மீண்டும் பூகம்பம்


======================================================================================




உலகில் இந்த மாதத்தில் ஆறுபெரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று இலங்கை  பல்கலைக்கழக நிபுணர் கள் குழு ஒன்று கூறியுள்ளது.
உலகளாவிய ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய 0.5 ரிக்டர் அளவுகோ லுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும் அது இலங்கையிலும் பாதிப்புக்க ளை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதற்குள் இன்று[07-04-11] ல் ஜப்பான் வடகிழக்கில் 7 புள்ளியளவில் பூகம்பம்  எற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.ஆழிப்பேரலை [சுனாமி] எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாம்.ஆனால் ஏற்கனவே அங்கு சென்ற சுனாமிக்கு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால் ஒரளவு சேதம் குறையும் என ஜப்பான் அரசு கூறியுள்ளது.
  •  பட்ட காலிலேயே படும் .பாவம் ஜப்பானியமக்கள்.
=======================================================================================

எஸ்.ஏ.சி. பிரச்சாரத்தை துவக்கியதுக்கு பதிலடி போல் விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஜெயசீலன் ஏராளமான ரசிகர்களுடன் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம்தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
ஜெயலலிதாவை சந்தித்த போது, அவர்கள் வெற்றி பெற்றால் மதுபான ஆலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என எஸ்.ஏ.சி. கேட்டுக் கொண்டாராம். இந்த டீலை முன் வைத்தே அவர் பிரச்சாரத்தில் இறங்கியிருக்காரே தவிர அவருக்கு மக்கள் மீதோ, விஜய் ரசிகர்கள் மீதோ துளியும் அக்கறை இல்லை என்றும் குற்றம்சாற்றியிருக்கிறார் ஜெயசீலன்.
படங்களும் முன்போல் ஒடவில்லை .வயதும் ஏறிக்கொண்டிருக்கிறது.பிழைக்க அரசியல்,அல்லது  டாஸ்மாக்.சும்மா சொல்லக்கூடாது.சந்திரசேகர் பிழைக்கத்தெரிந்தவர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 
கலைஞர் சொன்னதும்...   சோனியாகாந்தி சொல்லாததும்
தீவுகளாக சிதறிக்கிடக்கும் திமுக கூட்டணிக்கட்சிகள் சென்னை தீவுத்திட லில் ஒரே மேடையில் திரண்டு பிரச்சாரம் செய்துள்ளன. இருந்தாலும் காங்கிரசில் உள்ள கோஷ்டிகள் ஒன்றாகச் சேரவில்லை. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் சோனியா காந்தி பங்கேற்ற அந்தக்கூட்டத் தை புறக்கணித்துள்ளனர். சென்னை விமான நிலைய வரவேற்புக்குச் சென்ற ஈவிகேஎஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலுவை மிரட் டித்தான் பாஸ் பெற்று விமான நிலையத்திற் குள் சென்றுள்ளார். தேர்தல் முடிந்தவுடன் சோனியா காந்தியே நேரில் வந்து காங்கிரசின் அனைத்து கோஷ்டிகளும் பங்கேற்கும் வகையில் ஒரு கூட்டத்தை நடத்தலாம். பாதுகாப்புக்கு ராணுவத்திடம் முன்கூட்டியே சொல்லிவைப்பது நல்லது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் பங்கேற்ற இந்த கூட்டத்திற்கு ஒத்திகையாக முதல் நாள் குலாம்நபி ஆசாத்துடன் இணைந்து கரு ணாநிதி ஒரு கூட்டத்தில் பேசினார். இந்தக் கூட்டத்தில் குலாம்நபி ஆசாத் பேசும்போது, மக்களின் வாழ்வுநிலை உயரவும், வறுமை நீங்கி மகிழ்ச்சிப் பொங்கவும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால், யாருடைய மக்களின் வாழ்வு நிலை உயர, யாருடைய வறுமை நீங்கிட என்று குலாம்நபி கூறவில்லை.

