100% நேர்மையான தேர்தல் ?
100% வாக்குப்பதிவை நோக்கி தேர்தல் ஆணையம் சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் 100% நேர்மையான தேர்தல் என்பதுதான் இன்றைய தமிழ் நாடு தேர்தல் ஆணையத்துக்கு தேவையான் இலக்கு.
தமிழம் முழுக்க அதிமுகவினர் தேர்தல் ஆணையம்-பறக்கும் படை-காவல் துறையினர் கூட்டனியில் செய்துவரும் அடாவடி தேர்தல் பணிகள் பதைபதைக்க வைக்கிறது.
மக்களை லாரி போன்ற சரக்கு வாகனங்களில் மொத்தமாக கூட்டி வரக் கூடாது.கோடை வெயிலி பிரச்சாரம் செய்யக் கூடாது,கூட்டத்துகு வந்தவர்களுக்கு பணம் பட்டு வாடா செய்யக் கூடாது பொன்றவை ராஜேஷ் லக்காணி அடிக்கடி கூறும் வார்த்தைகள்.
ஆனால் ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டங்கள் மண்டையை பிளக்கும் வெயிலில்தான் நடக்கின்றன.லாரிகள்,மீன்பாடி வண்டிகளில் கொத்துக் கொத்தாக மக்கள் அள்ளி வந்து கொட்டப்படுகிறார்கள்.
அங்கு ஆண்களுக்கு சரக்கும்,பிரியாணி பொட்டலமும் ,பணமும் பெண்களுக்கு சரக்கிலாமல் மற்றவையும் தரப்படுகிறது.,
அங்கு பாதுகாப்பு என்ற பெயரில் குவிக்கப்பட்ட காவல் துறையினர்தான் தண்ணீர் பாக்கெட் ,இரட்டை இலை விசிறி-தொப்பி ஆகியவற்றை கூட்டத்துக்கு கொண்டு வரப்பட்டவர்களுக்கு கொடுக்கிறார்கள்.
4000 காவல்துறையினர் ஜெயலலிதா கூட்டத்துக்கு குவிக்கப்பட்டுள்ளநிலையில் ,கருணாநிதி,ஸ்டாலின் கூட்டங்க்கலில் 10 காவலர்கள் தலையைப் பார்த்தாலே அதிகம்.
உச்சக் கட்டமாக ஜெயலலிதாவின் அனல் பறக்கும் வெயில் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டவர்களில் இதுவரை அதிகாரப் பூர்வமாக 6 பேர்கள் வெயில் தாக்குதலில் (சன்ஸ்ற்றொக்) இறந்து உள்ளார்கள்.
அது தொடர்பாக தேர்தல் ஆணியம் எடுத்த நடவடிக்கை ?.0.
கடைசி யில் மனித உரிமை ஆணையம் கதவை தட்டியதால் விசாரணை ஆரம்பித்துள்ளது.
இந்த ஆறு நபர்கள் பிரேத பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்த்தும்,பிரியாணி தின்றதும் தெரியவந்ததுடன் வெயிலின் தாக்கத்தால்தான் இறந்தார்கள் என்றும் அறிக்கை வந்துள்ளது.
இதை மனித உரிமை ஆணையத்திடம் ஒப்படைத்தால் நிச்சயம் ஆபத்து என்பதால் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தேர்தல் ஆணைய ஒத்துழைப்புடன் பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுதிட முயற்சி நடக்கிறது.ஆனால் இதுவரை மருத்துவர்கள் மறுத்து வருவதாக தெரிகிறது.
எதிர்க்கட்சிகள் மறு பிரோத பரிசோதனைக்கு வேண்டுகோள் வைத்து அதனால் தாங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பயத்தை வெளியிட்டு வருகிறார்களாம்.
