ரிசர்வ் வங்கி கவர்னர் தான் பதில் சொல்ல வேண்டும்



இன்றைய பரபர 570 கோடிகள் மூன்று கண்டெய்னரில் பிடிபட்டதுதான்.

பணம் கொண்டு செல்வதை தேர்தல் பறக்கும் படையினர் கண்கொத்திப்பாம்பாக கண்கானிக்கும் காலம் ஏனோதானோ என்று ரிசர்வங்கி ஆணைப்படி எந்த வங்கியாவது இப்படி பாதுகாப்பு இல்லாமல் அசல் ஆவனங்கள் இல்லாமல் கொண்டு போவது நம்பும்படியாக இல்லை.

மேலும் 570 கோடிகள் மூன்று கண்டெய்னர்களில் பிடிபட்டதும் அதற்கு பதறியடித்து எந்த வங்கியும் வராமல் சகவாசமாக அசைந்தாடி இரவு வந்து உரிமை கொண்டாடுவது சற்று இடிக்கிறது.

வங்கி பண பரிமாற்ற நடவடிக்கைகள் பற்றிய விபரம்,நடைமுறைகள் அறிவோம். 
ஒவ்வொரு வங்கிக்குமே, காஷ் ஹோல்டிங் லிமிட் இருக்கிறது. 

அதாவது, இவ்வளவுதான் பணத்தை வால்டில் வைத்துக்கொள்ளலாம் என்று விதி இருக்கிறது. இதை பெரும்பாலும், வங்கிகள் தாண்ட முயற்சிக்காது. 

காரணம், இதன் மேல் வங்கிகளின், தலைமையகம், ட்ரான்ஸ்ஃபர் ப்ரைசிங் எனப்படும் ஒரு நட்டத்தை தலையில் கட்டும். அதாவது, புழக்கத்திலில்லாத, வால்டில் இருக்கும் பணம் என்பது, உபயோகமற்றது. இது கடனாகவோ, அல்லது சுழற்சியிலேயே இருக்க வேண்டும் என்பது தான் இதன் பிசினெஸ் லாஜிக். அப்படியானால், இந்த பணத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். 
இடமாற்றம் செய்யாத ஒவ்வொரு நாளும் நட்டம்தான்.

உபரி பணத்தை என்ன செய்வது? 

மற்ற வங்கிகள்....ரிசர்வ் வங்கி அல்லது, ஸ்டேட் வங்கி லாக்கரில் கொண்டு செலுத்தும். அதேபோல், ஸ்டேட் வங்கி.. கரென்சி செஸ்ட், அதாவது, பணத்தை வைக்கும் ஸ்டராங்ரூமில் செலுத்தும். இது பெரும்பாலும், ஸ்டேட்வங்கிக்குள்ளே இருக்கும். 

இருந்தாலுமே, இந்த பணம், ரிசர்வ் வங்கியின் பணமாய் கருத்தப்படும். இதில்... ஸ்டேட் வங்கி செலுத்தும் பணத்துக்கு, அதன் சென்னை ரிசர்வ் வங்கி அக்கௌண்டில் க்ரெடிட் வந்துவிடும்.
ஏடிஎம் மற்றும், மற்ற வங்கிகள், பணம் எடுத்துக்கொண்டது போக, இந்த கரென்சி செஸ்ட்டுக்குமே, ஒரு லிமிட் உண்டு. 

இதை தாண்டினால், ரிசர்வ் வங்கி, குச்சி எடுத்து சாத்த ஆரம்பிக்கும். அதனால், ரிசர்வ் வங்கியே, தனி போலிஸ் படையோடு, ரயிலோ, அல்லது காஷ் கொண்டு செல்லும் கேஷ் வேன்களை, உபயோக்கிக்கும். இதில், துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் மற்றும் ஒரு போலீஸ் டீமே இருக்கும். 

இதற்காக, ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை. இதைத்தவிர, ரிசர்வ் வங்கி ஆசாமியோ, ஸ்டேட் வங்கி காசாளர் ஒருவரோ, பணத்தோடு, கண்டிப்பாக பயணிக்க வேண்டும். (இப்படி நான் கூட பயணித்து இருக்கிறேன்).
இதை தாண்டி.. ட்ரைவரை நம்பி, அல்லது, மூன்றாவது ஏஜென்சிகளை (செக்யூரிட்டி ஏஜென்சீஸ்) நம்பி பணம் கொடுத்தாலும், போலீஸ் அல்லது துப்பாக்கி ஏந்திய காவலாளி கண்டிப்பாய் இருக்க வேண்டும். 
இதற்கு 100 சதம் இன்சியுரன்ஸ் செய்து இருக்கிறார்களா என்பது அடுத்த கோணம். 
இதற்கும் லிமிட் உண்டு. 570 கோடியெல்லாம் சான்ஸே இல்லை.
இப்படி அடிப்படை விதிகளை, எதையுமே கடைப்பிடிக்காமல், ..பணம் கொண்டு சென்ற கண்டைனர்கள் வங்கியுடையது என்பதை, சுத்தமாய் நம்ப முடியவில்லை. 

