எச்சில் இலையில் கடவுள்,,?


கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சன கன்னடா என்ற மாவட்டத்தில் இருக்கும் குகி சுப்ரமணியா கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது உருண்டு நேர்த்திக் கடன் செய்யும்முட்டாள்தனம் இன்றும் உள்ளது. ”இது சாதி உள்நோக்கம் கொண்டது.மனிதஉரிமைக்க்கு எதிரானது, இதை தடை செய்ய வேண்டும்” என்றுஎதிர்த்த சமுகஆர்வலரைத் தாக்கியுள்ளனர்.
  
மடிசனான என்று அழைக்கப்படும் இந்த நேர்த்திக்கடன் முறை மூட நம்பிக்கைகளை தொடர்ந்து மீள வலியுறுத்தவே பயன்படுத்தப்படுகிறது.மேல் சாதி-கீழ்சாதி வேறுபாடுகளை நிலை நிறுத்தவே இது போன்ற வழிபாட்டு முறைகள் வழிவகுக்கிறது.மத்திய-மாநில அரசுகள் இவ்வழிப்பாட்டு முறையை தடை செய்ய வேண்டும்.
முன்பு இந்த வழிபாடு முறைக்கு சில போராட்டங்கள் மூலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆனால் இப்போது கர்நாடாக மாநிலத்தை ஆளும் பாரதீய ஐனதாஅரசு இந்த வழிபாட்டுக்கு இருந்த தடையை திங்கட்கிழமையன்று விலக்கிவிட்டது.
அது என்ன பிராமணர்கள் எச்சில் இலை மீது உருள்வது.அப்படி உருள்பவர்களில் பிராமணர்கள் இல்லையே அதை மற்ற உருளும் மடையர்கள் கவனிக்கவில்லையா?
ஏன் மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது பிராமணர்கள் உருள்வது போன்ற நேர்த்திக்கடன்கள் வைக்கப்படவில்லை.இப்போதாவது புரிகிறதா?இது சில சாதியினர் தங்களை உயர்த்திக்கொள்ள கடவுளை ஒரு கருவியாக படைத்துள்ளனர் என்று?
இத்தடை நீக்கத்தை எதிர்த்த்வர்களை சில மத-சாதி வெறியர்கள்தாக்கவும் செய்துள்ளனர்.
தாங்கள் பிழைப்பு நடத்தவே கடவுளை சில மனிதர்கள் உருவாக்கி மதப் போதையை மனிதரிடம் உருவாக்கி அப்போதையை குறைய விடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதைத்தான் “மதம் ஒரு அபின்”என்று காரல் மார்க்ஸ் கூறியுள்ளார்.
மனிதனும் தனது துன்பங்களை,மன உளைச்சல்களை இறக்கி வைக்கும் இடமாக கோவில்களை,சாமிகளை பயன் படுத்த ஆரம்பித்து கடைசியில் அதனிடமே அடிமையாகி விட்டான்.
தன்னைக் கும்பிடும் மனிதனை காப்பாற்றும் திறன் கூட இப்போதைய கடவுள்களிடமில்லை.ஏன் தன்னையே காப்பாற்றிக்கொள்ளும் திறனும் இல்லை.
இல்லாவிட்டால்
 பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்க முடியுமா?
சபரிமலை புல்மேடு பலிகள் நடந்திருக்குமா?மாலை போட்டு சரணம் சொல்லி மலை ஏறி வீடு திரும்பும் போது விபத்துக்களில் சாவார்களா?
 சாத்தான் மீது கல் எறியும் போது மெக்காவில் நூற்றுக்கணக்கில் நெருக்கடியில் மனிதன் மாண்டிருப்பானா?
வேலாங்கன்னியில் கும்பிட்டுவிட்டு கடல் அருகே நின்றவர்கள் சுனாமியில் மாண்டிருப்பார்களா?
தான் பிறந்த ஜெருசலேமை கூட பாலஸ்தீன கட்டுப்பட்டில் வைத்திருப்பார்களா? 
சொல்லிக்கொண்டே போகலாம் .இப்போதைக்கு இது போதும்.
_________________________________________________

சிலர் சாவதே இல்லை,,,,,,,,,,,.

சிலர் வாழும்போது புகழ் அடைகிறார்கள்.சிலர் மறைந்த பின்னரும் வாழுகிறார்கள்.


மறைந்த பின்னரும் வாழும் ஜூலியஸ் பியூசிக் தனது படைப்பின் மூலம் நம்மிடையே இன்னமும்  பேசிக்கொண்டிருக்கிறார்,நம்பிக்கையை மனதில் ஊட்டி தீய சக்திகளை எதிர்த்து போராடும் தன்மையை ஊட்டிக்கொண்டிருக்கிறார்.

தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முதல் நாள் இரவு ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்தவர் ஜூலியஸ் பியூசிக். செக்கோஸ்லோவாகியா நாட்டின் புரட்சிமிக்க எழுத்தாளராகத் திகழ்ந்தவர்,பத்திரிகையாளர், அந்நாட்டுப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்.
நாஜிக்களின் தலைவன் ஹிட்லரால் செக்கோஸ்லோவாகியா நாட்டினர் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டனர். நாஜிக்களின் நாசப் போக்கைக் கண்டித்து 1929இல் சிருஷ்டி பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் ஜூலியஸ் பியூசிக்.
இவரது எழுத்துகள் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பி வீறுகொள்ள வைத்தன. மக்களைத் தூண்டிவிட்டதற்காக பியூசிக்கையும் வேட்டையாட உத்தரவிட்டார் ஹிட்லர். இதனை அறிந்த பியூசிக் தலைமறைவானார். எனினும், பத்திரிகை தொடர்ந்து வெளிவந்தது. நிறைய இலக்கியங்களைப் படைத்தார்.
1942 ஏப்ரல் 24 இல் ஹிட்லரின் ரகசிய காவல் துறையினர் பியூசிக்கைக் கைது செய்து கொடுமைப்படுத்தினர். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்றத்தில் நீதிபதியிடம், உங்கள் நாடகத்தை நான் பார்ப்பது மட்டுமல்ல, உணரவும் செய்கிறேன். உங்கள் தீர்ப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். எனது உயிரைப் போக்க, விசாரணை என்பது ஒரு நாடகம். உண்மையில் குற்றவாளி நீங்கள்தான். நான்தான் நீதிபதி, எனது தீர்ப்பை எப்போதோ எழுதிவிட்டேன். என் தீர்ப்பின் மூலம் நாஜிசத்திற்கு மரண தண்டனை விதிக்கிறேன். எதிர்காலம் என் தீர்ப்பை நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும், தாய், சகோதரி, மனைவி ஆகியோருக்குக் கடிதம் எழுத அனுமதி கேட்டார். அனுமதி கொடுக்கப்பட்டது. ஒரே கடிதமாக எழுதினார். எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பேதைகளால் என் மன மகிழ்ச்சியை மாய்க்க முடியவில்லை. தூக்கிலிடுவதால் எந்த ஒரு மனிதனின் மதிப்பும் தாழ்வதில்லை. என் வாழ்வு முடிந்த பிறகு, நான் இதுவரை மகிழ்ச்சியுடனேயே இருந்தேன் என்ற உண்மையினை உணர்ந்து நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள் என்பதே எனது விருப்பம் என்று முடித்தார்.
தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முந்தைய நாள் இரவு, சிறைக்காவலன் பியூசிக்கிடம் வந்து உங்கள் தேசபக்தியை விரும்பும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். தங்களது கடைசி ஆசையைச் சொல்லுங்கள், நிறைவேற்றுகிறேன் என்றார்.
கொஞ்சம் தாள்களும், எழுதுகோலும் தேவை என்றார். கொண்டுவந்து கொடுத்ததும் எழுதி முடித்துவிட்டு, தனது மனைவியிடம் எப்படியாவது ஒப்படைத்துவிடுங்கள் என்று சிறைக் காவலரிடம் கொடுத்தார் பியூசிக்.
              

காலையில் தூக்குமேடையில், தூக்குக் கயிற்றை முத்தமிட்டபடியே "இன்பத்துக்காக வாழ்ந்தேன்; இன்பத்துக்காகப் போராடினேன்; இன்பத்துக்காக இதோ இறந்து கொண்டிருக்கிறேன். எனவே, துன்பம் என் பெயரோடு எந்தக் காலத்திலும் இணைக்கப்படக்கூடாது; அது முறையல்ல. வாழ்க்கையை நான் முழுமையாகக் காண்கிறேன். என்னிடம் இருக்கும் அனைத்தும், வாழ்க்கை எனக்கு அளித்த பரிசு. வாழ்க்கை மிகச் சிறந்தது, உயர்ந்தது, ஈடு இணையற்றது. அழிக்கவே முடியாதது. வாழ்க்கைக்குச் சாவே இல்லை" என்றார்.
சிறைக்காவலர் கடைசியாக பியூசிக் எழுதியவற்றை அவரது மனைவி அகஸ்டினாவிடம் ஒப்படைத்தார். அவர் அதனைப் புத்தகமாக வெளியிட்டார். 12 மணி நேரப் படைப்புக் காவியம். உலகம் முழுவதும் வீர காவியமாக 80 உலக மொழிகளில் 200 பதிப்புகளைக் கண்ட வெற்றிக் காவியமாக உலா வருகிறது. தமிழில் தூக்கு மேடைக் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியாகி பல பதிப்புகளைக் கண்டுள்ளது.அதை தேடிக்கண்டுபிடித்து படிப்பது உங்களுக்கு அவசியம்.
________________________________________________________________________

அக்னி குஞ்சொன்று கண்டேன்,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?