உலகம் பலவிதம்



Burqa ban enforced in France - World News Headlines in Tamil

பிரான்சில் பெண்கள் பர்தா அணிந்தால் நடவடிக்கை



முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிய பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமலுக்கு வந்தது.
ஐரோப்பிய நாடான பிரான்சில் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடைவிதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து முன்பு அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் சார்கோஸி கூறியதாவது,
இது இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையல்ல. பர்தா என்பது மத அடையாளமன்று, மாறாக பெண் அடிமைத்தனத்தின் அடையாளம். அதை பிரெஞ்சு குடியரசில் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பர்தாவுக்கு ஆதரவு தெரிவித்த கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி ஜாக்கியுஸ் மியார்ட் கூறுகையில், பர்தா என்பது பிரெஞ்சு கலாச்சாரத்திற்கு அதிர்ச்சியளிக்கும் ஒன்று. முகம் என்பது கண்ணியமானதாகும். அது உங்களின் பாஸ்போர்ட் என்றார்.
இன்று முதல் பெண்கள் பர்தாவுடன் பிடிபட்டால் முதல் எச்சரிக்கப்படுவர், பின்னர் ரூ. 9 ஆயிரத்து 520 அபராதம் விதிக்கப்படும். பெண்களை பர்தா அணியுமாறு கணவரோ அல்லது மதத் தலைவரோ வற்புறுத்தினால் அவர்களுக்கு ரூ. 19 லட்சத்து 4 ஆயிரத்து 159 அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
=================================================================================




துரோகத்தை சாய்க்கும் வகையில் மதிமுக தொண்டர்களின தீர்ப்பு இருக்கும்: நாஞ்சில் சம்பத்

அதிமுகவின் துரோகத்தை சாய்க்கும் வகையில் தேர்தலின்போது மதிமுக தொண்டர்கள் முடிவெடுப்பார்கள் என, மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
நாகப்பட்டிணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் இணைந்திருந்த எங்களை எந்த காரணமும் இல்லாமல் கழட்டிவிட்ட காரணத்தை இதுவரை ஜெயலலிதா கூறவில்லை. அதிமுகவின் துரோகத்தை மறக்காத மதிமுக தொண்டர்கள் தேர்தலில் தக்க முடிவு எடுப்பார்கள்.

வைகோவை அ.தி.மு.க ,கூட்டணியில் இருந்து அகற்ற விஜய் மல்லையா,அகர்வால்,பக்ஸே கூட்டணி ஜெயலலிதாவுக்கு பணமும்,இலங்கையில் விஜய் மல்லையா துவக்கும் தொழிலில் பங்கும் தரவுள்ளது என நாம் ஏற்கனவே குறிப்பு எழுதியுள்ளோம்.
எங்கள் மனச்சாட்சிப் படி நாங்கள் வாக்களிப்போம். ஆனால் எங்களை இழந்தவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்படுகிற வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும்.

எதை வேண்டுமானாலும் நாங்கள் மன்னிப்போம். துரோகத்தை மன்னிக்க மாட்டோம். துரோகத்தை சாய்ப்பதற்கு எங்கள் தோழர்கள் முடிவு எடுப்பார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டரீதியாக போராடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஆலையின் அதிபர் வைகோவை சந்தித்து சரிகட்டிவிடலாம் என்று எண்ணினார். ஆனால் அவரை சந்திக்க வைகோ முன்வரவில்லை. வைகோவின் குரலும், வைகோவின் சகாக்களின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதால், அந்த ஆலை அதிபரின் பணம் சிலருக்கு போய்யுள்ளது என்றார்.
==========================================================================================================

