வெள்ளி, 13 டிசம்பர், 2013

கறைபடியவே படியாது

அரசியல்வாதிகளின் ஊழல்களை கண்டுபிடிக்க பல்வேறு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள், ரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.

வங்கிகளில் கறுப்பு பணத்தை எந்தெந்த வகையில் முதலீடு செய்ய உதவுகிறார்கள் என்பதை ரகசிய உளவு நடவடிக்கை மூலம் ‘கோப்ரா போஸ்ட்’ என்ற இணையதளம் வெளிக் கொண்டு வந்தது.
ஆரம்பத்தில் இதற்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்தது.
பின்னர், உண்மை இருப்பதை அறிந்து இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்தது.

தற்போது, இந்த இணையதளம் சில எம்.பி.க்களிடம் லஞ்சம் பேசி சுற்றி வளைத்து பதிவு செய்து ஊடகங்களில் பரபரப்பாக வெளியிட்டுள்ளது.

 இது குறித்து ‘கோப்ரா போஸ்ட்’ இணையதளத்தின் நிறுவனர் அனிருத்தா பஹால் கூறியதாவது:
"சில எம்.பி.க்கள் சிபாரிசு கடிதங்களுக்கும் பணம் வாங்குவதை அறிந்து, அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிவு செய்தோம். இதற்கு ‘ஆபரேஷன் பால்கன் கிளாவ்’ என்று பெயரிட்டோம். இதன்படி காங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்களை, அவர்களுக்கு நெருக்கமான தரகர்கள் மூலம் எங்கள் நிருபர்கள் தொடர்பு கொண்டனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெட்டெரானியன் ஆயில் கம்பெனியின் பிரதிநிதிகள் என்று எம்.பி.க்களிடம் தங்களை நிருபர்கள் அறிமுகம் செய்து கொண்டனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் எண்ணெய் துரப்பன பணி மேற்கொள்ள தங்கள் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றும், இதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை கடிதம் அளிக்க வேண்டுமென கூறினர்.

இந்த பரிந்துரை கடிதத்துக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று பேரம் பேசினர். இந்த பேரம், ரகசியமாக வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் குரல் தெள்ளத்தெளிவாக பதிவு செய்யப்பட்டது. பரிந்துரை கடிதத்தை தர ரூ.50,000 முதல் ரூ.50 லட்சம் வரை எம்.பி.க்கள் அல்லது அவர்களின் செயலாளர்கள் நிருபர்களிடம் பேரம் பேசினர்.

சில எம்.பி.க்கள் ஒருபடி மேலே சென்று, அந்த நிறுவனத்துக்கு கடைசி வரை உதவி செய்ய முன்வருவதாகவும், வேண்டும் என்றால், எண்ணெய் நிறுவனத்திடம் தாங்களே பேசி காரியத்தை முடிக்கவும் தயார் என்று தெரிவித்தனர். ஒரு எம்.பி.யின் கணவர், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும் இதுகுறித்து பேசுவதற்கு தயார் என்று எங்கள் நிருபரிடம் பேசினார்.

நாங்கள் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு 6 எம்.பி.க்கள் சிபாரிசு கடிதத்தையே தந்துவிட்டனர். எங்கள் ரகசிய உளவு நடவடிக்கையில் சிக்கிய எம்.பி.க்கள் பொள்ளாச்சி கே.சுகுமார் (அதிமுக), சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் (அதிமுக), லாலு பாய் படேல் (பா.ஜ.), ரவீந்திர குமார் பாண்டே (பா.ஜ), ஹரி மான்ஜி (பா.ஜ.), விஸ்வ மோகன் குமார் (ஐ.ஜ.த.), மகேஸ்வர் ஹஜாரி (ஐ.ஜ.த.), புதியோ சவுத்ரி (ஐ.ஜ.த.), கிலாடி லால் பைர்வா (காங்கிரஸ்), விக்ரம்பாய் அர்ஜன்பாய் (காங்கிரஸ்), கைசர் ஜஹான் (பகுஜன் சமாஜ்).'
-என்றார்..


