வாக்கும் ,வக்கும்

 
அகதிகளான தமிழர்கள் 64நாடுகளில் சிதறடிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் 64 நாடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை செய்தி வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை ஒரு லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் அகதிகளாக பதிவு செய்துள்ளனர்

தமிழ்நாட்டில் உள்ள 112 முகாம்களில் 32 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்

இதுதவிர வெளியிடங்களில் 32 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேர்த்லுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.வெயிலின் கொடுமையை மறக்க வைக்கும் விதமாக தேர்தல் வெப்பம் உள்ளது ஒருவர் ஆப் அடித்து விட்டு ஆப்வைக்கப் போவதாகக் கூறுகிறார்.
அன்னை சோனியா தங்கள் அணிக்கு வாக்களித்தால்

இலங்கை கடற்படை சுடாது.என்று உத்திரவாதம் தந்துள்ளார். அவருடன் களம் காணும் கலைஞரோ கட்சத்தீவை மீட்க வேண்டும் என்கிறார்.இவ்வளவு நாட்கள் என்ன செய்தார்கள். தேர்தலில் வாக்குறிதி கொடுக்கவேண்டும் என்றே இது போன்ற திட்டங்களை செய்யாமல் அடை காத்து வந்தார்களா?இவர்கள் காணாது என்று ஜெயலலிதா அம்மையார் வேறு புதிதாக தமிழகத்திற்கும்,

 நாட்டுமக்களுக்கு மிகவும் நன்மைபயக்கும் ,வறுமையை ஒழிக்கும் புரட்சிகர செயலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் தா.கிருஷ்ணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிப்போம் என்று.இச்செயலால் ஆகப்போகும் நன் மை என்ன? அழகிரி வகையராக்களை மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தலாம்.வேறு என்ன நடக்கப் போகிறது. தா.கி,உயிருடன் எழுந்து வரப்போகிறாரா?
ஆக இத்தேர்தலில் செய்த சாதனையும் சொல்ல இயலவில்லை,செய்யப்போகும் சாதனைகளும் ஏதும் இல்லை .அதுதானே?
----------------------------------------------------------------------------------------------------------------------------
 ----------------------------------------------------------------------------------------------------------------------------
 

 சாய்பாபாவின் 40,000 கோடி ரூபாய் சொத்துக்கள்.



சாய்பாபா அறக்கட்டளை முறையாக நிர்வகிக்கப்படுகிறதா? என்பது பற்றி ஆய்வு செய்ய ஆந்திர முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி நேற்று 5 பேர் குழுவை புட்டபர்த்திக்கு அனுப்பி வைத்தார். ஆந்திர தலைமை செயலாளர் தலைமையில் இதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் ,மீண்டும்   
   நாம் மீண்டும் தேர்தல் களத்திற்கே வரவேண்டியுள்ளது.ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் நடிகர்விஜயகாந்த் பேசுவார்,பேச மாட்டார் என்று பரபரப்பான பேச்சுக்களுடே கோவையில் கூட்டணிக் கூட்டம் ஏற்பாடாயிற்று.ஆனால் அண்ணன் விஜயகாந்த் கோவை வராமல் அருண்பாண்டியனை ஆதரித்து பேசப் போய்விட்டார்,அதானே வடிவேல் கூறியபடி ஜெ,மேடையில் தனக்கு மரியாதை இல்லை என நினத்து விட்டாரா?அல்லது அங்கு கருப்பு எம்.ஜி.ஆர், வேடம் சரியாக எடுபடாது என நினைத்து விட்டாரா? என்ன கூட்டணியோ? என்ன கொள்கை[?] உடன்பாடோ? ஒன்னும் சரியாகத்தெரியவில்லை,,,,,,,,,,,.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?