காந்தகார் பயணம் தொடர்கிறது,,,,
1999 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் திகதி இந்திய விமானத்தை துப்பாக்கி சகிதமாக காந்தகார் நகருக்கு சில தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். 160 பயணிகள் விடுவிக்கப்பட, இந்திய சிறையில் இருக்கும் முக்கிய பயங்கரவாதிகள் 3 பேரை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பன கடத்தல் காரர்களின் கோரிக்கை. இதன்படி மவுலானா மசூத் உள்பட 3 முக்கிய பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சதி திட்டத்தில் பண உதவி மற்றும் முக்கிய ஆலோசகராக இருந்து இந்த கடத்தலை வெற்றிகரமாக நடத்திய பாகிஸ்தானின் அப்துல் ரகூப் என்பவர் சிலி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் போலி விசா மூலம் சிலிக்கு வந்த போது இன்டர்பொல் போலிசின் உதவியால் கைது    செய்யப்பட்டு ள்ளான்.
இந்த தகவல் இந்தியாவுக்கு அனுப்பியதையடுத்து இந்திய சி.பி.ஐ. அதிகாரிகள் சிலி விரைந்துள்ளனர்.
ரகூப் என்ற ரகூப் ஆல்வி பாகிஸ்தானை சேர்ந்தவன், இவன் விமான கடத்தல் சதிச்செயலுக்கு பிளான் போட்டு கொடுத்தவன். இத்துடன் இதற்கென ஹவாலா பணம் மூலம் 70 ஆயிரம் பயங்கரவாதிகளுக்கு கொடுத்து உதவியிருக்கிறான். இவனை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு கடந்த 2000 ல் ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது.
இவனது கை ரேகையோ, புகைப்படமோ இன்னும் கிடைக்கப் பெறவில்லை. இந்த தருணத்தில் சிலியில் சிக்கியவன் ரகூப்தானா என்று கண்டறிய பெரும் சிரமப்பட வேண்டியது இருக்கும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

                                                87 வயது  முதல்வரா
தமிழகத்தில் பிரசாரத்தை முடித்த கையோடு கேரளாவுக்கு சென்ற ராகுல் அம்மாநில முதல்வருக்கு வயதாகி விட்டது, இவரது ஆட்சி நமக்கு தேவையா என்று பிரசாரம் செய்தார்.
மாநில நிர்வாகத்தை இளைஞர்களாகிய எங்களிடம் ஒப்படையுங்கள் என்றும் ஆதரவு கேட்டார்.
தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி மாநிலத்திற்கு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளது. நல்ல திட்டங்கள் தொடர தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்ற மையமாக ராகுலின் பிரசாரம் இருந்தது.
பல முறை தமிழகத்திற்கு வந்த ராகுல் மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திப்பதில்லை என தி.மு.க தொண்டர்கள் குறைப்பட்டு கொண்டனர்.
தமிழக பிரசாரத்தை முடித்து விட்டு கேரள மாநிலம் சென்றார் ராகுல். அங்கு கொச்சியில் அவர் பேசியதாவது: இந்த மாநிலத்தில் ஆளும் முதல்வருக்கு வயது 87 ஆகி விட்டது. இன்னும் அவர் முதல்வராக வந்தால் ஆட்சி காலம் முடியும் போது அவருக்கு வயது 93 வயது ஆகிவிடும்.
இப்படி ஒரு வயது முதிர்ந்தவர் நமக்கு முதல்வராக வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனுபவம் கலந்த தலைவர்களுடன், இளைஞர்கள் துணையுடன் நல்ல நிர்வாகத்தை தருவோம். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவோம் என்றார்.
தமிழகத்தில் ஓட்டுக்கேட்டாரே கலைஞர்,பிரனாப் முகர்ஜி,மன்மோகன் சிங்,ராகிலின் அம்மா சோனியா இவர்களெல்லாம் இளைஞர்களா? என கேரள இடதுசாரி கட்சியினர் தற்போது கேள்விக்கணைகளை ராகுலை நோக்கி திருப்பி விட்டிருக்கின்றனர்.
சரி இவை எல்லாம் இருக்கட்டும் தேர்தலில் வாக்களிக்கப் போகலையா?
பிரதமர் மன்மோகன் சிங்,முன்னாள்தமிழகத்தேர்தல் ஆணயர் போன்று பரிசுத்தமாகப் பேசிக்கொண்டு வாக்களிக்காமல் போய்விடாதீர்கள்.
எல்லாரும் .......தான் ,என்ற சலிப்பிலும் வாக்களிக்காமல் விட்டு விடாதீர்கள் .இருக்கிற கொடுமையில் கொஞ்சம் நல்லக் கொடுமையை பார்த்து வாக்கை அழுத்தி[பொத்தானைத்தான்]விட்டு வந்து கடமையை செய்துவிடுங்கள். வேறு வழி.....



 
 
  


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?