கருத்துகளும் , கணிப்புகளும் வெற்றி தருமா?

இதுவரை நியூஸ் 7 தொலைக்காட்சியுடன், தினமலர் நாளிதழ் நடத்திய பிரமாண்டமான கருத்துக் கணிப்பின் ஒட்டு மொத்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் சென்னை என 5 மண்டலங்களாக பிரித்து கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு மண்டலத்திற்கான கருத்துக் கணிப்பின் முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. 


மொத்தமுள்ள 57 தொகுதிகளில், திமுக கூட்டணி 33 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாகவும், மீதமுள்ள 24 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்தது. 

இதனை அடுத்து, 57 தொகுதிகளைக் கொண்ட தெற்கு மண்டலத்தின் முடிவுகள் செவ்வாயன்று வெளியிடப்பட்டன. இதில், 30 தொகுதிகளை திமுக கூட்டணியும், 24 தொகுதிகளை அதிமுக கூட்டணியும், 6 கட்சிகள் இணைந்த பெரிய கூட்டணியான தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தையும், பாஜக ஒரு இடத்தையும் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 
தெற்கு தொகுதியில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

41 தொகுதிகளை கொண்ட கிழக்கு மண்டலத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகள் புதன் கிழமை வெளியானது. அதிகபட்சமாக 30 தொகுதிகளை திமுக கூட்டணி சுவீகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

மீதமுள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 9 தொகுதிகளையும், பாட்டாளி மக்கள் கட்சி 2 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளன. 

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 41 தொகுதிகளை கொண்ட வடக்கு மண்டலத்தில் 31 தொகுதிகளை திமுக கூட்டணியும், 10 தொகுதிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளன. 

இறுதியாக, இன்று வெளியிடப்பட்ட 37 தொகுதிகளை கொண்ட சென்னை  மண்டலத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகளில் அதிகபட்சமாக அதிமுக கூட்டணி 20 தொகுதிகளையும், திமுக 16 கூட்டணி தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

சென்னை மண்டலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் இழுபறி நீடிக்க வாய்ப்புள்ளதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை. 

நியூஸ்7, தினமலர் நடத்திய பிரமாண்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி, 141 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளது. 

அதிமுக கூட்டணி 87 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியிலும், பாஜக 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. 

2 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கிறது.

இவை கருத்துக்கணிப்பு வெளியிட்டவர்களின் செய்தி என்றாலும் ஒட்டு மொத்த தமிழகத்தின் வாக்குகள் திமுக க்கு அதிகமாக கிடைத்திருக்க  சென்னை மாநகர் மட்டும் அதிமுகவை  முன்னாள் நிறுத்தியுள்ளது.
சென்னையில் 2 தொகுதிகள் மட்டுமே திமுகவுக்கு என்கிறது கணிப்பு.மீதி 14 அதிமுகவுக்காம்.
சென்னை மக்கள்தான் மழை வெள்ளம் பாதிப்பால் மிகவும் இந்த ஆட்சி மீது கோபத்தை வைத்திருக்கையில்,வாக்கு கேட்டு வரும் அதிமுக வேட்பாளர்கள் மக்களால் கேள்விகள் கேட்டு விரட்டப்படுவதாக செய்திகள் வருகையில் எப்படி?

இதுபோன்ற கெள்விகள் எழுவதை தடுக்க முடியவில்லை.

இது போன்ற கணிப்புகள் துல்லியமாக அப்படியே நடப்பதில்லை.பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காசுக்கு வாங்கப்பட்டகருத்து திணிப்புகள் என்பது இந்திய அளவிலேயே பகிரங்க்கப்பட்டுள்ளது.

அப்படி இருக்கையில் இந்த தினமலர்-நியூஸ் 7 கருத்துக்கணிப்பு இவ்வளவு  பாதிப்பை மக்களிடமும்,அனைத்துக்கட்சிகளிடமும் உண்டாகக் காரணம்.

அக்கணிப்பை நடத்திய முறையாக  அவர்கள் வெளியிட்ட செய்திகள்,காணொளிகள் .அது ஓரளவு நமபகத்தன்மையை உண்டாக்கியுள்ளது.

சென்னை மாறிட  காரணமாக நாம் கருத இரண்டு செய்திகள் வழி செய்தன.

கருத்துக்கணிப்பு வெளியானதும் அதிமுக தரப்பு கோபமடைந்து நியூஸ் 7 செய்தியாளர்களை சென்னையில் ஆங்காங்கே  தாக்கியது.

உச்சமாக அதிமுக தலையிடத்துக்கு செய்தி சேகரிக்க வந்தவர்களை சரமாரியாக திட்டி கணிப்பை சரியாக ? வெளியிடாவிட்டால் நியூஸ் 7 அலுவலகத்தை கொளுத்தப்போவதாக காவல்துறையினர் பாதுகாப்பில் வீரசபதம் எடுத்தது ஒன்று .
மற்றொன்று கருத்துக்கணிப்பை நடத்தவிடாமல் சென்னையில் ஆங்காங்கே அதிமுகவினர் களப்பணியாளர்களை மிரட்டி கணிப்பு தாட்களை தாங்கள்தான் நிரப்பித்தருவதாக கூறி பிடுங்கியதாக செய்தியாளர் கூறியது.

