலம் எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சியும் தினமலரின் நாளிதழ் பல பதிப்பு வேக வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருந்தது.
தினமலரால் எம்ஜிஆர வளர்ந்தார்.எம்ஜிஆர் எதிர்ப்பை கொண்டிருந்த தினத்தந்திக்கு எதிராக எம்ஜி ஆர் செய்திகளை முக்கியத்துவத்துடன் கொடுத்ததால் தினமலர் வளர்ந்தது.
இதனால்தான் இன்றும் எம்ஜிஆர் பிறந்த,இறந்த நாட்களில் சிறப்புக்கட்டுரை -படங்களை தினமலர் வெளியிட்டு நன்றியை செலுத்துகிறது.அவ்வளவுதான் தினமலருக்கு உள்ள அதிமுக தொடர்பு.
மற்றபடி ஜெயலலிதா அட்சியில் நடந்த ஊழல்களை தினமலர் அடிக்கடி ஆதாரங்களுடன் வெளியிட்டுத்தான் வந்துள்ளது.
சத்துணவு முட்டை ஊழல்,பருப்பு ஊழல்,மின்துறை ஊழல் என்று எத்தனையோ ஜெயலலிதா ஊழல்கள்,அரசு முறைகேடுகள் செய்திகள் தினமலரில் வந்துள்ளது,வந்து கொண்டும் இருக்கிறது.
ஆக இது தினமலரின் ஆசைக்கான கருத்துக்கணிப்பல்ல.
மக்கள் மனதில் உள்ள ஆசையின் வெளிப்பாடு.
எய்தவன் இருக்க அம்பை நோவது தவறு.
தினமலர் ,நியூஸ்-7 இரண்டுமே திமுகவை எதிர்ப்பவர்கள் பக்கம் இருந்து வந்தவைதான்.இப்படியானசெய்தியை வெளியிடுவதுதான் நடுநிலை.
திமுக எதிர்ப்பு மனதை மறைக்க போட்டுக்கொள்ளும் இன்றைய நடுநிலை முகமூடி உண்மையான நடுநிலையல்ல.
இன்று,
மே -04.
- உலக தீயணைப்பு படையினர் தினம்
- சீனா இளைஞர் தினம்
- கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்(1767)
- கனடா கடற்படை உருவாக்கப்பட்டது(1910)
- அமெரிக்காவில் பனாமா கால்வாய் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது(1904)