இதற்கிடையே, கோப்ரா போஸ்ட் புகார் பட்டியலில் சிக்கியுள்ள அதிமுக எம்.பி.க்கள் கே.சுகுமாரும், சிட்லப்பாக்கம் ராஜேந்திரனும் தங்கள் மீதான புகாரை மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கோப்ரா போஸ்ட் மீது வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஊழலில் மாட்டியது தொடர்பாக பொள்ளாச்சி எம்.பி. சுகுமார் சமாதானம் கூறியதாவது:

"லஞ்ச பேரத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
நான், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் என்னால் முடிந்தவரை தொகுதி மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். என் மீதும், நான் சார்ந்துள்ள அ.திமு.க மீதும் அவதூறு பரப்பும் வகையில் சில ஊடகங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுக்கிறேன். என் தொகுதி மக்களுக்கு, நல்ல காரியம் நடக்க வேண்டும் என யார் வந்து சிபாரிசு கடிதம் கேட்டாலும் நம்பிக்கையின் அடிப்படையில் கையெழுத்து போட்டு கொடுப்பேன்.

 ஒரு வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது பெரிதுபடுத்துகிறார்கள். என்னுடைய உதவியாளர் கடந்த ஆண்டு ஒரு நபரை அழைத்து வந்து, சிபாரிசு கடிதம் கேட்டார். வழக்கம்போல், நம்பிக்கை அடிப்படையில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். நான், இதுவரை யாரிடமும், ஒருபைசாகூட வாங்கவில்லை.  நான், எந்த தவறும் செய்யவில்லை. இதுகுறித்து, முதல்வரிடம் கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளேன். நான், யாரிடமும் பணம் பெறவில்லை என உறுதியாக கூறுகிறேன்.
. சிட்லப்பாக்கம் ராஜேந்திரனை யாரும் இந்த நிகழ்வு தொடர்பாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

சரி.இனி கோப்ராவின் கானொளியில் 

அதிமுக எம்.பி.க்கள் பேசியது:
பொள்ளாச்சி கே.சுகுமார் எம்.பி:

(எம்.பி. உதவியாளர் முன்பாக பேச்சுவார்த்தை)

உதவியாளர்: எங்கள் தேவையை பூர்த்தி செய்யவேண்டும், சரியா?

நிருபர் (சுகுமாரை பார்த்து): ப்ளீஸ் சார், உங்களுக்கு எவ்வளவு வேண்டும்...

சுகுமார்:  நீங்கள்(உதவியாளரிடம்) அவரிடம் பேசுங்கள்

நிருபர்: ரூ.50,000 சார்? சரியா

சுகுமார்: லெட்டர் பேடில்தான் கடிதம் வேண்டுமா?

நிருபர்: ஆமா.... ஆமா....

நிருபர்: இந்த கடிதத்தை படிங்க... இதுமாதிரிதான்.... (மாதிரி கடிதத்தை சுகுமாரிடம் தருகிறார்)

சுகுமார்  மாதிரி கடிதத்தை வாங்கிக்  கொண்டு அதை போன்றே தனது லெட்டர் பேடில் கடிதம் தயாரிப்பதற்காக செல்கிறா ர்.

     [50000/-வாங்கியது தான் நம்பிக்கையின் அடிப்படை  யா?]

சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி:
(நாயர் என்ற ஏஜன்ட் மற்றும் எம்.பி.யின் உதவியாளர் முன்பாக பேச்சுவார்த்தை)

நிருபர்: பரிந்துரை கடிதம் தரணும்னா... உங்களுக்கு கொஞ்சம் பணம் தரணும்னு இவர் (நாயர்) சொன்னார்.

ராஜேந்திரன்: நீங்க அவர் கிட்டே கொடுங்க

நிருபர்: எவ்வளவு தரணும் சார்... எனக்கு எவ்வளவுன்னு தெரியலை... அதனாலதான் நானே உங்க கிட்ட வந்தேன்.

ராஜேந்திரன்: (சிரித்துகொண்டே எழுந்து செல்கிறார்)

உதவியாளர்: அவர் எங்க கிட்ட எவ்வளவுனு சொல்லிட்டார்.

நீங்க ஏன் அவரைப்பத்தி கவலைப்படுறீங்க?
அவர்கிட்ட நேரடியாக கேட்கிறது கிடையாது.

   [இவர் கை கறைபடியவே படியாது,பாவம் நாயர் கைதான் ]
-----------------------------------------------------------------------------------------------------------------------
மாமா தலையைக் கொடு !

வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் யுன்னின் உறவினர் ஜங்சாங் தயக்(வயது 67).
இவர் ஜனாதிபதிக்கு மாமா முறை ஆவார்(கிம் ஜாங் யுன்னின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் கணவர்).
ராணுவ புரட்சிக்கு சதிதிட்டம்: வடகொரியா அதிபர் உறவினருக்கு மரண தண்டனை

இராணுவ துறையில் துணை தளபதியாக இருந்த ஜங்சாய், ஜனாதிபதிக்கு அடுத்த படியாக 2வது இடத்தில் அதிகாரம்மிக்கவராக செயல்பட்டார்.

ஊழல், போதை மருந்து பயன்படுத்துதல், சூதாட்டம் மற்றும் பெண்கள் விவகாரம் என தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
ஜாங் சோங் அதிகாரத்தை அடைய வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது

 இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டதாக கூறி அவரையும், இரண்டு உதவியாளர்களையும் கைது செய்தனர்.

suran
இதனை தொடர்ந்து இவர்கள் மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

இதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதுடன், உதவியாளர்கள் 2 பேரும் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டனர்.

இந்நிலையில் ஜங்சாங் தயபாக்கும் நேற்று தூக்கிலிடப்பட்டார்.

இவரை துரோகி என்றும், நாயை விட கேவலமானவர் என்றும் கொரிய செய்தி நிறுவனங்கள் வர்ணித்துள்ளது.

அவருக்கு பண உதவி செய்த ஒருவர்  வெளிநாட்டில் குறிப்பாக தென்கொரியாவில் அடைக்கலம் தேடி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என முன்பு தகவல் வெளியானது. தற்போது அ ந்த உதவியாளர் தென்கொரியா அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக்கின.

------------------------------------------------------------------------------------------
மாவட்டாட்சியர்கள் [ மாநாடு ]விருந்து.


 மாவட்ட ஆட்சியர்கள்  மற்றும் காவல்துறை  அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு, தாஜ் ஓட்டலில் இருந்து, மட்டன் பிரியாணி உட்பட அறுசுவை அசைவ உணவு மற்றும் சைவ உணவு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம், முதல்வர் தலைமையில், கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். 
 இந்த ஆண்டு, மூன்று நாள் மாநாடு, நேற்றுமுன்தினம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில் துவங்கியது. நேற்றுமுன்தினம், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.

 ஜெயலலிதா, தலைமை தாங்கினார். அமைச்சர்கள், அனைத்து துறை செயலர்கள், மாவட்ட ஆட்சிய ர்கள், மற்றும் காவல்  அதிகாரிகள், கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சிய ர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
கலந்து கட்டிய விருந்து.
 மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு, சென்னையில் பிரபலமான, தாஜ் ஓட்டலில் இருந்து, சைவ மற்றும் அசைவ உணவு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை உணவாக, கேசரி, இட்லி, பொங்கல், மெதுவடை, ஊத்தப்பம், பூரி, டீ, காபி வழங்கப்பட்டது. மதிய உணவாக, அசைவம் சாப்பிடுவோருக்கு, மட்டன் பிரியாணி, சிக்கன் பிரை, மட்டன் வருவல், மீன் வருவல், முட்டை வழங்கப்பட்டது.
சைவம் சாப்பிடுவோருக்கு, 'எக்ஸிகியுட்டிவ் ஹை மீல்ஸ்' மற்றும், 'மினி மீல்ஸ்' வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, சப்பாத்தி, பரோட்டா அங்கேயே சுடச்சுட தயாரித்து வழங்கப்பட்டது. அனைவருக்கும் ஐஸ்கிரீமும் வழங்கப்பட்டது.
மாலை பட்டாணி, சுண்டல், டீ, காபி, வழங்கப்பட்டது. இடையில், பிஸ்கட், டீ, காபி வழங்கப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்டோர், தங்களுக்கு விருப்பமானதை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மாவட்ட ஆட்சிய ர்களின் உதவியாளர்களுக்கு , 'அஞ்சப்பர்' உணவகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட, பிரியாணி பொட்டலம் மட்டும் வழங்கப்பட்டது.
அசைவம் சாப்பிடாதவர்களுக்கு, சரவணபவன் ஓட்டல் உணவு வழங்கப்பட்டது. உணவுக்கு மட்டும், லட்சக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்காடு மக்களை கவனித்தற்கு அதிகாரிகளை கவனிக்கும் விருந்தா?