இந்தக்கூட்டத்திற்கு குலாம்நபி தாமத மாகத்தான் வந்தாராம். இதைக் குறிப்பிட்ட கலைஞர் “தில்லியிலிருந்து நான் கேட்பது எல்லாம் தாமதமாகத்தான் வரும். அதுபோலத் தான் மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் தாமத மாக வந்திருக்கிறார், தில்லியிலிருந்து தாமத மாக வரும் என்றாலும், தட்டாமல் வரும், தாரா ளமாக வரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில் கலை ஞர் தொலைக்காட்சி உரிமையாளர்களை சேர்த்துவிடவேண்டாம் என்று கோரிக்கை விடுத்து, அது தாமதமாக, அதே நேரத்தில் தட்டாமல் நிறைவேற்றப்பட்டதை கலைஞர் குறிப்பிட்டிருக்கலாம். அதே நேரத்தில் இதே குலாம்நபி ஆசாத் சரியான நேரத்திற்கு வந்து 63 தொகுதிகளை தட்டிச்சென்றதை, தாராள மாகப் பறித்துக்கொண்டதை மனதில் நினைத் துப் பார்க்காமலா இருந்திருப்பார்.

காங்கிரசுடன் திமுகவின் உறவு தொடர் வதற்கான காரணம் என்ன என்பதையும் கலைஞர் விரிவாக விளக்கியுள்ளார். “மத்திய அரசுடன் உறவு கொண்டு காரியம் சாதிக்க இந்த இணைப்பு தேவை. காங்கிரஸ் கட்சியு டன் இணைவது பெருமை என்பதற்காக அல்ல. எங்களது உரிமையை மீண்டும் வலி யுறுத்த இந்தக் கூட்டணி தேவை. இது தேர்த லுக்கான கூட்டணி, பதவிக்கான கூட்டணி அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து திமுக கேட்ட தொலைத்தொடர்புத்துறை உள் ளிட்ட வலுவான இலாகாக்கள் கிடைக்காத நிலையில் அமைச்சரவை பதவியேற்பு விழா வைக் கூட புறக்கணித்தது ஏன்? உரிமை யை நிலைநாட்டத்தானா? அப்படி நிலை நாட்டப்பட்ட உரிமை இப்போது திஹார் சிறையில் அல்லவா அடைபட்டுக்கிடக் கிறது. காங்கிரஸ் கேட்ட அளவுக்கு தொகுதி களை ஒதுக்க முடியாது என்று கூறி மத்திய அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தது காரியம் சாதிக்கத்தானா? என்ற கேள்வியெல் லாம் எளிய தமிழர்கள் மனதில் எழாமல் போகாது.

“விலைவாசி உயர்வுக்கு காரணம் மத்திய அரசுதான் என்று நான் சொல்ல வேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் நினைக்கிறார்கள். ஆனால், அதை நான் செய்யவில்லை. “ என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

என்ன ஒரு விசுவாசம்! விலைவாசி உயர் வுக்கு காரணமான முன்பேர வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டுமென்று திமுக பொதுக் குழுவிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. கலைஞரும் பலமுறை கடிதம் எழுதி யுள்ளார். ஆனால், மத்திய அரசு அதைச் செய்ய வில்லை. பெட்ரோல் விலையை கடந்த ஓராண்டில் மட்டும் ஏழு முறை உயர்த்தப்பட் டுள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்தால் அனைத்துப் பொருட்களின் விலையும் உய ரும் என்பது பொருளாதார அரிச்சுவடி. ஆனால், இதற்கும் கூட மத்திய அரசை குறைகூற மாட்டாராம்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று இவர் சொல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு நன்றாகவேத் தெரியும். இந்த இரண்டு கட்சிகளுக்கும் சேர்ந்து தமிழக மக்கள் தக்க பதில் சொல்வார்கள்.

சோனியா காந்தி பங்கேற்ற அடுத்தநாள் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, சோனியா காந்தி வாழ்த்துக் களோடு இந்த அணி வெற்றிபெறட்டும் என்று கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் கொல் லப்படுவதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட இவர் முழங்கி வந்தார். காங்கிரசை ஒழிக்கும் பணிக்கும் சேர்த்து சோனியாகாந்தியிடம் வாழ்த்துப் பெற்றாரா என்று தெரியவில்லை.

பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் பேசும்போது, கருணாநிதியின் சாதனை களைப் பட்டியலிட நேரமில்லை என்று கூறியுள்ளார். கள்ளச்சாராயம், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல் போன்ற வைதான் திமுக ஆட்சியின் சாதனைகள் என்று பேசியதும் இதே அய்யாதான். நேர மில்லாததால் அந்தச் சாதனைகளைப் பட்டி யலிடாமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது.

