சட்டம் தலை குனியட்டும்......

ருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு, ஜான் டேவிட் என்ற மாணவரால் கூறுபோடப்பட்ட நிகழ்வு  பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கியது. இப்போது ஜான் டேவிட்டுக்கு இரட்டை  ஆயுள் தண்டனையை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில்  எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்தார் நாவரசு. இவரது அப்பா பொன்னுசாமி அப்போது சென் னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவியில் இருந்தார். மருத்துவக் கல்லூரியில் சீனியர்  மாணவராக இருந்த ஜான் டேவிட் நிகழ்த்திய ராக்கிங் தொல்லையின் உச்சகட்டமாக  நாவரசு படுகொலை  செய்யப்பட்டார்.

படுகொலையான நாவரசுவின் உடலை அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் கத்தியால் கை, கால், தலை,  உடல் எனத் தனித்தனியாக வெட்டிய ஜான் டேவிட், தலையை மட்டும் ரெக்ஸின் பையால் சுருட்டி பல் கலைக்கழக வளாகக் குட்டையில் புதைத்தார். மற்ற பாகங்களை இரண்டு சூட்கேஸ்களில் எடுத்துக்கொண்டு  சென்னை புறநகர் ஏரியில் வீசினார். உடலை மட்டும் 21 ஜி பஸ்ஸில் போட்டுவிட்டுத் தப்பினார்.  போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்த ஜான் டேவிட் ராஜமன்னார்குடி போலீஸில் சரணடைந்தார்.

கடலூர் செசன்ஸ் நீதிமன்றம் 98 மார்ச் 10-ம் தேதி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை  வழங்கி தீர்ப்பளித்தார். தீர்ப்பை எதிர்த்து ஜான் டேவிட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலசுப்பிரமணியன், பக்தவத்சலு ஆகியோர், கடலூர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்புக்குப் பின்னர் ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் பாதிரியார் வேலை பார்க்கச் சென்றுவிட்டார்.  நாவரசுவின் தந்தை பொன்னுசாமி, தனது ஒரே மகள் சிந்தியாவோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட் டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  நீதிபதிகள் முகுந்தம் சர்மா, தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச், ‘‘தண்டனையை  உயர் நீதிமன்றம் ரத்து செய்தது அதிருப்தி அளிக்கிறது’’ என ஆதங்கப்பட்ட நீதிபதிகள், விசாரணை  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் எனத் தீர்ப்பளித்தனர். 

வழக்கில் அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கோமதி நாயகத்திடம் பேசினோம். “உயர் நீதிமன்றத்தில்  நடந்த விசாரணை எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஜான் டேவிட்தான் கொலையாளி என்பதற்கான  ஆதாரங்கள் போதுமான அளவு இருந்தன. இதையெல்லாம் உயர் நீதிமன்றம் கவனிக்கவில்லை. ஜான்  டேவிட்டின் வாக்குமூலம் அடிப்படையில்தான் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
15 சாட்சிகள் வரை  விசாரிக்கப்பட்டனர். வழக்கில் பலர் பிறழ்சாட்சிகளாக மாறினர். அப்போது மாவட்ட எஸ்.பி.யாக இருந்த  ரவிச் சந்திரன் தலைமையில் போலீஸார் கடுமையாக வேலை செய்தனர். வரும் காலங்களில் உயர் நீதிம ன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு ஆளாகும்போது, தீர்ப்பு கொடுத்த நீதிபதிகளுக்கும்  தண்டனை கொடுக்கும் வகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் தவறு செய்யும்  நீதிபதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்’’ என்றார்.

ஆஸ்திரேலியாவில் பைபிள் வாசித்துக் கொண்டிருக்கும் ஜான் டேவிட்டின் வருகையை கடலூர் மத்திய  சிறைச்சாலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

 தூக்குத்தண்டனை போன்றவை வேண்டாம் என்றாலும் இது பொன்ற கொடியவர்களைப் பார்க்கையில் அது தேவை என்று தொன்றுகிறது.அவ்ர்களை சட்டம் பெயரால் தப்பவைப்பvார்களுக்கும் தண்டனை கொடுத்தால் என்ன எனவும் தோன்றுகிறது. 
கொலையும் செய்துவிட்டு பைபிள் பின்னே ஒழிந்து கொண்டுள்ளார்.ஜான் டேவிட்.இவர் மற்றவர்கள் பாவத்தை எப்படி மன்றாடி போக்குவார்.இவr முதுகிலேயே பெரும் பாவ மூட்டை உள்ளதே,?
  23.04.2011 அன்று வெளியான செய்தி
சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், தலைமை போலீசார் ரவி, வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஜான்டேவிட்டின் சொந்த ஊரான கரூரை அடுத்த வெங்கமேட்டிற்கு வந்தனர். பின்னர் வெங்கமேட்டில் ஜான் டேவிட் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் ஜான்டேவிட்டின் தந்தை டாக்டர் டேவிட் மாரிமுத்து, தாய் டாக்டர் எஸ்தரின் லட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டப்பட்டிருந்தது.

அவர்களுடைய வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல்.அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் பி.எஸ்.என்.எல். ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் எட்டு போலீசார் அடங்கிய தனிப்படையினர் சென்னையில் ஜான் டேவிட் தாயார் தங்கியிருந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேடப்பட்டு வந்த கொலையாளி ஜான் டேவிட் சரணடைந்தார்.

கடலூர் மத்திய சிறையில் அவர் தாமாக முன்வந்து சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு கைதியின் டைரி  இனி ஜான் டேவிட் எழுதலாம்.சட்டம் கொஞ்சம் தலை நிமிர்ந்துள்ளது.
ஆனால் சட்டத்தை நாணல் போல் வளைத்தவர்களுக்கு  என்ன தண்டனை.வெறும் கண்டன்ம் மட்டும்தானா? 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?