அதை விடுங்கள் ஜெயலலிதா கூட்டத்துக்கான பணப்பட்டுவாடா பற்றி பல படங்களுடன் ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகியும் இதுவரை லக்கானி தனது லக்கானை அது தொடர்பாக இறுக்கி பிடித்து விசாரிக்காதது ஏன்?என்றுதான் தெரியவில்லை.பிரவின் குமாருக்கு எந்த விதத்திலும் ஜெயலலிதா விசுவாசத்தில் ராஜேஷ் லக்கானி குறைந்தவரில்லை என்பதுதான் இத்தேர்தல் குறிப்பிடும் செய்தி.
நேர்மையான தேர்தலை நடத்த எண்ணும் இந்திய தேர்தல் ஆணையம் மாநில முதல்வர் ஜெயலலிதா அனுப்பும் மூவர் பட்டியலில் இருந்து ஒருவரை மாநில தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுப்பது எப்படி சரியாக இருக்கும்.?
ஜாலராக் களைத்தவைர பிறருக்கு அப்பட்டியலில் இடம் இருக்குமா?
சகாயம் போன்றோர் பெயர் இடம் பெறுமா ஏன்ன?
தங்களிடம் உள்ள இ.ஆ.ப.க்கள் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க முடியாதா?அல்லது அந்தந்த மாநில அனைத்துக்கட்சிகளின் பரிந்துரையையும் பெற்று பட்டியல் அனுப்ப சொல்லலாமே.
சரி.
இனி ராஜேஷ் லக்கானி தலைமையில் 100% நேர்மையற்ற தேர்தல் தமிழ் நாட்டில் நடக்கும் விபரங்கள் பற்றிய ஊடக செய்திகளின் தொகுப்பை பார்ப்போம்.
தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாக சென்று கொடுக்க வேண்டிய பூத் சிலிப்பை, தேர்தல் ஊழியர்களிடம் இருந்து பறித்து அதிமுகவினரே விநியோகிக்கிறார்கள்.
இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் கூற முடியாமல் அரசு ஊழியர்கள் புலம்புகிறார்கள்.தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வைத்தே ஓட்டளிக்க முடியும். அல்லது தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கும் பூத் சிலிப்பை காட்டியும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கும் பூத் சிலிப்பில், எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழு தகவல்களும் இடம் பெற்றிருக்கிறது.
மேலும், அரசியல் கட்சிகள் சார்பில் பூத் சிலிப் வழங்குவதை தவிர்க்க வேண்டும், அரசியல் கட்சி சின்னத்துடன் பூத் சிலிப் வழங்கினால் பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மூலம் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவரிடம் பூத் சிலிப் வழங்கியவுடன், அதை பெற்றுக்கொண்டதாக ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றும், வீடு பூட்டி இருந்தால் பக்கத்தில் உள்ளவர்களிடம் கொடுக்க கூடாது என்றும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் பூத் சிலிப் கொடுத்தால், பூத் சிலிப் கொடுக்கும் சாக்கில் வீடு வீடாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகார் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்கி வருகிறது.இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிமுகவினர்,
அரசு அதிகாரிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பூத் சிலிப்பை பிடுங்கி, அவர்களே விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பூத் சிலிப்பை கொடுக்க மறுக்கும் ஊழியர்களை ஆளுங்கட்சியினர் போலீசார் உதவியுடன் மிரட்டி பறித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி பூத் சிலிப் விநியோகம் செய்யும் அரசு ஊழியர்கள் கூறும்போது, “ஆளுங்கட்சியினர் எங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பூத் சிலிப்பை பிடுங்கி அவர்களே விநியோகம் செய்கிறார்கள். இப்படி விநியோகம் செய்யும்போது நாங்கள் அவர்களுடன் செல்ல அனுமதி அளிப்பதில்லை.
