"அதிர்ச்சி"கள்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிர்ச்சி-2
---------
காலை வாரும் பங்கு சந்தை.
எப்போதும்
“அந்நிய முதலீடு தேவை,மக்கள் எல்லோரும் பங்கு சந்தையில் பணத்தை
போடுங்கள்.அரசு ஊழியர் ஓய்வூதியத்தை பங்கு சந்தையில் போடுவோம் “ என்று
வாய்க்கு வாய் சொல்லும் காங்கிரசு அரசு கொஞ்சம் இந்த செய்தியை
பார்க்கலாமே?
இது போன்று நடப்பது மன்மோகன் சிங் கூட்டத்துக்கு தெரியாதது
அல்ல.
ஆனாலும்
அவர்கள் பங்கு சந்தையை ஊக்குவிப்பதும்,அந்நிய முதலீட்டை
கோருவதும்,பொதுத்துறை நிறுவனத்தை பங்குகள் விற்பதின் மூலம் தனியாருக்கு
தாரை வார்ப்பதும் , விலைவாசிகளை உயர்த்தி விடும்-பணவீக்கத்தை உருவாக்கும்
என்று தெரிந்தே அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்தி விடுவதும் இந்தியாவை ஒரு
வழியாகக வெண்டும் என்ற எண்ணம்தான்.
அதுதானே அவ்ர்களின் முதலாளி
அமெரிக்காவின் கட்டளையாகத்தான் செய்கிறார்கள்.
பங்கு விற்பனை மூலம், பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் திரட்டிய,
87 நிறுவனங்கள் திடீரென்று மாயமாகி விட்டன.
மாயமான, 87 நிறுவனங்கள் மீது, காவல்துறையினர் வழக்கு
பதிவு செய்துள்ளனர். இந்நிறுவனங்களின் இயக்குனர் களை கண்டுபிடிக்க, தீவிர
முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாயமான நிறுவனங்கள், நிறுவனர்கள்,
இயக்குனர்கள் மீது, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, முதலீடு செய்ய
தூண்டியதாக, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பங்கு வெளியீட்டில் இறங்கி, முதலீடுகளை திரட்டும் ஒரு நிறுவனம், அதன் ஆண்டு நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட இதர ஆவணங்களை அளிக்காமல் இருந்தாலோ, அலுவலகம் அல்லது அதன் இயக்குனர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, அந்த நிறுவனம், "மாயமான நிறுவனங்கள்' என்ற பிரிவில் சேர்க்கப்படும்.
இது போன்ற நிறுவனங்கள் பெருகுவதை தடுக்க, பங்கு வெளியீட்டில் இறங்கும் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையை ஆராய்ந்து, அவை எவ்வாறு நிதியை செலவிடுகின்றன என்பதை கண்காணிக்குமாறு, கம்பெனிகள் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் பணத்துடன் மாயமான, 87 நிறுவனங்களில், 26
நிறுவனங்கள், குஜராத்தை சேர்ந்தவை. ஆந்திராவில், 13 நிறுவனங்களும்,
தமிழகத்தில், 10 நிறுவனங்களும் காணாமல் போய் விட்டன.இந்த வரிசையில்,
மகாராஷ்டிரா (9), டில்லி (5), மேற்கு வங்கம் (5), மத்திய பிரதேசம் (4),
பீகார் (4), சண்டிகர் (2) ஆகியவை உள்ளன.
--------------------------------------------------------------------------------------------------------------