ஜெயலலிதா காட்டாத சொத்துக்கள்!
ஜெயலலிதாவின் சொத்து... என்றாலே அதில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.
ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கிய ஜெ. தாக்கல் செய்த வேட்புமனுவிலும் வில்லங்கங்கள் இருப்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.அதாவது, ஜெ.ஜெயலலிதா 79,(31-ஏ) போயஸ்கார்டன், கதீட்ரல் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-06 முகவரியிலுள்ள தனிக் கட்டிடத்துக்கு கடந்த 2016 ஏப்ரல் 9-ந் தேதிவரை சொத்துவரி கட்டாமல் வேட்புமனுத் தாக்கலுக்காக அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜெ.ஜெயலலிதா, பொதுச்செயலாளர், அ.தி.மு.க. 424 (614) அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-06 முகவரியில் காலியிடமாக கிடக்கும் நிலமானது (பழைய சஃபையர் தியேட்டர்) ஜெ. பெயரில்தான் உள்ளது.
ஆனால், தனது வேட்புமனுவின் சொத்துப் பட்டியலில் காண்பிக்கவில்லை.
ஒருவேளை அந்தச் சொத்து கட்சிப் பெயரில் உள்ளது என்றால்... ‘ஹாலிடே ஸ்பாட், சசி எண்டர் பிரைசஸ் என நிறுவன பெயர்களை வைத் திருப்பதுபோல கட்சியின் பெயரில் அல்லவா ப்ராப்பர்ட்டி டேக்ஸ் கட்டவேண்டும்? ஆனால், அவரது பெயரில்தான் சென்னை மாநகராட்சிக்கு டேக்ஸ் கட்டிவருகிறார்.
ஜெ.ஜெயலலிதா, 442/18/ஏஎ, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-06 முகவரியிலுள்ள 180 சதுர அடி உள்ள இடத்தில் உரிமையாளர் ஜெயலலிதாவே வியாபாரத்துக்காக பயன்படுத்துவதாக சென்னை மாநகராட்சியின் சொத்துவரி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அட!!! ஜெ. அங்கு அப்படி என்ன வியா பாரம் செய்கிறார் என்று ஸ்பாட்டுக்கு சென்று நோட்டமிட்டால் எண்-18-ல் உள்ள இடத்தில் டீ, காஃபி, பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் பலரும்.
ஆம்... அங்கு எதிரே எண்-40 அஜ்மீர் டீ ஸ்டால் தான் அதை அப்படிப் பயன்படுத்தி வருகிறது.செல்வி ஜெயலலிதா ஜெயராம், 213-இ, செயின்ட் மேரீஸ் சாலை, மந்தவெளிப்பாக்கம், சென்னை-28 முகவரியிலுள்ள கமர்ஷியல் இடத்தில் தான் பெரிய வில்லங்கமே!
1206 சதுர அடி கொண்ட அந்த இடத்தில் 1000 சதுர அடிக்குத்தான் கட்டிடம் கட்டப் பட்டுள்ளதாக வேட்புமனுவில் குறிப் பிட்டுள்ளார் ஜெ.
ஆனால், தரைத்தளம் 750 சதுர அடி, முதல் தளம் 750 சதுர அடி என 1500 சதுர அடிஅளவுக்கு கமர்ஷியல் பில்டிங் கட்டப்பட்டிருப்பதாக அவரே மாநகராட்சிக்கு வரி கட்டிக்கொண்டிருப்பது ஆதாரப்பூர்வமாக உள்ளது.சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி கட்டும்போது அச்சொத்தின் உரிமையாளரின் செல்ஃபோன் நம்பரும் எண்ட்ரி செய்யப்பட்டிருக் கும். அப்படிப் பார்த்தால், 97898 70345 என்ற செல் நம்பரிலிருந்துதான் ஜெ.வின் இரண்டு கட்டடங் களுக்கு சொத்து வரி கட்டப்பட்டுள்ளது.
ஆனால், இதே செல் நம்பரிலிருந்துதான் சென்னை நுங்கம் பாக்கத்திலுள்ள காதர்நவாஸ்கான் சாலையிலுள்ள ஹாலிடே ஸ்பாட் நிறுவனத்துக்கும் வரி கட்டப் பட்டு வருகிறது.
இதே, செல்நம்பரிலிருந்துதான் நுங்கம்பாக்கத்திலுள்ள சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கும் வரி கட்டப்படுகிறது.
இதே... 97898 70345 என்ற எண்ணிலிருந்து தான் சென்னை, மேற்கு மாம்பலம் 41/3-2 ஆர்ய கவுடா சாலையிலுள்ள அயோத்தியா பெனிபிட் ஃபண்ட் நிறுவனத்துக்கும், மேற்கு மாம்பலம் உமாபதி தெருவிலுள்ள 6/எஃப்-1 வீட்டில் வசிக்கும் கே.ஆர். சீனிவாசன், கோடம்பாக்கம் சுப்பராயன் நகர், ஐந்தாவது தெருவில் எண்-39/3 (12/4) வீட்டில் வசிக்கும் எஸ். ஞானவேல், 179, அபிபுல்லா சாலை, தி.நகரிலுள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், 5/7 (4/7) டோமிங் லேன், டோமிங் குப்பம், மைலாப்பூரிலுள்ள சசிகலா நடராஜன், 12, (11/1) இந்திராநகர், 12-வது குறுக்கு சந்து, அடையாறு முகவரியிலுள்ள ஏ. சங்கரன், 98/99/39, லஸ் சர்ச் ரோடு, லஸ், மைலாப்பூரிலுள்ள ஃபீஸ்டா ப்ராப்பர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட் மல்டி ஸ்டோரேஜ் பில்டிங், 12(19), பட்டம்மாள் தெரு, மந்தவெளிப்பாக்கம் முகவரியிலுள்ள ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றுக்கும் சொத்து வரி கட்டப்பட்டு வருகிறது.ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற கம்பெனியை வீட்டில் வைத்திருப்பதாக வீட்டுக்கான வரி கட்டப்பட்டிருக்கிறது.
