பிரபாகரன் எங்கே,,,,,,?.

லங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை!
விக்கிலீக்ஸ்  தகவல்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்தத்தகவல் மிக பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதே சமயம் அத்தகவல் உண்மையாகவேண்டும் என்றத் தவிப்பையும் உருவாக்கி விட்டுள்ளது.

கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.

அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல்
அப்படியென்றால் இன்னும் பிரபாகரன் ஒன்றும் பேசாமல்,ஒரு அறிவிப்பும் செய்யாமல் இருப்பது ஏன்? இது  அனைவர் மனதிலும் எழும் கேள்வி. புலி பதுங்குவதே பாய்வதற்குதானே,    பாய்ச்சல் எப்படி இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வி.இப்போது கிடைத்த தோல்வியின் மூலம் பிரபாகரன் பல புதிய பாடங்கள் கற்றிருப்பார் அல்லவா?     
ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 25, 2009 ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ராசபக்சே  ,சோனியா கூட்டணிக்கு இத்தகவல் நிச்சயம் ஒரு அதிர்ச்சியான தகவல்தான்.
சுபாஸ் சந்திரபோஸ் போன்ற கதைதான் இந்த பிரபாகரன் கதையும் என்று கதைத்தவர்கள் கதை கதை யாகிவிடட்டும்.
                                                                                                                                         நன்றி:நக்கீரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?