கொழும்பும்-கொச்சியும் இணைகிறது..
தமிழகத்தின் மீது கோபத்தில் இருக்கும்கேரளா மூலம் தமிழக மக்கள் மீது வெறுப்பில் இருக்கும் இலங்கை தனது பழி வாங்கல்களை நிறைவேற்றிக்கொள்ள திட்டம் தீட்டி உள்ளதாம். தமிழக அமைதியை சீர்குலைக்கவும், பதட்டத்தை ஏற்படுத்தவும், தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவும், கேரளாவை தனது கைப்பாவையாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்புஈழத்தில் தமிழின ஒழிப்பு போர் உச்சகட்டத்தில் இருந்தபோது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் இருந்தார்.வெளியுறவுத்துறை செயலாளராக சிவசங்கர மேனன் இருந்தார். இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.அப்போது அவர்கள் இருவருமே தமிழர்களுக்கு -விடுதலைப்புலிகளுக்கு எதிரான மொள்கை முடிவுகளை இந்திய அரசு எடுக்க முக்கிய காரணமாக இருந்தனர்.அதற்காக அப்போதே அவர்கள் இருவரும் கடும் எதிர்ப்புகளையும்,கண்டனங்களை தமிழ் நாட்டில் இருந்தும் ,இலங்கை-உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெற்றனர். இறுதிவரை அவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும்,ராஜ பக்ஷேக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். |
தற்போது தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் இடையே முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் உள்ளன. சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணைதொடர்பாக இரு மாநில மக்களும்-அரசுகளும் மோதிக்கொண்டது.இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் பெரிய அளவில் நடந்தன. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக கேரளாவுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் மக்கள் கொந்தளித்தனர். இதை கேரள மக்கள் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சிப் போராட்டத்திற்குப் பின்னரே கேரளா சற்று பணிந்தது. இருப்பினும்முல்லைப் பெரியாறு அணைதொடர்பாக கேரள அரசு தனது நிலைப்பாட்டை தமிழகத்துக்கு எதிராகவே கொண்டுள்ளது. மத்திய ஆய்வுக்குழு அணியில் போட்ட துளைகளை அடைக்கவிடாமல் தடங்கள் செய்து கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்துடன் மோதி வரும் கேரளாவை தன் பக்கம் திருப்பி கேரளாவைக் கொண்டு தமிழகத்தை பழி வாங்க இலங்கை அரசு திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது தமிழ்நாடு வரும் இலங்கை இனத்தவர்கள் அமைச்சர்களை போராட்டங்கள் நடத்தி திருப்பி ஓட செய்வதால் தமிழக மக்கள் மீது பக்ஷே அரசு கடுங் கோபத்தில் உள்ளது.. கேரளாவுடனான இலங்கை உறவை வலுப்படுத்திக் கொள்ள இலங்கை முயன்று வருகிறதாம். இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் கேரளாவுக்கு சென்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்துப் பேசி விட்டு வந்துள்ளார். அங்குள்ள உயர் அரசு அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பு அடிக்கடி தொலை பேசியிலும் நடக்கிறதாம். கேரளாவுடன் பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து அவர் பேசிவருவதாக தெரிகிறது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் இலங்கையும் ,கேரளாவும் இணைகிறது.இந்த இணைப்பு நிச்சயம் தமிழ் நாடுக்கு எதிரானதாகத்தான் இருக்கும் என தெரிகிறது.தமிழ் நாடு எச்சரிக்கையாக எதிர் நிகழ்வுகளை கையாளத்தயாராக வேண்டும்.
ஏற்கனவே மத்திய அரசில் கேரள லாபிதான் பலம் பொருந்தியதாக உள்ளது.
அதைவிட அவர்களுக்கு கேரள மாநில நன்மைக்கு ஒற்றுமையாக செயல் படுவார்கள்.நம் தமிழர்கள் பழம் பெருமை பேசியே காலத்தை ஓட்டி விடுவார்கள்.
ஏற்கனவே அதிக வருவாய் உள்ள சேலம் ரெயில்வே கோட்டத்தை கேரளாவில் பாலக்காடு கோட்டத்தில் சேர்க்க கேரள அதிகாரிகள் முயற்சி செய்து வெற்றி பெறும் நிலையில் உள்ளார்கள்.நமது தமிழக மக்களவை உறுப்பினர்கள் அங்கு வாய் திறந்தால் கொட்டாவி விடத்தான் என்றாகி விட்டது.அதௌமட்டுமல்ல .
முல்லைப்பெரியாறு முதல் காவிரி வரை மக்களவையில் மற்ற மாநில உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி ஒற்றுமையாக பேசும் போது தமிழக உறுப்பினர்கள் மட்டும் கருணாநிதியால்தான் இந்த பிரச்னை வந்தது-ஜெயலலிதாவால்தான் வந்தது என்று நம்மீதே குற்றம் சாட்டி கத்திவிட்டு வந்து விடுகிறார்கள்.
அந்த நிலை மாறினால் மட்டுமே தமிழக பிரச்னைகள் தீரும்.மற்ற மாநிலங்களும் நம்மை மதிக்கும்.
|
--------------------------------------------------------------------------------------------------------
சன்டே டைம்ஸ் இதழ் ஒலிம்பிக் போட்டிகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க தனது நிருபர் ஒருவரை கள்ளச்சந்தை டிக்கெட் விற்பவர் போல் நடித்து பல நாடுகளின் ஒலிம்பிக்சங்கங்களை அணுகியுள்ளார்.
அப்போது ஐம்பதுக்கும் மேல் நாடுகளில் உள்ளவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒலிம்பிக் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க அவரிடம் குறிப்பிட்ட தொகைக்கு பேரம் பேசியுள்ளதாக தெரிகிறது.
அதை பற்றி சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போது கள்ள சந்தையில் ஒலிம்பிக் டிக்கெட்டுகள் பத்து மடங்கு விலையில் விற்கப்படுகிறது.
ஒலிம்பிக் நடத்தும் இங்கிலாந்து அதிகாரிகளை அந்த நிருபர் அணுகிய போது அதிகாரிகள் டிக்கெட் தர மறுத்து விட்டதாகவும் எழுதியுள்ளது.
அதற்கு மூன்று காரணம் இருக்கிறது.
அவர் நிருபர்தான் என்று இங்கிலாந்து அதிகாரிகளுக்குதெரிந்திருக்கும்.
அல்லது மொத்தமாக எங்காவது விலைக்கு தள்ளியிருப்பார்கள் அல்லது உண்மையிலேயே நல்லவர்களாக இருப்பார்கள்.
________________________________________________________________________________