கிருஷ்ணமூர்த்”தீ”யே கடைசியாகட்டும்,,,,,,,



 

          அன்று முத்துக்குமார்                             இன்று                                    கிருஷ்ணமூர்த்தீ
சங்கரன்கோவில் அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது அவரது மனதை பாதித்தது. சமீபத்தில் இண்டர்நெட்டில் இலங்கை தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட படங்கள் வெளியானது.

இதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்தார். பின்னர் விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊரான சீகம்பட்டிக்கு வந்துவிட்டார். அங்கு வந்தும் தனது நண்பர்களிடம் இலங்கை தமிழர்களை அநியாயமாக கொன்றுவிட்டார்களே என்று கூறி அழுது புலம்பினார். நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடல் கருகிய அவரை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்ததற்கான காரணம் குறித்து அவரிடம் வாக்குமூலம் பெற போலீசார் முயன்றனர். ஆனால் அவரால் பேச முடியவில்லை. நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் நேற்று இரவே கிருஷ்ணமூர்த்தி உடலை தகனம் செய்தனர்.

இன்று காலை கிருஷ்ண மூர்த்தி வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதனை அவரது பெற்றோர் பார்த்தபோது அந்த கடிதத்தை கிருஷ்ணமூர்த்தியே எழுதியிருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில் இலங்கை தமிழர்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இது குறித்து கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவித்தனர்.

உடனே அவர் இன்று காலை சீகம்பட்டியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு விரைந்தார். அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:

நெல்லை மாவட்டம் குருவிகுளம் அடுத்த சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் கிருஷ்ணமூர்த்தி இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்துள்ளது.

ஆனால் போலீசார் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்ததை மறைத்து, அவரால் எதுவும் பேச முடியவில்லை என்று வழக்குபதிவு செய்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து உயிருக்கு போராடிய போது அவரது தாய் சுப்புலட்சுமி காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் சுப்புலட்சுமிக்கும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவருக்கு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துள்ளது மிகப்பெரிய தியாகம். இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா.சபை தலைவர் பான்கீமூன் நேரில் சென்று விசாரிக்க இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.

மேலும் ஐ.நா. சபையே இலங்கை படுகொலை குறித்து விசாரணை நடத்தி இது போர்குற்றம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர் நடக்கும்போது சர்வதேச விதிமுறைகளை மீறி ஆஸ்பத்திரிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இறுதிப்போரில் விடுதலைபுலிகளின் முக்கிய தலைவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஐ.நா.சபையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவாக நடந்து கொண்டுள்ளது. சர்வதேச குற்றவாளியான ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு இந்தியா உதவுவது தலைகுனிவாக உள்ளது. இலங்கையுடனான உறவை இந்தியா முறித்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் தமிழர் படுகொலையில் இலங்கைக்கு ஆதரவு என்ற நிலையாவது கைவிட வேண்டும். இல்லையென்றால் தமிழர் படுகொலைக்கு இந்தியா ஆதரவு என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

சமீபத்தில் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோற்றது. இதனால் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கப்பற்படையினர் பிடித்து கொன்று கடலில் வீசியுள்ளனர்.
என்று வைகோ கூறினார்.
தோ கிருஷ்ண மூர்த்தி எழுதிய கடிதம்.

காவல்துறையினர் ஏன் முறைப்படி நியாய உணர்வுடன் பணிபுரிய மாட்டேன் என்கிறார்கள்.
அவ்ர்கள் தமிழக அரசிடம் தானே பணிபரிகிறார்கள்.தமிழக மக்கள் வரிப்பணத்தில்தானே சம்பளம் வாங்கி பிழைக்கிறார்கள். பின் ஏன் ராஜபக்சேக்கு அடியாட்கள் போல்,அடிவருடித்தனம் பன்னுகிறார்கள்.உண்மைநிலையை பதிந்து நடவடிக்கை எடுப்பதை யார் தடுக்கிறார்கள்.
கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் மனவேதனையும்,நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கமும்தான் முத்துக்குமாரைப்போல் முடிவைத்தேடிக் கொள்ள செய்துள்ளது.
ஆனால் இது சரியானவழியில்லை. அவர்களின் மனதைப்போல் உடலும் வெந்ததைத்தவிர வேறு பயன் இல்லை என்பதை உணர வேண்டும்.
அரசும்,தலைவர்களும் அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டு,விட்டு அல்லது கவிதை எழுதிவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள்.


ஆனால் உங்கள் குடும்பம்?,,,அதன் நிலை?,,,எதிகாலம்..?
    சற்று உயிரைப்போக்கும் முன் யோசியுங்கள். உங்கள் உணர்வுகளைக்காட்ட வேறு வழிகளை தேர்ந்தெடுங்கள். தமிழர்கள் பலருக்கும் உங்களைப்போன்ற ஈழத்தமிழர் நிலைப்பற்றி வேதனை உள்ளது.ஆனால் நம்மால்செய்ய முடிந்த செயல்?
இந்திய அரசுநம்மை கண்டுகொள்ளாத சோனியா கையில் ,தமிழக அரசோ கையால் ஆகாது
சோகக் கவிதை எழுதி ,கடிதம் எழுதி தனது பங்கை முடித்துக் கொள்ளும் அரசு,,,,
      உங்கள் உயிரை இழந்ததால் சில நாட்கள் செய்தியுடன் உங்கள் தியாகம் மறக்கப்பட்டு விடும். உங்கள் குடும்பம் மட்டுமே உங்கள் இழப்பில் வாடும்.
இனி முத்துக்குமார்களும்,கிருஷ்ணமூர்த்திகளும் இது போன்று முடிவை தேர்ந்தெடுக்க வேண்டாம், உங்கள் உணர்வுகளை வேறுவகைகளில் காட்டி ஈனர்களை கருவறுங்கள்.
        கிருஷ்ணமூர்த்தியே  கடைசியாக இருக்கட்டும்.
      .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?