வெள்ளி, 3 மே, 2013

வீர மங்கையும்- தியாகியும் ...

சாவதில் கூட முக்கியத்துவம் வேண்டும் .
நாட்டில் எத்தனையோ பாலியல் வன்முறைகள்,பெண்கள் கொலைகள் நடந்தாலும் டெல்லி பெண் கற்பழிப்பும் அதன்பின்னான இறப்பும் முக்கியத்துவம் பெற்றதைப்பொல் வேறு கற்பழிப்புகள் வன்முறைகள் முக்கயத்துவம் பெற்ற தாக தெரியவில்லை.
ஆனாலுமிந்த  சம்பவங்கள் கொஞ்ச நாளில் மறக்கடிக்கப்பட்டு விடும்.நினைவில் கொள்ள அடுத்த  நிகழ்வு வந்து விடும்.இதன் பரபரப்பை அந்த செய்தி ஆட்கொண்டு விடும்.
இன்றைய சரப்ஜித் சிங் மரணமும் அப்படித்தான்.
இன்று அவரது சாவுக்கு அரசு மரியாதை.
இதே அரசு,மத்திய அரசும் 22 ஆண்டுகள் அவர் சிறையில் அடைபட்டி ருந்த போது அவரை விடுவிப்பதில் ஏன் முனைப்பாக செயல்படவில்லை.
இந்த 22 ஆண்டுகாலத்தில் எத்தனை பாகிஸ்தான் கைதிகளை,படை வீரார்களை நாம் விடுவித்திருக்கிறோம்.அவர்களுக்கு பிணையாக சரப்ஜித் சிங் விடுவிப்பை கேட்டிருக்கலாமே?
இவர் பாகிஸ்தான் சிறைக்கு சென்ற வரலாறே போதை தருவதுதான்.
இந்திய -பாக்   நாடுகளுக்கு  எல்லையாக  உள்ள பஞ்சாப் கிராமம் ஒன்றில் வசித்து வந்த சரப்ஜித் சிங் 27 வயது இளைஞராக இருந்த போது மது அருந்தி போதை தலைகேற  எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதியில் போதையில் சுற்றி அலைந்துள்ளார்.
அவரை இந்திய உளவாளி என கருதிய பாகிஸ்தான் போலீசார், 1991ல் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
காரணம் அப்போது நடந்த லாகூர் குண்டு வெடிப்பு .அதை இந்திய" ரா 'பிரிவுதான் செய்தது என்று பாகிஸ்தான் நினைத்தது.
அந்த லாகூர் குண்டு வெடிப்பில்  சரப்ஜித் சிங்குக்கு தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டப்பட்டது.
 இந்த வழக்கில், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
 கருணை மனுக்களை நீதிமன்றமும் , அன்றை ய அதிபர் முஷாரப்பும் நிராகரித்தார்.
அதனால் எந்த நேரமும், அவர் தூக்கிலிடப்படலாம் என்ற  நிலை.ஆனால் அடுத்து ஆட்சிக்கு வந்த பெனசிர் புட்டோ சரப்ஜித்தின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தார்.
இதற்கிடையே கடந்த வாரம் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆறு பாக், கைதிகள் இடையிலான தராறில்  தாக்கியதில், உணர்வற்ற நிலையில் லாகூர் மருத்துவ மனையில் சரப்ஜித் அனுமதிக்கப்பட்டார்.கோமா நிலையிலேயே இருந்தார்.
அவரை சந்திக்கச் சென்ற மனைவி  இரு மகள்கள் மற்றும் சகோதரிசிகிச்சைக்காக இந்தியா அல்லது வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கும்படி பாக், அரசை கேட்டனர்.பாக் அரசு அனுமதி தர மறுத்து தானே சிகிச்சை அளிப்பதாக கூறி அளித்து வந்தது.
சரப்ஜித் சிங்கை சந்திக்க, பாக், சென்ற உறவினர்கள் நாடு திரும்பிய நிலையில் நேற்று[02-05-2013] அதிகாலை 1:00 மணிக்கு லாகூர் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலேயே  அவரின் உயிர் பிரிந்தது.
22 ஆண்டுகள் பாக்,சிறையில் இருந்த போது இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டிருந்தால் அவர் போதையால் மட்டுமே எல்லை தாண்டினார் என்பதை நிருபித்து,"ரா" வுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும்  நிருபித்து சிறையில் இருந்து மீட்டிருக்கலாம்.

சரப்ஜித் சிங் போதையில் உளறிய வார்த்தைகளை பாக்கிஸ்தான் காவலர்கள் வாக்குமூலமாக பதிவு செய்ததே இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம்.அதை பாக் அரசுக்கு புரிகிற மாதிரி உணர்த்தி இருக்கலாம்.இந்தய அரசு அதை செய்ய தவறி விட்டது.
இன்று அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க அடக்கம்.
"மது உடலுக்கும் ,வீட்டுக்கும் மட்டுமல்ல நாட்டுக்கும் கேடு"
 என்பதை தான் சரப்ஜித் சிங் மரணம் எல்லா வகையிலும் உணர்த்தியிருப்பதாக தெரிகிறது.
சரப்ஜித் சிங்கை தாக்கிய பாக்., கைதிகள் ஆறு பேரில் இருவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம், அந்நாட்டு போலீசார் நடத்திய விசாரணையின் போது
 "பாகிஸ்தானியர் 14 பேரை லாகூர் குண்டு வைத்து கொன்றதால் பழிவாங்குவதற்காக தாக்கி கொல்ல முயன்றோம்' என கூறியுள்ளனர்.
சரப்ஜித் சிங் மரணம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண, இடைக்கால முதல்வர், நஜாம் சேத்தி, முழு அளவில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் வழங்கும் நீதி என்னவாக இருக்கும் என்று தெரியாததா?
இப்போது சரப்ஜித் சிங்கை "தியாகி"என அறிவித்து அதற்கான சலுகைகள் -பணப்பயன் தர வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
கடைசியில் "குடி"மகனிடம் உள்ள தியாக உணர்வு இவ்வளவுகாலம் தெரியாமல்போனதுதான்  நமக்கு வேதனையாக உள்ளது.
பாலியல் பலாத்காரத்தை எதிர்க்க முடியாமல் பலியான மாணவிக்கு வீரமங்கை பட்டமும்,குடிவெறியில் எல்லை தாண்டி மாட்டிக்கொண்டவருக்கு அதனாலேயே பலியானவருக்கு தியாகி பட்டமும் வழங்குவது அந்த பட்டங்களுக்கான் மரியாதையை  செல்லரித்து விடும் .
இருவர் பலியானதும் மனிதாபிமான அடிப்படியில் மிகவும் வேதனையை தருவது.அரசு அதற்கு பொறுப்பேற்று குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாவ்ட்டாலும் இழப்பீடுகள் வழங்குவது மிகவும் கட்டாயம்.வழங்க வே ண்டும்.அதுதான் முறை.
உண்மையிலேயே ரா பிரிவை ச்சார்ந்தவர்,மாட்டிக்கொண்டார் என்றால் நிச்சயம் அரசு குடும்பத்துக்கு உதவவேண்டும்.ஆனால் உண்மையிலேயே தீவிரவாதம் செய்து லாகூர் குண்டு வெடிப்பில் அப்பாவி பாகிஸ்தான் மக்களை பலி கொண்டவ ர் என்றால்.....? 
டெல்லியில் பாலியல் பலாத்காரத்தில் இறந்த மாணவிக்கு "வீர மங்கை" பட்டமும் கோடி மதிப்பில் வீடும் வழங்கும் மத்திய அரசு இந்த தியாகிக்கும் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------