நீங்கள் நம்புவீர்களா?நம்புவீர்களா??
ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ள 100 யூனிட் வரை இலவச மின்சாரம் நம்புகிற மாதிரியா இருக்கிறது.
இப்போதைய தேர்தல் அறிக்கையில் இலவசமாக 100யூனிட் சொல்லுகிறவர் 17-11-2011அன்று சட்டசபையில் மின்கட்டணத்தை எக்கசக்கமாக எற்றி விட்டு அதற்கு அளித்த விளக்கம்.
"தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி ரூபாய் ஆகும். இது கருணாநிதியின் மைனாரிட்டி அரசு வாக்குகளைப் பெற மின்கட்டணத்தை உயர்த்தாமல் செய்த கடன் சுமையாகும்.கருணாநிதியின் நிர்வாக கையாலாகத்தனம் ஆகும்.
இதே நிலைமை நீடித்தால், இந்த நிதி ஆண்டின் இறுதியில் இந்தக் கடன் அளவு 53,000 கோடி ரூபாயை தாண்டிவிடும். மேலும், மின்சாரம் விற்பனை செய்தவர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய தொகை 10,000 கோடி ரூபாய் ஆகும்.
தமிழக அரசின் மொத்த கடன் அளவான 1 லட்சத்து 1 ஆயிரத்து 349 கோடி ரூபாயுடன், மின்சார வாரியத்தின் கடன் அளவான சுமார் 53,000 கோடி ரூபாயை ஒப்பிட்டுப் பார்த்தால், மின் வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெளிவாகும்.
கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாரியம் புதியதாக கடன் வாங்கி, பழைய கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் செலுத்தி வருகிறது. 2
010-2011 ஆம் ஆண்டில் 21,385 கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் பெற்று, 15,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும் செலுத்தியுள்ளது. இவ்வாறு கடனில் மூழ்கி திவாலாகும் நிலையை மின்சார வாரியம் எட்டிவிட்டது.

இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில், மின்சார வாரியம் மேலும் கடன் பெறவேண்டும்.
ஆனால், மதிப்பீட்டு நிறுவனங்கள் மின்சார வாரியத்தின் மதிப்பை குறைத்துவிட்டதால், வெளிச்சந்தையில் இருந்து கடன் பெற வழியில்லை.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்க கூடாது என பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு முழுமைக்கும் வழங்கப்பட வேண்டிய மானியத் தொகையான 2,016 கோடி ரூபாயை முன்னதாகவே அரசு வழங்கியுள்ளது.
மேலும், பங்கு மூலதனம் 1,055 கோடி ரூபாயை அரசு அளித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதற்காக 500 கோடி ரூபாயை அரசு வழங்கி உள்ளது. இதற்கு மேலும் மின்சார வாரியத்திற்கு பணம் அளிக்க மாநில அரசிடம் பணம் இல்லை.
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பும், மின்சார உற்பத்தியை பெருக்க வேண்டிய கடமையும் எனது தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டுள்ளது."
என்றார் ஜெயலலிதா.
அன்று அதாவது 2011ல், ரூ. 53,000 கோடியாக இருந்த மின் வாரியத்தின் கடன் ஜெயலலிதாவின் சிறப்பான நிர்வாகத்தாலும் ,இந்தமூன்று மடங்கு கடுமையான விலையேற்றத்துக்குப் பின்னர் , தற்போது ஐந்தாண்டு கால ஆட்சி முடிவில் கடன் தொகை ரூ . 1,20,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
இந்த கடன் நிலையில் 100 யூனிட் இலவசம் என்பது தமிழ் நாட்டின் மக்கள் மீது செலுத்தப்படும் இன்னொரு மறை முக கட்டண உயர்வுதான்.
100யூனிட் வரை இலவசம் அதற்கு மேல் செலவிட்டால் யூனிட் 10 ரூபாய்க்கும் மேல்.ஆனால் இங்கு இரு மாதங்களுக்கும் சேர்த்து 100யூனிட்டுக்கு குறைவாக யாரும் பயன் படுத்தவில்லை.
அதானால் முதலில் பயன் படுத்தும் 100 யூனிட்டுக்கும் காசு நாம் கட்டியாகத்தான் வேண்டும்.நீங்கள் 102 யூனிட் செலவிட்டிருந்தால் 100யூனிட் கழித்து 2 யூனிட்டுக்கு மட்டும் கட்ட முடியாது.102யூனிட்டுக்கான விலை கூடிய கட்டணத்தைதான் கட்ட வேண்டும் .
ஆக 100யூனிட் மின் இலவசம் உங்களை பல்ப் வாங்கத்தான் வைக்கும்.
இதை நீங்கள் நம்புகிறீர்களா?
மகளிர்களுக்கு மட்டும் மானியம்,தாலிக்கு தங்கம்,திருமண உதவித்தொகை,பேறுகால உதவித்தொகை.அதல்லாம் இருக்கட்டும் ஆண்கள் பைக் வாங்க ஏன் மானியம் வழங்கப்படவில்லை?
இந்த மானியமும் உங்களுக்கு தாராளமாக கமிசன் வழங்கிய நிறுவன ஸ்கூட்டர்கள் மட்டும்தானே வாங்க வேண்டும் .
கே.ந.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தொகுதி.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொகுதி.