பக்‌ஷே நீக்கம்,,,,,.?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டைம்ஸ் இதழின் உலகில் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருந்து, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளார்.

இன்று[22] காலை வரையில் முதல் நூறு பேர்களின் பட்டியில் நான்காம் இடத்தில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, காலை டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரிய குழுவால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்கெடுப்பின் அடிப்படையில் அவர் இன்று காலை வரையில் நான்காம் இடத்தில் இருந்தார்.

எனினும் இந்த வாக்களிப்புகளில் இலங்கைஅரசு மோசடிகள் செய்து இடம்பெற்றதாகவும்,  ஜனாதிபதியின் ஊடக செயலகத்தில் டைம் இதழில் பல்வேறு வழிகளில் வாக்களிக்க    குழு ஒன்று அமைக்கப்பட்டு, மோசடி வாக்குகள் போடப்பட்டதாகவும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம், டைம்ஸ் இதழின் ஆசிரியர் குழுவினால், அவரது பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. இதற்காக பலகோடிகள் பணம் செலவளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
4வது இடம் பெற அவர் போட்ட  கள்ள வாக்குகள் அதிகமாக இருந்தாலும்
 டைம் இதழ் கணிப்பில்  இடம்பெற்றவர்களில் அதிகமான   எதிர்ப்பு வாக்குகள் பெற்று {51000} சாதனை படைத்தவரும் பக்‌ஷேதான்.அந்த எதிர்ப்பு வாக்குகள்தான் டைம் இதழார்களின் புதிய முடிவுக்குக் காரணம் என்று தெரிகிறது.         

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?