வேட்பாளர் -மறுபக்கம்,
"சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் 679 வேட்பாளர்களில், 125 பேர் வழக்குகளில் சிக்கியுள்ளனர்" 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன' என்று தனியார் சேவை அமைப்பான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 2,773 பேர் போட்டியிடுகின்றனர்.தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூலம் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் 679 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத் தகவல்கள், ஆமதாபாத்தை தலைமை இடமாகக் கொண்டும், டில்லியிலிருந்தும் செயல்பட்டு வரும் ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்டுள்ளது.இந்த தகவல்கள், இந்த அமைப்பின் சார்பு நிறுவனமான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. 679 வேட்பாளர்களில் 125 பேர் வழக்குகளில் சிக்கியுள்ளதும், இவர்களில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள விவரங்களும் தெரியவந்துள்ளன. வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரராகவும் உள்ளனர். தி.மு.க., சார்பில் போட்டியிடும் 119 பேரில், 111 பேர் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களில் 144 பேர் தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துள்ள பிரமாணப் பத்திரத்தில் 43 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.பா.ம.க., சார்பில் 14 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.தே.மு.தி.க.,வின் ஏழு பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 63 பேரில், 54 பேரின் பிரமாணப் பத்திரத்தில் ஆறு பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.பா.ஜ.,சார்பில் போட்டியிடும்169 வேட்பாளர்களில், 19 பேர் மீது கிரிமினல்வழக்குகள்நிலுவையில் உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில், மூன்று வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.
கிரிமினல் வழக்குகள் உள்ள இவங்க ரொம்ப நல்லவங்கனு தேர்ந்தெடுத்தவர்களை என்ன சொல்ல.
எது ,எதுக்கோ கட்டுப்பாடுகள் விதிக்கும் தேர்தல் ஆணையம் வேட்பாளர் மீது அரசியல் சம்பந்தமான வழக்குகள் தவிர வேறு வழக்குகள் இருக்கக்கூடாது என கட்டுப்பாடு விதித்தால் என்ன.?
இவர்கள் தேர்வாகி கலந்து கொள்ளும் சட்டமன்றம் கலவரமன்றம் ஆகாமல் பின் என்ன செய்யும்.இவர்களிடம் மக்கள் தங்கள் கோரிக்கைகளை பயமின்றிக்கூற இயலுமா?சட்டப்பேரவையில் வேட்டி உறுவல் நடக்காமல் இருக்க அனைவரும் வேண்டிக்கொள்வோம்,,வேறென்ன செய்ய முடியும்,,,,
-------------------------------------------------------------------------------------------------------------