அப்படி அனுப்பிய வங்கி மேலாளர், கேள்வி கேட்காமல் வீட்டுக்குத்தான் அனுப்பப்படுவார். 

அதைவிட, இவர்களை நம்பி போட்ட நம் பணத்தை இப்படித்தான் கையாள்வார்களா? 

எளிதாய், இது வேறு ஏதோ ஒருவருடைய.அல்லது அவருடைய கழகத்தின் பணமாகத் தான்  இருக்க வேண்டும் என்று எண்ணத்தான் தோன்றுகிறது. 

உண்மை அப்படித்தான் இருக்கலாம். இருக்க முடியும்.

காரணம் வங்க்கிப்பந்த்தைக் கொண்டு செல்வதில் இத்தனை விதிமீறல்கள் இருக்க சான்ஸே இல்லை. தங்கள் பணம் என்று ஒப்புக்கொள்ள இவ்வளவு காலதாமதம் இருக்க முடியாது.அசல் ஆவணங்கள் ,சீருடை காவலர்கள் இல்லாமல் இராது.

அதுவும் வழியெங்கும் தேர்தல் பறக்கும் படையினர் ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட  பணங்களை  சரியான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு போனால் கைப்பற்றி வருவது  நடைமுறையில் இருக்கும் காலம் இப்படி ஏமாற்றுவது போல் வங்கியினர் நடந்து கொள்வார்களா என்ன?

570 கோடி என்பது ஒரு கரென்சி வால்டின் பணமாய் இருக்க முடியாது. 

அருண் ஜெயிட்லீ.. ரிசர்வ் வங்கி கவர்னர் தான் பதில் சொல்ல வேண்டும்.

 முகனூலில் -
Prakash Ramaswami.
எங்கயோ இடிக்குதே...

1000 ரூ நோட்டு 100கட்டு பண்டல் ஒருகோடி ரூவா மதிப்பு..

ஒரு கோடிரூவா பண்டலோட வெயிட்டு 12கிலோ..

12கிலோவ பண்டலா கட்டுனா 200 கியூபிக் சென்டிமீட்டர் அதாவது நீளத்துல அகலத்துல உயரத்துல 200 செமி அளவுள்ள பாக்ஸ் சைஸ் இடம் வேணும்.

அப்டி பாத்தா 570 கோடிக்கு ஆறரை டன்னு வெயிட்டுதான் சாதாரண டாடா ஏஸ் டைப் செக்யூரிட்டி வேன் மூணு இருந்தாலே போதும்...


ஒரு 20 ஃபீட் கண்டெய்னர்ல 32 க்யூபிக் மீட்டர் ஸ்பேஸ்ல கொறைஞ்சது 1700 கோடிரூவா லோட் பன்ன முடியும்...


அப்ப மூணு கண்டெய்னருக்கும் கொறைஞ்சது 5000 கோடி கேஸா லோட் பன்னலாம்....

ஆனா 570 கோடிதான் கணக்கு வருது ...

எங்கயோ இடிக்குதே...

 முகனூலில் -- Raja M Raja.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில்  கலைஞருக்கு முகநூலில் எழுத தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம் !
14வயதுகளில் மாணவநேசன் கையெழுத்து பத்திரிகையில் எழுதியபோது தடை
முரசொலியில் எழுதியகாலத்தில் எழுத தடை !

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது எழுத தடை
எமர்ஜென்சியை எதிர்த்த எழுத தடை
மீண்டும் 70வயதில் முரசொலியில் எழுதிய காலத்திலும் தடை
இதோ 92வயதில் பேஸ்புக்கில் போஸ்ட் போட தடை !!!
ஒரு சமுக போராளியாக இருப்பதால்தான்  இத்தனை தடைகளும் தொடர்ந்து வருகின்றன.
தனது வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே தனது போராட்ட குணத்தை இழக்காமல் இந்திய,தமிழக அரசியல் சக்கரத்தின் மைய அச்சாகவே திகழ்கிறார் என்றால் அது நம் கலைஞர்  மட்டும் தான் !


=======================================================================================================
இன்று,

மே-16.

  • சிக்கிம், இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது(1975)
  • ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்(1975)

  • ========================================================================================================





    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    2025ல் தங்கம் விலை

    வினேஷ் போகத் வென்றார்!

    முடிவுக்கு வருகிறதா?