யாருக்கும் வெட்கமில்லை?

"இலவச அலைபேசிகள் மற்றும் மொபெட்கள்; இது அனைத்து தேர்தல் வாக்குறுதிகளின் தாய்" என்னும் தலைப்பில் அ.தி.மு.க., அறிவி்த்துள்ள இலவச அறிவிப்புகள் பற்றி  அயர்லாந்து பத்திரிக்கையான 'தி ஐரீஸ் டைம்ஸ்' கிண்டலாக செய்தி வெளியிட்டு தமிழக மக்களின்  மானத்தை வாங்கி உள்ளது.


வெற்றி பெற்றால் எங்கள் ஆட்சியில் 'அது இலவசம்; இது இலவசம்' என ஆளாளுக்கு நீட்டி முழங்குகின்றன. 

இதில்  முன்னணியில் இருப்பது அதிமுக. தற்போது ஆட்சியி்ல் இருக்கும் அ.தி.மு.க., மீண்டும் தன் தேர்தல் அறிக்கையி்ல் இலவசங்களை அள்ளி தெளித்துள்ளது. அரசியல் விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினபிரும் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை விமர்சித்து வரும் நிலையில் அயர்லாந்து பத்திரிக்கையும் இதை விமர்சி்த்துள்ளது.
அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
"தேர்தல் சமயங்களில் ஐரீஸ் அரசியல் கட்சி்கள் அதிகப்படியான வாக்குறுதிகளை அறிவிப்பதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அது தவறு ,இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் தமிழக நாடு மாநில சட்டசபை தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள வாக்குறுதிகளை கொஞ்சம் ஒப்பிட்டு பார்த்தால் ஐரீஸ் கட்சிகள் வாக்குறுதிகள் ஒரு காசுக்கும் உதவாது என்ற உண்மை தெரியும். 

தற்பொதைஅய் தமிழ் நாட்டை ஆளும் கட்சியான அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா 19.2 மில்லியன் வாக்காளர்களுக்கு இலவச அலைபேசிகள் வழங்குவதாக அறிவித்துள்ளார். 

பள்ளி மாணவர்களுக்கு இலவச இணைய வசதியுடன் கூடிய லேப்டாப், குடும்பத்திற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் இருச்சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம், என ஏராளமான இலவச திட்டங்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.ஆனால் ஏற்கனவே இவர முன்பு இலவசமாக அறிவித்துக் கொடுத்த மின் விசிறி,மிக்சி,கிரைண்டர் உபயோகிக்க தரமற்றதாக இருப்பதாக மாநிலம் முழுக்க குற்றச்சாட்டுகள்  எழுந்தன.இப்போது அவை பழைய பொருட்கள் விற்கும் கடைகளில்தான் இருப்பதாகவும் தெரிகிறது.எனவே இப்போதைய இலவச அறிவிப்புகள் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றும் தெரிகிறது.
இந்த  அ.தி.மு.க., கட்சி உறுப்பினர்கள் தங்கள் தலைவர் மீது முட்டாள்தனமான  விசுவாசம் வைத்துள்ளார்கள். தங்கள் தலைவி ஜெயலலிதாவின் உருவத்தை தங்கள் கைகளிலும் மார்பிலும் பச்சை குத்தி கொள்கிறார்கள்.இந்த ஜெயலலிதா முன்னாள் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது."
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

இதுவரை இந்தியாவில்  கேலிக்கூத்தான மட்டுமல்லாது, ஜெயலலிதா தேர்தல் அறிக்கையின் மகாத்மித்தியத்தால் வெளிநாடுகளிலும் தமிழ் நாட்டு மக்களின்  மானம் போகிறது.
==========================================================================================
இன்று,
மே-14.
  • பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1811)
  • பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்(1796)
  • குவைத் ஐநா.,வில் இணைந்தது(1963)
  • அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப் உருவாக்கப்பட்டது(1973)
==========================================================================================
என் கேள்விக்கு என்ன பதில் ?
ஒரு பெண் டிரைவிங் லைசென்ஸ் வாங்க RTO விடம் சென்றார். RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.
இரண்டாம் முறை சென்ற போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.
மூன்றாம் முறை சென்றார் அப்போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.
நான்காவது முறையும் RTO கேட்ட கேள்விக்கு அந்தப் பெண் சொன்ன பதில் திருப்தியாயில்லை. RTO லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.
அந்தபெண்ணுக்கு இந்தத்தடவை கடுமையான கோபம் வந்து விட்டது. RTO வைப் பார்த்துக் கேட்டார், நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள். நான் சொன்ன நாலு பதில்களையும் தவறென்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும்?
அப்படி அந்த RTO என்ன தான் கேட்டார் அந்தப் பெண் என்ன பதில் சொன்னார். நீங்களே சொல்லுங்கள் நியாயம்
RTO கேட்டார் : "அம்மா நீங்கள் ஹைவேயில் 80 கி மீ வேகத்தில் உங்கள் காரை ஒட்டிக்கொண்டு போகிறீர்கள். திடீரென்று உங்கள் முன்னா்ல் ஒரு கிழவனும் ஒரு இளைஞனும் வேறு வேறு திசையிலிருந்து முன்னால் வந்து விட்டார்கள். வலது பக்கம் பாறை இடது பக்கம் 6 அடி ஆழமான பள்ளம். நீங்கள் என்ன செய்வீர்கள்?"
அந்தபெண் முதல் தடவை சொன்னார் :
பள்ளத்தில் இறக்குவேன் என்று.
இரண்டாவது தடவை சொன்னார் கிழவர் மேல் ஏற்றுவேன் என்று.
மூன்றாவது தடவை சொன்னார் இளைஞன் மேல் ஏற்றுவேன் என்று.
நான்காவது தடவை சொன்னார் பாறை மேல் ஏற்றுவேன் என்று.
RTO கடைசியாகக் கேட்டார் ஏம்மா ஒரு தடவை கூட நான் ப்ரேக் போடுவேன்னு சொல்ல மாட்டீங்களாம்மா?
நான் எப்படிம்மா உங்களுக்கு லைசென்ஸ் தர்றது?
நன்றி:

புதிய தேடல்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?