பாதிரியார் செய்த பாதகம்
அமெரிக்காவில் உள்ள கிறீஸ்தவ பாதிரியார் ஒருவர் செய்த குரான் எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் ஆப்கானில் வேகமாக பரவியுள்ள்து. ஏராளமான ஆப்கான் இளைஞர்கள் வீதியில் குதித்துள்ளனர். கந்தகார், பஞ்சாவி, ஸல்மா அயோபி ஆகிய மூன்று நகரங்களில் இந்த அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டம் தலைவிரிக்கோலமாக ஆடிக்கொண்டிருக்கிறது. இரண்டு போலீசார் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.குர்ரான் எரிப்பு என்பது முஸ்லீம்களுக்கு எதிரான செயல் இதற்கு மேலை நாடுகள் மன்னிப்பு கேட்க வேண்டுமென தலபான்களின் எஸ்.எம்.எஸ் பரவி வருகிறது.
அமெரிக்காவே செத்துத் தொலை ! அமெரிக்கக் கூலி கர்மீட் கார்சாயே செத்துத் தொலை !! என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கான் ஆர்பாட்டக்காரர். இதுவரை நடந்த ஆர்பாட்டங்களில் 10 பேர்கொல்லப்பட்டனர். 80 பேர் படுகாயமடைந்தனர். கடந்த வெள்ளி நடைபெற்ற தொழுகையுடன் ஆரம்பித்த ஆர்பாட்டங்கள் ஏழு ஐ.நா பணியாளரை கொன்று, சிலரை கழுத்தறுத்தும் கோபம் தணியாமல் பற்றிப் படர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த மார்ச் 21ம் திகதி குரானை எரித்த அமெரிக்க பாதிரியார் ரொனி யோனஸ் சென்ற ஆண்டும் இதுபோல 200 குரான்களை எரித்துள்ளார்.இவர் போன்ற மதவெறியர்களால் பொதுமக்கள்தான் மதமோதல்களில் பலியாகின்றனர்.
=========================================================================
oஒட்டு கேட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாக உள்ளது. ஆட்டோ மொபைல் துறை, ஐ.டி., துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. மதிய உணவு, திருமண உதவி திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இந்தியாவிற்கு எடுத்து காட்டாக உள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும், உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்காகவும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுப்போட வேண்டும். நலத்திட்டங்கள் எல்லாம் அனைத்து பிரிவு மக்களுக்கு சென்றடைய வேண்டும். தமிழகம் விரைவான வளர்ச்சி மற்றும் சமூக நீதி பெறுவதற்கு மத்திய மாநில அரசு இணைந்து செயல்படும். இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவி செய்யும். அங்கு சிங்களவர்களுக்கு சமமாக தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்ற இலங்கையின் உறுதிமொழியை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்துவோம்.மீனவர்கள் மீது இனிமேல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடக்காது என உறுதி கூறுகிறோம் என சோனியா கூறினார்.
அப்போ ஒட்டு போடாவிட்டால் இலங்கை கடற்படையினர் சுடுவார்களா?இப்போது இவ்வளவு உறுதி தரும் சோனியா சுடும் போதும்,கடத்தும் போது கலைஞர் குயர்,குயராகப் பேப்பர் வாங்கிக் கண்ணீ கடிதம் எழுதினாரே அப்போது ஏன் இலங்கைப்படையினரை நிறுத்தக்கூறவில்லை.இப்போ மட்டும் எப்படி உறுதி கொடுக்கிறார் அன்னை சோனியா? அப்போது இலங்கைப்படை இவர் கட்டுப்பாட்டில் இல்லையா?அல்லது தமிழக மீனவர்கள் அனைவரும் புலிகள் என்று எண்ணிக்கொண்டிருந்தாரா?
============================================================================
மதுரை டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). இவர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். | |||||||||||
மதுரையில் கலெக்டர்களாக இருந்த சந்திரமோகன், ஜவகர், சீத்தாராமன், மதிவாணன் ஆகியோருக்கும் இவர்தான் டிவைராக இருந்தார். சில நேரங்களில் மதுரைக்கு வரும் மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கார்களை இவர் ஓட்டி செல்வது வழக்கம். சமீபத்தில் தேர்தல் பார்வையாளர்களின் கார் டிரைவராக இவர் நியமிக்கப்பட்டு இருந்தார். தேர்தல் பார்வையாளர் ஒருவருக்கு இவர் ஒரு நாள் மட்டும் டிரைவராக இருந்து அவர் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் காரை ஓட்டி வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று வருவதாக புறப்பட்ட முருகேசன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இன்று காலை அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் முருகேசனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மதுரையை அடுத்த கள்ளந்திரி அருகே உள்ள 9-வது கால்வாயில் கழுத்து அறுக்கப்பட்டு உடல் முழுவதும் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு அப்பன்திருப்பதி பொலிசார் விரைந்து சென்று அந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தது காணாமல்போன கார் டிரைவர் முருகேசன் என்பது தெரியவந்தது. முருகேசனை யாரே சிலர் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பின்னர் பிணத்தை எரித்து இருப்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.ஆர்.ஓ. காலனியில் ஒரு மாணவன் கொலை செய்யப்பட்டான். இந்த கொலை வழக்கில் முருகேசனின் மகன் சுரேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் முருகேசன் எரித்து கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அதற்குள்ளாக தமிழகம் முழுக்க சிலரால் தி.முக,வுக்கு எதிராக இச்செய்தியை இட்டுக்கட்டி பரப்பப்பட்டு மிக வேகமாக பரவிவிட்டது.கொலை செய்தவர் இவர்தான் என்று பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல் அ.தி.மு.க,த் தொண்டர் ஒருவர் என்னிடம் கூறியபோது நானும் நம்பிவிடும் நிலைக்கு சென்று விட்டேன். செய்தியின் முழுமைதெரிந்தபின் முதலில் செய்தவேலை அந்த வதந்தியாளரை வழியனுப்பிவைத்ததுதான். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
|
-----------------------------------------------------------------------------------------------------------------------