இதுவும் ஒரு வாக்கெடுப்பு
மகிந்த ராஜ பக்சே - 28, ஒபாமா - 41 : அமெரிக்க ஜனாதிபதியையே பின் தள்ளிய இலங்கை ஜனாதிபதி |
டைம்ஸ் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த நூறு தலைவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க ஜனாதிபதியையே பின் தள்ளி முன்னிற்கிறார்.டைம்ஸ் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த நூறு தலைவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இடம்பெற்றுள்ளார். |
டைம்ஸ் பத்திரிகையின் பிரஸ்தாப பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் பின்தள்ளி 28ம் இடத்தைப் பிடித்திருக்கும் அதே வேளை, ஒபாமா 41ம் இடத்தில் இருக்கின்றார். 2011ம் வருடத்தின் உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவ ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடித்த உலகின் ஒரே தலைவர் என்று டைம்ஸ் சஞ்சிகையால் புகழாரம் சூட்டப்பட்டுள்ளார். 65 வயதான அவர், மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான ஒரு தலைவர் என்றும் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட மேற்கத்தேய எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதில் வெற்றி கண்ட ஒரு தலைவர் என்றும் அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே பிரஸ்தாப பட்டியலில் இடம்பெறுவதற்காக ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஊடாக கோடிக்கணக்கான ரூபாவைச் செலவிட்டே ஜனாதிபதி அப்பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பங்களிப்புடன் தனியானதொரு பிரிவே செயற்பட்டதாகவும், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் விலைக்கு வாங்கப்பட்டதாகவும் அத்தகவல் வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன. |