அதேபோல்தான், ஜெயா பப்ளிகேஷன்ஸும் வீடு என்று குறிப்பிடப்பட்டுள் ளது. எல்லாவற்றுக்கும் ஒரே தொடர்பு எண் என்பதால் 97898 70345 என்ற செல்ஃபோன் நம்பருக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, ""என்னுடைய செல் நம்பரில் கட்டச்சொன்னதால் கட்டினேன்.
அதற்குமேல் விவரங்களை உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை''’என்றது திமிரான குரல்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் நாம் விசாரித்தபோது, ""உண்மையில் வரி கட்டும் சொத்தின் உரிமையாளர் செல்நம்பர்தான் கொடுக் கப்பட வேண்டும்.
ஆனால், சிலர் வரி கட்டும் பொறுப்பை வேறு நபரிடம் ஒப்படைத்து அவர் களின் செல்ஃபோன் நம்பர்களை எண்ட்ரி பண்ணி விடுகிறார்கள்.
இதனால், சொந்த இடம், வாடகை இவற்றுக்கான வரிவிகிதத்தில் மோசடிகளும் நடக்கின்றன.
பலரும் இப்படிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முன்பெல்லாம் மாநகராட்சியின் இணையதளத்தில் ஒருவரது பெயரையும் ஏரியாவையும் எண்ட்ரி பண்ணினாலே அவர் சொத்துவரியை ஒழுங்காக கட்டியிருக்கிறாரா என்பதை கண்டுபிடித்துவிடலாம். ஆனால், தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி மாநகராட்சி கமிஷனராக இருக்கும்போதுதான் பெயரை எண்ட்ரி பண்ணினாலே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வெப்சைட்டில் மறைத்துவைத்து விட்டார்.
அதிலிருந்து ஊடகத்தினர், சமூக ஆர்வலர்கள் கண்டுபிடித்து அம்பலப்படுத்துவது சிரமம்.
அதையும் மீறி, ஜெ-வின் சொத்துவரி விவரங்களை எப்படி கண்டுபிடித்தீர்கள்?’என்று புன்னகைக்கிறார்.
இப்போது ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே .நகர் வேட்பு மனுத்தாக்கலில் மேற்படி சொத்துக்களை காண்பிக்கவில்லையே .தேர்தல் ஆணியம் அவர் மனுவை தள்ளுபடி செய்யுமா?இல்லை வழமை போல் கண்டுகொள்ளாமலே இருந்து விடுமா?
அதற்குள் பழைய தேதியில் விற்றதாக பதிவு செய்து விட மாட்டாரா என்ன?
-மனோ சௌந்தர்,
நன்றி:நக்கீரன்.
========================================================================================
?ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட “தினத்தந்தி” நாளிதழ் தேர்தல் நெருங்க நெருங்க, அ.தி.மு.க. வின் பிரச்சார ஏடாக மாறி வருகிறதே?
! திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் இது போன்ற ஏடுகளின் பிரச்சாரங்களையெல்லாம் கடந்து தான் தனது பயணத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இனியும் தொடரும்.
இந்தச் சலசலப்புகளுக்கெல்லாம் தி.மு.க. கவலைப்படாது.
"தினத்தந்தி”, “தினமணி” போன்ற ஏடுகளின் உரிமையாளர்கள் ஆளுங்கட்சியின் சார்பில் நேரில் கண்டு மிரட்டப்பட்டுள்ளார்களாம்.
“தினமலர்” நாளேட்டையும் அவ்வாறே மிரட்ட முயன்று அவர்கள் அதற்கு மிரளவில்லையாம். “தினத்தந்தி”யைப் பொறுத்தவரையில், “தினத்தந்தி அறக்கட்டளை” மீது அரசு தொடுத்திருந்த ஒரு வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக, அ.தி.மு.க. அரசின் தலைமை வழக்கறிஞரே, நீதி மன்றத்தில் கடிதம் ஒன்றினை, சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த உதவிக்குக் கைமாறாக “தந்தி தொலைக்காட்சி” கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி, அதில் செயற்கையாக அ.தி.மு.க. வுக்கு ஆதரவான நிலை இருப்பதாகக் காட்டி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறதாம்!
அதைப் போலவே “தினமணி” நாளிதழில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்கி பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட “கார்ட்டூன்”களை மீண்டும் வெளியிடுவதாக உறுதி அளிக்கப்பட்டு அவ்வாறே வெளியிடத் தொடங்கியிருக்கிறதாம்!
எடுத்த வாந்தியை மீண்டும் வாயில் போட்டு விழுங்கிட முயற்சிக்கிறார்களாம்.
-கலைஞர்
====================================================================================================
அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு இல்லத்திற்கும் விலையில்லா சீன தயாரிப்பான
LED TV
E BIKE
REFRIGERATOR
WASHING MACHINE
200 UNITS கட்டணமில்லா மின்சாரம்
இன்னும் கனவிலும் நினைத்து பார்கமுடியாத ஏராளமான அறிக்கைகள் வெளியிடப்படலாம் என
========================================================================================