ஆனால் தேர்தல் ஆணையம் எங்களை மட்டுமே இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதுபற்றி எங்களது உயர் அதிகாரிகளிடம் சொன்னாலும் கண்டுகொள்ளவில்லை.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாமல் பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும்” என்றனர்அதேநேரம் ஒரு சில இடங்களில் தேர்தல் அலுவலர்களே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுகவினர் மூலம் பூத் சிலிப் வழங்க உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் போது, அதிமுகவினர் திட்டமிட்டபடி பணப்பட்டுவாடா வேலையை காட்ட துவங்கி விட்டனர். 3 அமைச்சர்கள் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததை எதிர்கட்சியினர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
சென்னையில் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் மகளையும், பணம் பெற முயன்றவரையும் போலீசார் சுற்றி வளைத்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு ஆயுதங்களுடன் புகுந்த ஆளும்கட்சியினர், போலீசை தாக்கிவிட்டு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் அதிமுக பிரமுகர் மகளையும், பணம் பெற முயன்ற பெண்ணையும் கடத்தி சென்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்த பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பறக்கும் படையினரின் சோதனையில் அதிமுக பிரமுகர்கள், அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்து சிக்கி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கரூரில் அதிமுக அமைச்சருக்கு நெருக்கமான அன்புநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து கோடி கோடியாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பல இடங்களில் அமைச்சர்களை பொதுமக்கள்
ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டிவிரட்டி அடிக்கின்றனர்.
அதிமுக எதிர்ப்பு அலைகள் தமிழகம் முழுவதும் வீசுவதால் எப்படியாவது பண விநியோகம் செய்து வாக்காளர்களை கவர வேண்டும் என அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 3 அமைச்சர்களின் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட டி.பி. சத்திரம் ஜோதியம்மாள் நகர் 23வது குறுக்குத் தெருவில் அதிமுக வேட்பாளரும், கைத்தறித்துறை அமைச்சருமான கோகுல இந்திராவுக்கு ஆதரவாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக டி.பி சத்திரம் திமுக வட்ட செயலாளர் கு.பாபுவுக்கு (102வது வட்டம்) தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் விரைந்தார்.
அங்கு முன்னாள் அதிமுக வட்ட செயலாளர் குப்புசாமியின் மகள் செல்வி என்பவர், அதே பகுதியை சேர்ந்த வெள்ளச்சி என்பவருக்கு ஒரு கவரில் 500 ரூபாய் போட்டு கொடுப்பதை கண்டார்.
உடனடியாக இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் பாபுவுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
அவர், டி.பி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று, செல்வியையும், வெள்ளச்சியையும் சுற்றி வளைத்தனர்.
பின்னர், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
உருட்டுகட்டையுடன் அதிமுக.வினர்: இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்வது குறித்து இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது கார், பைக்குகளில் 30க்கும் மேற்பட்ட அதிமுகவினர் உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல் நிலையத்துக்குள் அதிரடியாக புகுந்தனர்.
அங்கிருந்தவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினர். பின் இன்ஸ்பெக்டர் விசாரித்துக்கொண்டு இருந்த செல்வியையும், வெள்ளச்சியையும் கடத்தி சென்றனர்.
புகார் கொடுத்த பாபுவை அடிக்க பாய்ந்தனர்.
அவர் அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர், இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார்.
இருப்பினும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தி செல்பவர்களை பிடிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தனர்.
தகவல் அறிந்து திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் டி.பி.சத்திரம் காவல் நிலையம் முன் திரண்டு முற்றுகையிட்டனர்.
ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபுவை தாக்க முயன்றவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
ஆனாலும், போலீசார் இதை கண்டும் காணாமலும் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து டி.பி சத்திரம் ெமயின் ரோட்டில் திமுகவினர் சாலை மறியல் செய்தனர். அதன்பிறகே போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
ஆனாலும், நேற்று நள்ளிரவு வரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மகளிர் குழுவினர் மூலம்: மதுரை கூடல்நகர் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மகளிரணி வளர் இளம்பெண்கள் பாசறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
அதிமுக கவுன்சிலர் கேசவ பாண்டியம்மாள் ஏற்பாட்டில் நடந்த இக்கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை போன்றவைகளை பெற்று கொண்டு டோக்கன் வழங்கி பணம் கொடுக்க முடிவு செய்தனர். அதிமுகவிற்கு வாக்களித்தால் செல்போன், பணம் தருவதாக கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்திற்கு தேர்தல் ஆணைய அனுமதி பெறாமல், தேர்தல் விதிமுறைகளை மீறி நடத்துவதாக திமுக வட்ட செயலாளர் முத்துபோர்க்கினியன் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். நடவடிக்கை எடுக்க மறுத்த தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கும்படி கூறினர். கூடல்நகர் போலீசில் அவர் புகார் செய்தார்.