ஆக இடையி எதுவும்  நடந்து கணிப்பின் திசையை மாற்றியிருக்கலாம்.அதிகாரம் அதிமுகவினர் கையில்.

கணிப்புகள் அவ்வாறிருந்தாலும் அதையே முழுவதுமாக நம்பிக்கொண்டு தேர்தல் பணிகளை முடக்கி விட்டு வெற்றிக்களிப்பில் இருந்தால் கணிப்புகள் முற்றிலும் மாறிவிடும் வாய்ப்புண்டு.

வாக்களிக்கும் நொடி வரை வாக்காளர் மனதை மாற்றிடும் நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு.
அவர்களின் கோபத்தை இலவசங்கள்,ஆயிரங்கள் தணித்து மாட்டை மாற்றிவிடவும் வாய்ப்புகள் உள்ளது.

எனவே யாராயிருந்தாலும் தங்களுக்கு சார்பான  கருத்துக்கணிப்புகளை தங்கள் தேர்தல் களப்பணிக்கு தெம்பூட்டும் ஊக்கமாகக் கொண்டு உழைத்தால்தான் அக்கருத்துக் கணிப்புகளையும் தாண்டி வெற்றிகளை குவிக்க முடியும் .

இல்லையெனில் ஆமை-முயல் ஓட்டப் பந்தயக்  கதையை ஒண்ணாம் வகுப்பில் படித்திருப்பீர்கள்தானே .அதை நினைவுக்கு கொண்டுவாருங்கள்.

======================================================================================
இன்று,
மே-07.
கால்டுவெல்  பிறந்தநாள் 7 - 5 - 1814 .

  • உலக ஆஸ்துமா நோய் தினம்
  • நார்வே தேசிய தினம்
  • சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் இறந்த தினம்(1539)
  • ஐரோப்பிய அமைப்பு உருவாக்கப்பட்டது(1948)

 மாமனிதனின் கால்டுவெல்  பிறந்தநாள் 

தென்னிந்தியாவில் நெடுங்காலமாக இருந்து வரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துலு ஆகிய ஐந்து மொழிகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்றும், அவற்றுள் ஆகப் பழமை வாய்ந்தது தமிழ் மொழியே என்றும் ஆதாரங்களுடன் விளக்கி அவற்றை 'திராவிட மொழிகள்' என்றழைத்தார் கால்டுவெல்.
கால்டுவெல் தமிழையும், டாக்டர். குந்தார்கர் என்பவர் மலையாளத்தையும், டாக்டர். கிட்டெல் என்பவர் கன்னடத்தையும், அறிஞர் பிரெவ்ன் என்பவர் தெலுங்கையும் ஆராய்ந்தனர். 
அந்த ஆராய்ச்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து 'A comparative grammar of the dravidian languages' அதாவது 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை எழுதினார் கால்டுவெல்.
அந்த நூல்தான் ஆரிய மொழியின் இலக்கணம் வேறு திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு என்பதை ஆதாரங்களுடன் உலகுக்கு உணர்த்தியது.

தமிழர்கள்கூட செய்யாத அந்த அறிய பணியை மேலை நாட்டவரான கால்டுவெல் செய்ததை தமிழ் வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும். 

சுருக்கமாக சொன்னால் திராவிட மொழிகளுக்கு புத்துயிர் அளித்தவர் கால்டுவெல். இன்று தென்னிந்திய பல்கலைக் கழகங்களில் திராவிட மொழிகள் பற்றிய துறை சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் கால்டுவெல்தான்.

தமிழ்நாட்டில் அவர் வசித்த 53 ஆண்டுகளில் அவர் மூன்றே மூன்று முறைதான் தாம் பிறந்த ஊருக்கு ஓய்வெடுக்க சென்றார். 
அந்தளவுக்கு அவர் தமிழ்நாட்டையும் தமிழையும் நேசித்தார். 

ஒரு மேலை நாட்டவரால் மேன்மை அடைந்தது தமிழ் மொழி என்று சொல்லுமளவுக்கு வாழ்ந்து காட்டிய கால்டுவெல் கொடைக்கானல் மலையில் இருந்தபோது 1891-ஆம் ஆண்டு தனது 77-ஆவது அகவையில் காலமானார். 

அவர் சுவாசித்த தமிழும். நேசித்த இடையன்குடியும் இன்றுவரை அவரை மறக்கவில்லை. 

அவரது நல்லுடல் இடையன்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் கட்டியிருந்த கோவிலிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
இன்று நம் மொழிக்கு அளப்பறிய சேவை செய்த கால்டுவெல்  பிறந்தநாள் ( 7 - 5 - 1814 ) 

======================================================================================
                                             அதிமுகவின் ஆடித் தேர்தல் தள்ளுபடி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?