ஊழல் ஒழிப்பு...

லோக்பால் மசோதக் குழு இணத்தலைவர் சாந்தி பூஷன் தொடக்கத்திலேயே ஊழல் குற்றசாட்டுகளில்


மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.அன்னா கசாரேயும் மோடி பாராட்டு,காங்கிரசு எதிர்ப்பு என சூழலில் சிக்கியிருக்கிறார்.அவரும் முன்பு ஒரு குழுவின் நிதியை முறைகேடாக பயன் படுத்தினார் என்று ஒரு குற்றசாட்டு எழும்பி யுள்ளது. 
      ஊழல் எதிர்ப்பு குழுவினரே ஊழல்களில் மாட்டுவது வேடிக்கையானதுதான்
சாந்தி பூஷன்,அவரது மகன் பண்ணை வீடு வாங்கியதிலும் முறைகேடுகள் உள்ளதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
ஊழலை ஒழிப்பது இந்தியாவில் ரொம்ப கடினமானது என்ற நிலை வந்துவிட்டது.




ஊழலை ஒழிக்க ஏதாவது “தள்ளினால்?  காரியம் நடக்கும் எனத்தோன்றுகிறது,,,,,,

 லோக்பால் மசோதா வரைவு கமிட்டிக்கு இணைசேர்மனாக நியமிக்கப்பட்ட சாந்திபூஷன் தொடர்பான சி.டி., உண்மையானது என்று டில்லி போலீசார் கூறியுள்ளது சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. எனினும் சாந்தி பூஷன் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், உறுப்பினர்கள் யாரும் பதவி விலக தேவையில்லை என்றும் மற்றொரு உறுப்பினரான அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊழல் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர லோக்பால் மசோதாவை பார்லி.,யில் தாக்கல் செய்ய வேண்டும் என்று, காந்தியவாதி அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்ததையடுத்து, மத்திய அரசு வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அம்மசோதாவை கொண்டுவர ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், இம்‌மசோதவை தயாரிக்கும் வரைவுக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான சாந்தி பூஷன் மற்றும் அவரது மகன் பிரசாந்த் பூஷன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சாந்திபூஷன், முலாயம்சிங் மற்றும் அமர்சிங்குடன் நடந்த உரையாடல் கொண்ட சி.டி., தான் இந்த பிரச்னைக்கு காரணம். இந்த சி.டி.,யில் நீதிபதியை ரூ. 4 கோடிக்கு விலைக்கு வாங்குவது தொடர்பான விஷயம் உரையாடலாக பதிவாகியிருக்கிறது. இது சில பத்திரிகை அலுவலகங்களுக்கு மர்ம நபர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. இது தம் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, இது முற்றிலும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என ஆணித்தரமாக தெரிவித்திருந்தார் பூஷன். இது தொடர்பான உண்மையை விசாரிக்கும் படி போலீசில புகார் மனுவும் அளித்தார்.

இந்த புகாரை விசாரித்த போலீஸ் இந்த சி.டி., ஜோடிக்கப்பட்டவை அல்ல என்றும் இந்த உ‌ரையாடலில் இருப்பது சாந்திபூஷனின் குரல்தான் என்றும் கூறியுள்ளது. ஆனாலும் இது தொடர்பான முடிவுக்கு வருவதற்கு இன்னும் கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளது. இந்த சி.டி., ஐதராபாத் தடயவியல் ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்பட்டு ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பூஷனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றன. இவர் இந்த பொறுப்பில் நீடிக்க கூடாது என்றும் எதிர்ப்பு குரல் உயர்ந்திருக்கிறது.

  சாந்தி பூஷன் மற்றும் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவான குரல் வரைவு குழு உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால், இவ்விவகாரம் தொடர்பாக தாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகப்போவதாக தெரிவித்துள்ளார். லோக்பால் மசோதா வரைவுக்குழு மக்கள் பிரிவு உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதற்காக குழு உறுப்பினர்கள் யாரும் பதவி விலகத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  பூஷனுக்கு ஆதரவாக கிரண் பேடியும் குரல் கொடுத்துள்ளார்.இதனால் எல்லாம் பூஷன்கள் மீது படிந்த கறை நீங்கிவிடுமா?
 அதை எல்லாம் விட இவர்கள் கொண்டுவரும் சட்டம் மூலம் லஞ்ச-ஊழல் வகையறாக்கள் ஒழிந்து விடுமா என்பதும்,சட்டம் ஒழுங்காக நடைமுறை படுத்தப்படுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக் குறி?தான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?