உல கம் பலவிதம்.....
இவரது நீண்ட நாள் வாழ்க்கையின் ரகசியம் என்ன என்று செய்தியாளர்கள் கிமுராவிடம் கேட்ட போது,’எனக்குத் தெரியாத இயற்கையான காரணங்கள் சில இருக்கலாம். என்றாலும், நான் அதிகமாக கவலைப்பட்டதில்லை. எப்போதும் நன்றி உடையவனாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
இயற்கையான உணவை உண்பதும், அதிகம் கவலைப்படாமல் இருப்பதும் தான் தனது நீண்ட ஆயுளுக்கான காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
வாழவே போராட்டம் நடத்தி இங்கு 60,70 வயதுவரை வாழ்கிறோமே அது சாதனையில்லையா?அதற்கு பேட்டி, போட்டோலாம் எடுக்க மாட்டீங்களா?
===========================================================================
· பியூட்டிபுல் டாட் காம் இணையத்தளம் நடத்திய வாக்கெடுப்பிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இலட்சத்து 27ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
ஜோர்டான் நாட்டு இளவரசி ரெய்னா 90வீத வாக்குகளைப்பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை விரைவில் திருமணம் செய்ய உள்ள பிரித்தானிய இளவரசி மிடில்லடொன் பிடித்துள்ளார். இவருக்கு 84வீத வாக்குகள் கிடைத்துள்ளன.
இளவரசர்கள் வரிசையில் சுவீடன் நாட்டை சேர்ந்த கார்ல் பிலிப் முதலிடத்தையும், இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் வில்லியம்ஸ் முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தையும் அவர்களது தந்தை சார்லஸ் 10-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
அதெல்லாம் சரி உலகநாடுகளில் பரிதாபர்கள் என்று வாக்கெடுப்பு நடத்துவதில்லையே ஏன்? எல்லா இடத்தையும் இந்தியர்களே பெற்று விடுவார்கள் என்ற பயம்தானே காரணம்.?
==============================================================================
சீனாவில் உள்ள லியோனிஸ் நகரில் திருடன் ஒருவன் அடுக்குமாடி கட்டிடத்தில் திருட சென்றான். 50 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் சுவர் ஜன்னல் பகுதியை பிடித்து மேலே ஏறினான். 5-வது மாடியில் ஏறிய போது அவனால் மேலேயும் செல்ல முடியவில்லை. கீழேயும் வர முடியாமல் ஜன்னல் தடுப்பை பிடித்தபடி தொங்கினான். ஏன் இப்படி திருடனும் உடலை வளைச்சி சம்பாதித்தானே என்று ஈசியா சொல்லக்கூடாதுங்க.பாருங்க திருடுரது எவ்ளோ கஷ்டம்னு.
உயிருக்கு பயந்த அவன் அலறினான். இதை பார்த்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்டான்.