முதல்வர் கலைஞர் பேசும்போது, சோனியா காந்தி முன்னிலையில் கோரிக்கை பட்டியலை வாசித்துள்ளார். நதிநீர் பிரச்சனை கள் தீர்க்கப்படவேண்டும். தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கவேண்டும். கல்வித்துறை யை மீண்டும் மாநில அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும். சேதுகால்வாய் திட்டத் தை மீண்டும் துவங்கி நடத்திட வேண்டும். ஈழத்தமிழர்கள் உரிமை பெறவேண்டும் என்றெல்லாம் அடுக்கியிருக்கிறார்.

திமுக கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற் றுள்ளது. வலுவான இலாகாக்களையும் கையில் வைத்துள்ளது. ஆனால், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நட்புறவைப் பயன்படுத்தி திமுக எடுத்த நடவடிக்கை என்ன என்பதையும் சேர்த்துச் சொல்லியிருந் தால் நன்றாக இருந்திருக்கும்.

இலங்கையில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைமையி லான மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது இந்த கோரிக்கைகளை நிறை வேற்றி தமிழர்களுடைய நெஞ்சங்களிலே பால் வார்க்க வேண்டும் என்று கூறுகிறார். முள்வேலி முகாம்களில் மிஞ்சியிருக்கும் தமிழர்களுக்கும் பால்வார்க்க வேண்டும் என்கிறாரா?

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித் துறையை பறித்தது இதே காங்கிரஸ் கட்சி அரசு தானே. இன்றைக்கு உயர்கல்வித்துறை யை நுழைவுத்தேர்வு என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்வதும் இதே மத்திய அரசுதானே. முதல் வரின் சொந்த ஊரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழகத்திற்கு குறிப் பிட்ட இடம் வழங்கவேண்டும் என்று இவர் கேட்டதை நிராகரித்ததும் இதே மத்திய அரசு தானே. பிறகு எந்த நம்பிக்கையில் சோனியா அம்மையாரிடம் இவர் கோரிக்கை வைக் கிறார்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு காலத்தில் மத்திய அரசின் உதவியோடு இணைந்து நிகழ்த்திய சாதனைகளைக் கூறுவதற்கு வழியின்றி கூட்டணிக்கட்சிக் கூட்டத்தை கோரிக்கை மாநாடாக முடித்திருக்கிறார் கலைஞர். ஆனால் சோனியாகாந்தி, இவர் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து எந்த விதமான உறுதிமொழியையும் வழங்கவில் லை. மாறாக, அனைத்துத் தரப்பினரின் வளர்ச் சியை காங்கிரஸ் விரும்புகிறது. அதே போன்ற வளர்ச்சியை திமுகவும் விரும்புவதால்தான் இரண்டு கட்சிகளும் இணைந்துள்ளன என்று சோனியாகாந்தி கூறியுள்ளார். காங் கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் யார் வளர்ந்திருக்கிறார்கள். டாடாக்களும், அம்பானிகளும் தானே. அவர்களது வளர்ச்சி யைத்தான் திமுகவும் விரும்புகிறது. இந்த விஷயத்தில் இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துள்ளன. காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வளர்ச்சியை காங்கிரஸ் விரும்புகிறது. அலைவரிசைக் கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வளர்ச்சியை திமுக விரும்புகிறது. எனவே, இது பொருத்தமான கூட்டணிதான்.

தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன் றாக மாற்றுவது குறித்தோ, கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவது குறித்தோ சோனியா காந்தி எந்த உறுதி மொழியையும் வழங்கவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு எங்களால் எந்தளவிற்கு உதவ முடியுமோ அந்தளவிற்கு உதவியுள்ளோம் என்று கூறியுள்ளார் சோனி யாகாந்தி. இதை ராஜபக்சே அரசிற்கு எந்தள விற்கு உதவ முடியுமோ, அந்தளவிற்கு உதவி யுள்ளோம் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.
                                                                                                                                                               
ன்றி:மதுரை சொக்கன்[தீக்கதிரில்]

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?