பாரத ரத்னா மற்றொரு கலைமாமணி,?


கிரிக்கெட் கிறுக்கு இளசுகளும்,சிறுவர்களையும் தான் பாதித்துள்ளது என  நினத்தால்,பெருசுகளும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என காண்பித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அரசியல்வாதிகளாகவும்,சிலர் ஆட்சியாளர்களாக்வும் இருப்பது தான் வே தனை தரும் செய்திகளாகிவிட்டன.
அஜய் மாக்கான் 
விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கெட் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கிட சட்டத்தையே திருத்தக் கூறுவது மிகக் கொடுமையான விடயம்.
 பாரத் ரத்னா விருது மக்களுக்கான மகதான சேவை செய்தவர்களுக்கே இதுவரை வழங்கப்பட்டு ஒரு மரியாதைக்கான விருதாக மதிக்கப் பட்டு வருகிறது. அதை இப்போதைய காங்கிரசு அரசு தமிழகக் கலைமாமணி விருதுத்தரத்திற்கு கீழே இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
கிரிக்கெட் இவர்களைப்போன்றவர்களுக்குப்பிடித்த விளையாட்டு என்பதைத்தவிர என்ன தனிப்பெருமைகொண்டது? அதற்குத்தான் கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டு மூலமும்,விளம்பரம் மூலமும்,பொதாதிற்கு மேட்ச் பிக்சிங் மூலமும் செழிக்கச்,செழிக்க பணமழையில் நனைகிறார்களே.பாராட்டும்,நட்சத்திர அந்தஸ்தும் அவர்கள் தகுதிக்கு மேலேயே கிடைக்கிறதே.ஒவ்வொரு விளையாட்டிலும் வென்றதும் அவர்களுக்கு இந்த அரசு காரும்,பங்ளாவும்,சில கோடிகள் பரிசும் வழங்கு கிறதே அவை காணாதா//? வேறு எந்தவிளையாட்டை இப்படித்தூக்கி வைத்து ஆடுகிறார்களா.கிறிக்கேட் கிறுக்கு,அல்லது மேனியா ஒரு இந்திய வியாதியாகிவிட்டது. 
மற்றை நாடுகளும் கிரிக்கெட் வீரர்களை மதிக்கின்றனர்.ஆனால் இந்திய அளவிற்கு வெறித்தனத்துடன்  நடப்பதில்லை. சுனாமியில் பலரைக்காப்பாற்றியவற்கு வெரும் 50ஆயிரம்.பணம் வாங்கி விளையாடும் கிரிக்கெட்காரன் வென்றதும் கார்,வீடு,கோடிக்கணக்கிலான அரசுப்பணம் பரிசு.என்ன கொடுமை அய்யா இது. இந்திய எல்லையில் நாட்டைப்பாது காக்கும் போது எதிரியிடம்போராடி உயிரிழந்தவர்களுக்கு இப்படி அவர்களின் குடும்பத்திற்கு உதவியதாகக் கூற முடியும்மா? சரி உலகக்கோப்பையை நாம் வென்றதால் கிடைக்கப் போகும் நன்மைகளை,அது கூட வேண்டாம் ஒரு நன்மையை ஆட்சியாளர்களால் கூற இயலுமா? விலைவாசி குறையும்,நோயாளர் எண்ணிக்கை குறையும்,கல்வியறிவு உயரும்,வேலைவாய்ப்பு கிடைக்கும்,பாலாறு ஒடவேண்டாம் நம் பாலாற்றில் மாசு குறைந்து,தண்ணீர் ஒடுமா?                                                                                         பின் எதுக்கய்யா பாரத ரத்னா விருது கொடுத்தே ஆகனும்னு சட்டத்தையே திருத்தப்போகிறீகள்,ராகுல் ஆசையா?அல்லது ”எனக்கு எதுவும் தெரியாது” மன்மோகன் ஆசையா?        
                                                                                                         
வெற்றிக் களிப்பில் சச்சின் டெண்டுல்கர் இந்த உலகக் கோப்பையை வென்றதால் கொடுக்கப்படும் பாரதரத்னா விருதை அடுத்த உலகக் கோப்பையில் காலிறுதியிலேயே வெளியே வந்து விட்டால் புடுங்கிவிடுவீர்களா/ விளையாட்டுக்கென உயரிய விருது ஏற்கனவே உள்ளதே .அதைக் கொடுங்களேன்.
அல்லது சோனியா விருது,ராகூல் விருது அதுவும் இல்லாட்டா மன் விருது என்று  புதிய விருதை உண்டாக்கி கொடுங்களேன். ஹாக்கி போன்ற விளையாட்டெல்லாம் உங்கள் கண்களுக்குத்தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.
 பாவம் பாரத் ரத்னா அதைவிட்டு விடுங்களேன்.
இல்லை என்றால் எங்கள் ஊர் பாறைப்பட்டிக்கும் பக்கத்து ஊர் கீரிப்பட்டிக்கும் நடந்த ஊர்க்கோப்பை போட்டியில் கீரிப்பட்டியை [மேச் பிக்சிங் சரிவராததால்] தோற்கடித்து ஊர்க்கோப்பையை வென்ற பாறைப்பட்டி மங்குன்னிக்கு ஏதாவது ரத்னா,அல்லது பூஸன் விருதுக்கு ஏற்பாடு செய்யுங்க.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?