ஈழ முரலீக்ஸ்

அணுக்கசிவு

மிகவும் மோசமான நிலையில்

ஜப்பான்

ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணுக் கதிர்வீச்சின் அளவை உலகில் உச்சபட்ச அளவான “7 ” என ஜப்பான் அறிவித்துள்ளது.

இது செர்னோபிளில் நடந்த அணு உலை விபத்தோடு சமமான அளவாகும். இந்நிலையில் புகுஷிமா அணு உலைகளில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் 11ம் திகதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குப் பின் உலைகளில் தொடர்ந்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படத் துவங்கியது.

கடந்த ஒரு மாத காலமாக அந்த உலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ஜப்பான் அரசு போராடியும் பயன் எதுவும் கிட்டவில்லை. உலைகளில் ஏற்பட்டுள்ள வெப்பத்தைக் குறைக்கும் முயற்சி கூட இன்னும் வெற்றி பெறவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் உலைகளில் வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஹைட்ரஜன் வாயு உருவாகி அதனால் வெடிவிபத்து நிகழ்ந்தது. இச்சம்பவம் மேலும் நடக்காமல் இருக்க உலைகளுக்குள் நைட்ரஜன் வாயு செலுத்தும் முயற்சி இடையில் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து உலைகளில் உள்ள கதிர்வீச்சு கலந்த நீரை கடலில் கொட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் அந்தப் பணியும் நிறுத்தப்பட்டது. இதனால் இன்னும் 10 ஆண்டுகளில் உலைகளை ஒன்றன் பின் ஒன்றாக மூடி விடும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் நான்கு அணு உலைகளிலும் ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி பிரதிநிதிகள் நடத்திய ஆய்வில் எதிர்பார்த்ததை விட மிக மோசமான அளவில் கதிர்வீச்சு வெளியாகி வருவது கண்டறியப்பட்டது.

அளவு அதிகரிப்பு: ஏற்கனவே கதிர்வீச்சு விபத்து பற்றிய அளவு 4ல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில் தற்போது நிலவரம் மிகவும் மோசமான கதியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
===========================================================================
வாக்கு விகிதம்
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் சராசரியாக 77.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் 68.7 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. மற்ற மாவட்டங்களில் பதிவாகி உள்ள ஓட்டு சதவீதம் வருமாறு:-
திருவள்ளூர் - 76.8 சதவீதம், காஞ்சீபுரம் - 75.1 சதவீதம், வேலூர் - 70.31 சதவீதம், கிருஷ்ணகிரி - 75 சதவீதம், தர்மபுரி - 81 சதவீதம், திருவண்ணாமலை- 78 சதவீதம், விழுப்புரம் - 80 சதவீதம், சேலம் - 82 சதவீதம், நாமக்கல் - 78.3 சதவீதம், ஈரோடு - 80.5 சதவீதம், திருப்பூர் - 77.6 சதவீதம், நீலகிரி - 71.6 சதவீதம், கோவை - 74 சதவீதம், திண்டுக்கல் - 81 சதவீதம், கரூர் - 86 சதவீதம், திருச்சி - 78.5 சதவீதம், பெரம்பலூர் - 82 சதவீதம், அரியலூர் - 84.2 சதவீதம், கடலூர் - 80.6 சதவீதம், நாகை - 81 சதவீதம், திருவாரூர் - 78.4 சதவீதம், தஞ்சை - 79.7 சதவீதம், புதுக்கோட்டை - 78.9 சதவீதம், சிவகங்கை - 75.6 சதவீதம், மதுரை - 77 சதவீதம், தேனி - 79.3 சதவீதம், விருதுநகர் - 80.96 சதவீதம், ராமநாதபுரம் - 71.9 சதவீதம், தூத்துக்குடி - 75.2 சதவீதம், நெல்லை - 73 சதவீதம், கன்னியாகுமரி - 68.1 சதவீதம்.
தமிழ்நாட்டில் மிக குறைவாக கன்னியாகுமரியில் 68.1 சதவீதமும், சென்னையில் 68.7 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது. மிக அதிக அளவில் கரூர் மாவட்டத்தில் 86 சதவீதமும், அரியலூர் மாவட்டத்தில் 84.2 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
முதல்-அமைச்சர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 68 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் 80.9 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. விஜயகாந்தின் ரிஷிவந்தியம் தொகுதியில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஓட்டுப்பதிவின் போது தமிழ்நாடு முழுவதும் 65 இடங்களில் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. பிறகு அவை சரி செய்யப்பட்டன. நெய்வேலியில் 2 ஓட்டுச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
==========================================================================

ஆ ராசாவை பல்வா, அம்பானிக்கு சாதகமாக செயல்பட வைத்தவர் சரத்பவார்தான்சி.பி.அய்யில்போட்டுக்கொடுத்தார் - நீரா ராடியா


 
  
Nira Radia




  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள ஷாகித் பல்வாவின் டிபி ரியலிட்டி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், ஆ ராசாவை பல்வா மற்றும் அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட வைத்தவர் பவார்தான் என்றும் நீரா ராடியா இப்போது 
 புயலைக் கிளப்பியுள்ளார் கார்ப்பரேட் தரகர் நீராராடியாவுக்கு தொடர்பு இருப்பது வெளியாகி, பெரும் சர்ச்சை எழுந்தது. இதில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ ராசா கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சரத்பவார்




ஷாகித் பல்வாவுக்கு டி.பி. ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மத்திய அமைச்சர் சரத் பவாருக்கும், ஷாகித் பல்வாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக ஏற்கனவே புகார்கள் வந்தன. ஆனால் இதை சரத்பவார் மறுத்து வந்தார்.

ஆனால் சரத்பவாருக்கும், ஷாகித் பல்வாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது உண்மைதான் என நீராராடியா சி.பி.ஐ.விடம் தெரிவித்துள்ளார்.

ஷாகித் பல்வா நடத்திய டி.பி.ரியாலிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சரத்பவாரும், அவரது குடும்ப உறுப்பினர்களும்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர் என்றும் நீராராடியா கூறியுள்ளார். மேலும், ஆ.ராசாவை ஷாகித் பல்வாக்கும்.அனில் அம்பானிக்கும்  சார்பாக செயல்படவைத்தவர் சரத் பவார்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
=============================================================================
 

ஈழமுரலீக்ஸ்  


கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் வெளியாகிய ஈழமுரசு வாரஏட்டில் வந்த தமிழக முதல்வரின் அரசியல் நாடகம் தொடர்பான கடிதங்களுக்கு இந்தியா மற்றும் சிறீலங்காவில் இருந்து வெளிவரும் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதுடன், அவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துமுள்ளன. கொழும்பில் இருந்து வெளிவரும் பல ஊடகங்கள் ஈழமுரசில் வெளியாகிய தகவல்களை வெளியிட்டதுடன், சிறீலங்கா அரசுக்கு சார்பான த ஐலன்ட் ஊடகமும் அதனை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்துள்ளது.
இந்தியாவில் பல ஊடகங்கள் அதனை வெளியிட்டுள்ளதுடன், இந்தோ ஏசியன் நியூஸ் சேவீஸ் என்ற ஆங்கில ஊடகம் அதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் காலம்சென்ற திரு பா நடேசன் அவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரின் புதல்வியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் தொடர்பான இரகசிய ஆவணங்களை ஈழமுரசு “ஈழமுரசுலீக்ஸ்” என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?