நெற்றி தயாரா?
கடந்த ஒரு வார காலத்துக்குள் பதினைந்து இலட்சம் இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச இணையத்தளத்திற்கான அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
லீசா மூன் என்ற பெயரிலான இந்த சைபர் தாக்குதல் நடவடிக்கையின் ஆரம்ப கட்டம் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலில் கணணி வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக எச்சரிக்கை செய்தி விடப்பட்டு, அதன் பின் அதனுடன் தொடர்புபட்ட இணையத்தள வலையமைப்புகள் முடக்கப்பட்டுள்ளன.
ஆயினும் ஆராய்ச்சியாளர்கள் உடனடியாகச் செயற்பட்டு பாதிக்கப்பட்ட இணையத்தளங்களை மூடிவிட நடவடிக்கை எடுத்த காரணத்தால் பாதிப்பின் அளவு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும் மைக்ரோசொப்ட் எஸ்.கியூ.எல் 2003 மற்றும் 2005 பயன்படுத்தும், ஆப்பிள் ஐ டியூன்ஸ் உடன் தொடர்பையேற்படுத்திக் கொண்டுள்ள வலைத்தளங்களே இந்த சைபர் தாக்குதலில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் வெற்றியை கொண்டாடிய தமிழர்கள் மீது தாக்குதல் | ||
இலங்கை ,இந்தியாவிடம் தோற்றதை இலங்கைத்தமிழர்கள் அளவிடா மகிழ்வுடன் கொண்டாடியது அவர்களிடம் இலங்கை மீதான தேசப்பற்றை சந்தேகம் கொள்ளவைத்தது.ஆனால் அதன் பின்னான காரணங்கள் அவர்களின் உணர்வைப் புரிந்துகொள்ளச்செய்துள்ளது. | ||
இலங்கை தமிழர்களை பொறுத்த வரை இந்த போட்டியை தமிழர்கள், சிங்களர்கள் மோதுவதாகவே பார்த்தனர். இதே உணர்வு தான் சிங்கள மக்கள் மத்தியிலும் இருந்தது. இலங்கை ராணுவ தளபதி ஒருவர் இதுபற்றி கூறும் போது’ உலக கோப்பையை இலங்கை வென்று போரில் இறந்த சிங்கள வீரர்களுக்கு சமர்ப்பிப்போம்’ என்றார். இது இலங்கை தமிழர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. -- --------------------------------------------------------------------------------------------------------------- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதும்,வாக்குகளை விற்கக்கூடாது என்பதும் ஒரு ஓரமாக உட்கார்ந்து மாத்தி யோசித்துப்பார்த்தால் சரியல்ல எனத்தோனுகிறது. பணம் கொடுப்பவன் அவன் அப்பன் வீட்டுக்காசையோ,உழைத்து சம்பாதித்தக் காசையோக் கொடுக்கவில்லை.நம்மிடம் இருந்து நம்வரிப்பணத்தில் இருந்துஏமாற்றி,லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து ஊரையடித்து உலையில் போட்டக்காசைதான் தருகிறான்.அப்படியாவது அந்தப்பணம் மக்களிடம் வந்து சேர்கிறதே,. எத்தனை சுழிவேண்டும் என்ற கணக்கேத்தெரியாத என்ணிக்கையில் சுருட்டப்பட்டப் பணம் தானே வெளியெ எடுத்துக்கொடுக்கப்படுகிறது.அதை வாங்க வேண்டாம் என்றால் அந்தப் பணம் மீண்டும் அவன் கணக்கில்தானே ஏறுகிறது.அதனால் யாருக்கு என்ன லாபம். தணிப்பட்ட ஊழல் அரசியல்வாதிகள் ஒரு பக்கம்.இந்த[காங்கிரசு]அரசு 14000 கோடிகளை அம்பானி போன்ற முதலாளிகளுக்கு வரிச்சலுகை என்றப்பெயரில் ஆண்டுதோறும் பட்ஜெட் மூலம் தள்ளுபடி செய்கிறதே அதற்கு என்ன பெயர்? அதன் மூலம் இவர்கள் லாபம் அடைய வில்லையா? 1500 கோடியில் தான் வாழ[?] வீிடு கட்டு்ம் பணமுதலைகளுக்கு வரிச்சலுகை செய்யும் இந்த காங்கிரசு அரசுதான் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் கூட வீணாகும் அரிசி,கோதுமை களை கிடங்கில் இருந்து எடுத்து இலவசமாகக்கூட அல்ல மானிய விலையில் கூட வழங்க மறுத்தது. எவன் ஆட்சிக்கு வந்தாலும் நம்மை ஆளப்போவது பணத்திமிங்கலங்கள் ,அமெரிக்க ஆட்சியாளர்களின் ஆலோசனைகளும்தான்.பின்னே இவர்களை நாம் ஏன் மாற்றி ,மாற்றித்தேர்ந்தேடுக்க வேண்டும்.இந்திரன் மாறுவான் ஆனால் இந்திராணி மாற மாட்டாள் என்று ஒரு பேச்சு உண்டு, அதே கதை தானே இங்கும். கட்சிகள் மாறலாம்,ஆனால் ஆட்சிசெய்பவர்கள் வேறுதான். இப்போது கிடைக்கும் கலாக்காயை விட பிறகு கிடைக்கும் பலாப்பழம் பெரிதல்ல. பலா கிடைக்காமலேப் போகும் வாய்ப்புதான் அதிகம்.ஆகவே மக்களே இன்று இவர்கள் ஓட்டுப்போடக் கொடுக்கும் பணம் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டதே. வாங்குங்கள்.ஆனால் நீங்கள் விரும்பியவருக்கே வாக்களியுங்கள். [எவருக்குப் போட்டாலும் ஒரு எழவும் நடக்கப்போவதில்லை நமக்கு] மனசாட்சி அது,இது என்று ஒன்றும் பயப்படாதீர்கள்.நமது வாக்கை விற்கிறோம் .அவ்வளவுதான்.ஒரு பண்டமாற்று.தேர்தல் ஆணையம் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களை கண்டு கொள்ளப்போவதில்லை.இன்னும் 5ஆண்டுகள் கழித்துதான் அவர்கள் தூக்கம் கலையும் . அதுவரை இந்த ஆட்சியாளர்களுடன் குப்பைக்கொட்டப்போவது நாம் தான்.அ.தி.மு.க,தி.மு.க,தே.மு.தி.க,பா.ம.க,பா.ஜ.க, எல்லா சரக்கும் ஒன்றுதான்.கம்பெனி பெயர்கள்தான் வேறு,வேறு, எதற்கு வாக்களித்தாலும் நாமம் உங்களுக்கு மட்டுமே ,நெற்றி தயாரா,,,,,,,,? -ஜனதாகட்சி[?]த் தலைவர் சுப்பிரமணியசாமி கூறுகையில்,” விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை. குடிக்காவிட்டால் அவரால் பேச முடியாது. அவர் ஒரு ஜானிவாக்கர். பொது இடங்களில் அவர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார். அவருக்குப் பேசாமல் முரசு சின்னத்திற்குப் பதில் பாட்டில் சின்னத்தைக் கொடுத்திருக்கலாம். அதை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் சாமி. சுப்பிரமணியசாமி பேச்சுகூடத்தான் சரிவர புரிவதில்லை.ஆங்கிலேயர் பிள்ளைத்தமிழ் பேசுவது போல் உள்ளது.என்ன செய்ய..அனுசரித்துப் போகவேண்டியதுதான், |