இரண்டாம் முறையாக.........

வெற்றிக் களிப்பில் சச்சின் டெண்டுல்கர்
வெற்றிக் களிப்பில் சச்சின் டெண்டுல்கர்
பத்தாவது கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி தனதாக்கிக் கொண்டுள்ளது.
275 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி நான்கு விக்கட்டுக்கள் இழப்புக்கு 48.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது.
1983 ஆம் ஆண்டின் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையை வென்று தனது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
உலகக் கிண்ணத்தில் மஹேலவின் மூன்றாவது சதம்
 மஹேல
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்கள் இழப்புக்கு 274 ஓட்டங்களைக் குவித்தது.
88 பந்துகளில் 13 பவுண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்களைக் குவித்த மஹேல ஜயவர்தனவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி கடைசி பத்து ஓவர்களில் 91 ஓட்டங்களைக் குவித்தே 274 ஓட்டங்களைக் குவித்தது.
இந்திய அணியின் ஆரம்ப விக்கட்டுக்களான சச்சின் டெண்டுல்கரும் விரேந்தர் ஷெவாக்கும் லசீத் மாலிங்கவினால் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டனர்.
ஆனால் கௌத்தம் காம்பீரும் மஹேந்திரசிங் தோனியும் நிதானமாக ஆடி அணிக்கு வலு சேர்த்தனர்.
காம்பீர் 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் அணித் தலைவர் தோனி ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களை குவித்து இந்திய அணியை வெற்றியின் பாதையில் இட்டுச்சென்றார்.
போட்டியில் வெற்றிபெற 11 பந்துகளில் நான்கு ஓட்டங்கள் பெறவேண்டியிருந்த நிலையில், தோனி சிக்சர் ஒன்றை விளாசித்தள்ளியதன் மூலம் 10 பந்துகள் மீதமிருக்க இந்திய அணி் வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றெடுத்தது.
சச்சின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இணைப்பாட்டத்தில் 109 ஓட்டங்களைக் குவித்த தோனி மற்றும் காம்பீர்
 109 ஓட்டங்களைக் குவித்த தோனி மற்றும் காம்பீர்
மும்பை மண்ணில் சர்வதேச போட்டியொன்றில் தனது 100வது சதத்தை சச்சின் டெண்டுல்கர் குவிப்பார் என்ற அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சச்சின் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றதன் மூலம் சுக்குநூறாகிப் போனது.
எனினும் காம்பீரும் தோனியும் இந்திய அணியின் உலகக்கோப்பைக் கனவை நனவாக்கும் விதத்தில் மிகத் திறமையாக விளையாடினர்.
விடைபெற்றார் முரளிதரன்
 முரளிதரன்
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகக்கோப்பை இறுதிப்போட்டியுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் முரளிதரன் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தனது பங்களிப்பை உறுதிசெய்தார்.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப ஆட்டக்காரர்களான திலகரட்ண டில்ஷான் மற்றும் உப்புல் தரங்க ஜோடி எதிர்பார்க்கவாறு சோபிக்கவில்லை.
தரங்க 2 ஓட்டங்களுடனும் டில்ஷான் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் குமார் சங்கக்கார 48 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?