வெள்ளி, 20 ஜூலை, 2012

அரசியல் வாக்குகள்....

வாக்களிக்கத்தெரியாதவர்களா? 
நம் அரசியல்வாதிகள்.
முன்னாள் முதல்வர்கள்.
முலாயம் முதல் முறை வாக்களித்தது தவறு என்பது சும்மா பொய்.அவர் வேண்டும் என்றேதான்  தனது வாக்கு செல்லாமல் போக வேண்டும் என்று இவ்வாறு செய்திருக்கிறார்.தனது வாக்கு யாருக்கு எனத்தெரிந்தும் தவறாக வாக்களிக்க காரணம் என்னவாயிருக்கும்/
சுரன்

தன்மீதான சிபிஐ குற்ற சாட்டுக்குப்பயந்தேதான் பிரணாப்புக்கு வாக்களிக்க முலாயமும்,மாயாவதியும் முன் வந்தார்கள்.
ஆனால் உள்மனதில் வேறு திட்டத்துடன்தான்  தனது வாக்கு தவறியதாக குழப்பியுள்ளார்.இதன் மூலம் தனது வாக்கு செல்லாமல் போய் விடும் என்பது தெரியாதவர் அல்லமுலாயம்.
இது வாக்களித்த மாதிரியும் ஆயிற்று,அளிக்காதது மாதிரியுமாயிற்று,
வரும் ஆனா வராது கதைதான்.
நம்ம அரசியல்வாதிகள் திறமையானவர்கள்தான்.
ஆனால் அவை உள்ளடி திறமையாக இருப்பதுதான் மோசம்.
_________________________________________________________________________________

மான பங்கம்.


அசாமில் ஒரு இளம் பெண் மானபங்கம் செய்யப்பட்டதை படம் பிடித்து அதை ஒளி பரப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் தொலைக்காட்சிநிருபர் கவ்ரவ் ஜோதி நியோக்.
ஆனால் அப்போதிருந்து அசாம் அமைச்சரும் காவல்துரையினரும் அவர் மீது கடுப்பாக இருந்தனர் அவருக்கு எதிராக பேசி வந்தனர்.
சுரன்

இப்போது கடைசியாக நியோக்கை  கைதும் செய்து உள்ளே தள்ளிவிட்டனர்.
அந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்ய தூண்டியதே நிருபர்தான் என்ற குற்றச்சாட்டை அசாம் அமைச்சரே  எழுப்பினார்.இதனால் நியோக்  தனது நிருபர் வேலையை விட்டு விலாகினார். 
பெண் மானபங்க காட்சியை ஒளிபரப்பி இருக்கக்கூடாது என்று அசாம் முதல்வர் தருண் கோகாய் கூறியிருந்தார்.
 இதனால் அந்த காணொளி தடயவியல் சோதனைக்கு அனுப்பி ஆராய போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

பரபரப்பாக இருக்கும் கவுகாத்தியின் கிறிஸ்டியன் பாஸ்டி பகுதியில் மானபங்கத்தை படம் எடுத்திருப்பது, அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிய நேரமானது[?] போன்ற குற்ற  சாட்டுகளை நியோக் மீது காவல்துறை சுமத்துகிறது.ஆனால் அவரோ தான் உடனே தவகவல் கொடுத்தும் தங்களது வழக்கமான வேகத்தில்தான் காவல்துறையினர் வேடிக்கைபார்ப்பது போல் வந்தனர் என்றும் சொல்லுகிறார்.
சுரன்


 குற்றவாளிகளை பிடிப்பதை விட எரிச்சலில் தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்க  தன்னை உள்ளே தள்ளத்தான் அரசும்,காவல்துறையும்முயறிப்பதை அறிந்த  கவ்ரவ் ஜோதி நியோக், கவுகாத்தி நீதிமன்றத்தில் பிணை கேட்டு  மனு  செய்தார்.
 ஆனால் அவரது நீதிமன்றமோ அவரின் மனுவை தள்ளுபடி செய்து அரசுக்கு ஆதரவாக நீதியை நிலை நாட்டியுள்ளது. தற்போது கவ்ரவ்ஜோதி நியோக் கைது செய்யப்பட்டுள்ளார். 
சுரன்

அவர் திட்டமிட்டு தூண்டி விட்டு இளம்பெண்ணை மானபங்கம் செய்ய வைத்ததற்கு போதிய ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகஅசாம் காவல்துறை  தெரிவித்துள்ளது. 
"திட்டமிட்டு ஒரு பெண்னை பலாத்காரம் செய்ய ஆட்களை அனுப்பி அதை படம் பிடித்து அதை ஒளி பரப்பு செய்து,பலாத்காரம் செய்தவர்கள் முகங்களை தொழில் நுட்பம் மூலம் பெரிதாகக் காண்பித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தொலைக்காட்சி நிருபர் திட்டமிட்டால்.அவர்களை கைது செய்தால் தானும் மாட்டிக்கொள்வோம் என்று தெரியாத அளவா தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் யாரும் நிருபர் மீது குற்ற சாட்டு கூறவில்லை.
 என்பதும்,இதை கூறுவதெல்லாம் அசாம் அமைசரும்,காவல்துறையினரும் மட்டும்தான்.இது எல்லாமே தங்கள் மாநில சட்டம் ஒழுங்கு பெருமையை காப்பாற்ற அரசு செய்யும் வேலைதான் என்ற சந்தேகத்தைக்கிளப்புகிறது.
அப்படி செய்தால்தான் இந்த தொலைக்காட்சிக்காரர்களும் "பிளாஷ் நியூஸ்' என்று,நித்தி-ரஞ்சி,கல்கி ஆசிரமம் போன்ற அதிரடி செய்திகளை உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்ப மாட்டார்கள் என்ற எண்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதுவரை  பணத்தை லஞ்சம் கொடுப்பதாக கூறி ரகசியமாக படமெடுத்து ஒளிபரப்பியவர்கள் இப்படி பெண்ணை மானபங்க படுத்தி அதை படமெடுத்து ஒளிபரப்பிட உண்மையிலேயே நினைத்து செயல் படுத்த முயன்றால் அது நிச்சயம் ஆயுள் தண்டனை வழங்கும் குற்றமாகத்தான் இருக்கும்.  


இதில் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும்.மானபங்க பெண் வந்தது ஒரு மதுபான கூடத்தில் இருந்து.அங்கு அவர் தோழி பிறந்த நாள் விழா விருந்து[மது விருந்துதான்].அதில் கலந்து கொண்ட அப்பெண் கொஞ்சம் போதையாக அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்து விட்டு வெளியே வந்துள்ளார்.அவரிடம் சண்டையிட்டுக்கொண்டேதான் அவரை மூன்று ஆண்கள் துரத்திக்கொன்டு வந்தார்கள்.பின் அதுவே 20 பேர் அளவு அதிகரித்து இப்படி சந்தி சிரிக்கும் அளவு அசிங்கமாகியுள்ளது.
அந்த பெண் தனது பெண்மையை உணராமல் மதுவருந்துமிடம் சென்று சண்டையிட்டது இத்தனை களேபரத்துக்கும் காரணமாகி விட்டது.
இதில் இப்போதைக்கு பாதிக்கப்பட்டவர் தொலைக்காட்சி நிருபர்தான்.
__________________________________________________________________________________
சுரன்