முதல்வருக்கும் அதிகாரிகளுக்கும்  'அக்வாபினா';
 மக்களுக்கு மட்டும் 'அம்மா குடிநீர்'?
மாவட்ட ஆட்சியர்கள்,காவல்துறை  அதிகாரிகள் மாநாட்டில், கலந்து கொண்ட ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு குடிநீருக்காக, 'அக்வாபினா' மினரல்வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
தமிழ் நாட்டில் மக்களுக்காக வழங்கப்படும் சுத்தி கரிக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தயாரிக்கப்படும் ரூ 10 விலையிலான, 'அம்மா குடிநீர்' பாட்டில் வழங்காமல், தனியார் நிறுவனமான, 'அக்வாபினா' குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது.
 சாதாரண மக்களுக்கு அம்மா குடிநீர், அதிகாரிகளுக்கு அக்வாபினா குடிநீரா என, தலைமைச் செயலக ஊழியர்கள்  பேசிக் கொண்டனர்.
அக்வாபினா குடிநீர் பாட்டிலை வினியோகம் செய்யும் பொறுப்பை ஏற்ற நட்சத்திர ஓட்டல் நிர்வாகம், ஒவ்வொரு பாட்டிலுக்கும் 100 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்துள்ளது.
 அம்மா குடிநீர் பாட்டில் விலை 10 ரூபாய் மட்டும் தான்.
எப்படியோ தாங்கள் 100 ரூபாய்க்குக் குடிநீர் குடித்தாலும் மக்களுக்கு 10 ரூபாய்க்கு வழங்கும் தாயுள்ளம் பாராட்டப்பட வேண்டியதுதான்.

---------------------------------------------------------------------------------------------------------------------------


2001, டிசம்பர் - 13
டெல்லி பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அப்போது சரியாக 11.40 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் சராமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். மின்னல் வேகத்தில் இயங்கிய மத்திய ரிசர்வ் போலீசாரும், இந்திய திபெத் எல்லை போலீஸ் படையினரும், டெல்லி போலீசாரும் பாராளுமன்றத்திற்கு அரணாக நின்று இந்த தாக்குதலை எதிர்கொண்டனர்.
பாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

தீவிரவாதிகளின் துப்பாக்கி தாக்குதலுக்கு பதிலடி கொடக்க துவங்கினர். பாராளுமன்றத்தில் எல்லா கதவுகளும் மூடப்பட்டன. தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சுமார் இருபது நிமிடங்கள் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திய ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புப் படையை சேர்ந்த 9 பேர் தங்களது உயிரை  இழந்தனர்.
. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமத் ஆகிய இயக்கங்கள் பொறுப்பேற்றன.
---------------------------------------------------------------------------------------------------------------------------
At the Chennai International Film Festival Inaugural Function:

@[371925396178053:274:Kamal Haasan], in his trademark, candid way, urged the film industry to take the responsibility of censoring films as those on the Censor Board were not qualified enough to do so. “They like cinema … they like to watch films ... there are Censor Board officials who sometimes tell young film-makers ‘you could make your film shorter.’ It’s ridiculous,” he said in an open stage interaction with actor Suhasini Maniratnam, who asked questions on behalf of many film personalities.

சென்னையில் " உலக திரைப்பட விழா" ஆரம்பம்.


Once again, #Anna Hazare and #AAP are split wide open 

Anna asks AAP leader to leave his village after a fight with former army chief Gen VK Singh. Here's what happened:  http://ndtv.in/1c0JDeQ

உண்ணாவிரதம் ஆரம்பமாகப் போவதால் ஓட்டலுக்கு சென்றவர்கள் பந்தலுக்கு வந்து அமரவும்.
உலகத்துலயே மிகச்சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பது கூடங்குளம் அணு உலையில் தான் 
இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் பேட்டி
 அதுதான் மின்சாரம் தமிழகத்தில் கிடையாதே .பின் ஏன் பயம்.
கம்பத்தை புடுங்கி பழைய இரும்பு வியாபாரிகிட்டே கொடுத்து பேரிச்சை பழம் வாங்குங்கப்பா .
Aleeee... Thanda Thanda Paani Daal Diya.. :P