பேனா நண்பர்?

பேனாவை திருடினாரா? செக் நாட்டின் அதிபர் !

சிலி நாட்டுக்கு விஜயம் செய்த செக் நாட்டின் அதிபர் வக்லேவ் கிளவுஸ் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். அத்தருணம் அவர் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பேனாவை கச்சிதமாக திருடி பாக்கட்டில் மறைத்துக் கொண்டார். இந்தக் காட்சியை அங்கிருந்த படப்பிடிப்பாளர் பதிவு செய்துள்ளார். செக் நாட்டின் தொலைக்காட்சி அதிபரின் திருட்டுப் புத்தியை பகிரங்கமாக வெளியிட்ட பின்னர் இது யூரூப்பில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சிலி நாட்டின் பிரதமர் செபஸ்டியான் பினிரா அதிபரை மக்களுக்கு அறிமுகம் செய்தபோதே இந்தத்திருட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்த ஒளிப்படத்தை இதுவரை அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துவிட்டார்கள். தற்போது 63 வயதை அடைந்துவிட்ட செக் அதிபர் கிளவுஸ் 1993 – 97 ல் அந்த நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். இதற்கு பதிலுரைத்த அதிபர் தான் தங்கத்தை திருடவில்லை என்று கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 100ரூ மதிப்புள்ள பேனாவைஆசையுடன் எடுத்து கோட்டினுள் மறைத்தது எவ்வளவு பெரிய மானக்கேடான செய்தியாகி யூடியுப் வரை கேவலபடுத்தி விட்டது,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?