போலீசாரும் உடனடியாக அங்கு வரவில்லை. இதனால் மீண்டும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தார். வேறு வழியில்லாமல் தேர்தல் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
தேர்தல் அதிகாரிகளை கண்டதும் கூட்டத்தை பாதியில் நிறுத்தி அதிமுகவினர், பெண்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
நத்தம் தொகுதியில்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அமைச்சர் நத்தம் விஸ்வாதன் போட்டியிடுகிறார். நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டியைச் ேசர்ந்த சுரேஷ் (23), அவரது நண்பர்கள் 2 பேர் நேற்று காலை கன்னிவாடி அருகேயுள்ள நவாப்பட்டி கிராமத்துக்குச் சென்றனர்.
அங்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தனர். இதுபற்றி திமுகவினர் அறிந்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். பறக்கும்படை அதிகாரி மேகலாதேவி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தார்.
பின்னர் 3 பேரையும் கன்னிவாடி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். ஆனால், போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் பெயரளவுக்கு விசாரணை செய்துவிட்டு இவர்கள் மூவரையும் அனுப்பி வைத்தனர்.
குடங்கள், பரிசு பொருட்கள் மூட்டை, மூட்டையாக பறிமுதல்ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த குடங்கள் மற்றும் பாக்ஸ் பரிசு பொருட்களை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
சென்னை ராயபுரம் கிழக்கு கல்லறை சாலையில் உள்ள ஒரு கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில், மூட்டை, மூட்டையாக பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் கிப்ட் பாக்ஸ்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் பதுக்கி வைத்திருப்பதாக காங்கிரசாருக்கு தகவல் கிடைத்தது. முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ரூப்சந்தர் ராயபுரம் தேர்தல் அதிகாரிக்கு இது பற்றி புகார் அளித்தார்.
புகாரின் பேரில், பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தபோது அங்கு 100 கணக்கான குடங்கள், கிப்ட் பாக்ஸ்கள் மூட்டை, மூட்டையாக இருப்பதை கண்டனர். அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன் (56). இவர் சூலூர் அதிமுக வேட்பாளர் கனகராஜுடன் கருமத்தம்பட்டி பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு வாகராயம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தலைக்கு 100 வீதம் 25 பேருக்கு பெட்ரோல் விநியோகிக்க டோக்கன் வழங்கப்பட்டது.
இதுபற்றி பறக்கும் படை அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின்பேரில், கருமத்தம்பட்டி போலீசார், தெப்பீஸ்வரன் மீது 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். -
இன்று,
மே-10.
- சிப்பாய் கலகம் துவங்கியது(1857)
- நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்(1994)
- அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது(1908)
- ருமேனியா, துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்றது(1877)
அவை, மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பால் ஆனவை;
இது, இந்து மற்றும் முஸ்லிம் மதத்திற்கு எதிரானது என, இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்த மறுத்தனர்.
இதனால், ஆங்கிலேய உயர் ராணுவ அதிகாரிகளுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே போராட்டம் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக, 1857, மார்ச் 29ம் தேதி, மங்கள் பாண்டே என்ற இந்திய வீரர், பாரக்பூரில், ஒரு ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொன்றார்.
இது, கிளர்ச்சியை மேலும் துாண்டியது.
இதையடுத்து போராட்டம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டில்லி உட்பட, இந்தியாவின் பல இடங்களிலும் பரவியது.
உ.பி., மாநிலத்தில் உள்ள மீரட் என்ற இடத்தில் தோன்றிய கிளர்ச்சி, ஆங்கிலேயரை அச்சுறுத்தியது; அதைத் தான், இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என, வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கின்றனர்;
=======================================================================================