வாக்கு தவறி வி[போ]ட்டார்,


கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்றத் தேர்தலில்சுயேச்சையாகப் போட்டியிடுபவர் கணேசன். இவர் இன்றுகாலை ஓட்டுப் போடச் சென்றபோது ஏற்கனவே நீங்கள் ஓட்டுப் போட்டுவிட்டீர்கள் என தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட கணேசன் அதிர்ச்சி அடைந்தார். 'நானே வேட்பாளர், எனது ஓட்டையே கள்ள ஓட்டுப் போட்டு விட்டார்களா?' என்று கோபமடைந்த அவர் அங்கு விசாரித்தபோது அது அ.தி.மு.க,வினரின் கைங்கரியம் என அறிந்தார்.
அதனால் கோபம் தலைக்கேறிய அவர் அ.தி.மு.கவினர்தான் இதற்குக் காரணம் என்று கோபமாக கூறியபடி திடீரென அங்கிருந்து வாக்குச் சீட்டுக்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். இதைப் பார்த்த போலீசார் அவரை விரட்டிப் பிடித்து வாக்குச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்தனர்
பின் கைது செய்தனர்.கைதான கணேசன்  தனது வெற்றிவாய்ப்பு பறி போனதாக பரிதாபமாகக் கூறியபடியே போலீசாருடன் சென்றார். .


_______________________________________________________________________________
ஓரியன் வாரிசுகள்.
இது ஒரியன் நட்சத்திரக்கூட்டத்துக்கு அருகே எடுக்கப்பட்டப் படம்.மிகவும் இளைய நட்சத்திரங்கள் இக்கூட்டத்தில் இருப்பதாகவும்.அவை வளர்ச்சியடைவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
____________________________________________________________________________________


வாக்குப்பதிவு அழகு.
   சென்னையில் மதியம் 3 மணி முதல் வாக்குச்சாவடி கைப்பற்றல்-மோதல் காரணங்களால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி முன் நம் ஜனநாயகத்தை பற்றிக் கவலையுடன் ,,,,,,,,,,,

                             
                        தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று (17.10.2011) நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. தேர்தல் முடிந்த பின்னர் மாலையில் தமிழக தேர்தல் ஆணையர் சோ. அய்யர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
                                         

”தமிழக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாக நடந்த தேர்தலில் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக நடந்து முடிந்தது. சென்னை மாநகராட்சிக்கு 48 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. 

சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளுக்கு அதிகபட்சமாக 68 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியது. கிராமப்பகுதிகளில் 78 சதவீதம், ஊரக பகுதிகளில் 78 சதவீதம்,பேரூராட்சிகளில் 72 சதவீதம், நகராட்சிகளில் 72 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 
சென்னையில் 200 வார்டுகளுக்காக 4,876 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். பதற்றமான பகுதிகளில் மத்திய போலீஸ் படையை நிறுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், 90 சதவீத பூத்களில் வெப்கேமரா இல்லை. வாக்குப்பதிவை வீடியோவிலும் பதிவு செய்யவில்லை என்று திமுக, காங்கிரஸ், பாமக மேயர் வேட்பாளர்கள் புகார் கூறினர். பாமக மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி கூறுகையில், ‘‘வைக்கப்பட்டிருந்த 10 சதவீத வீடியோ மற்றும் வெப் கேமராக்களும் சரியாக செயல்படவில்லை’’ என்றார். மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் 10 மணி வரை 23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. எந்த இடத்திலும் இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. கோயம்பேடு, நெசப்பாக்கம் உள்ளிட்ட 12 இடங்களில் நேரடியாக ஆய்வு செய்தேன். வாக்களிக்க நின்ற வாக்காளர்களிடம் பேசினேன்.
கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலைபோல இல்லாமல் இப்போது சுதந்திரமாக வாக்களிக்க முடிந்ததாக அவர்கள் கூறினர். எல்லா பூத்களிலும் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. இதுதொடர்பாகஎதிர் கட்சிகள் கூறும் புகாரில் உண்மை இல்லை. அவர்கள் தோல்வி பயத்தில் அப்படி சொல்கின்றனர். ஒரு சில இடங்களில் மட்டும்தான் வெப் கேமரா மற்றும் வீடியோ கேமராவில் பிரச்னை ஏற்பட்டது. அதுவும் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது’’
என்றார்.
   மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்றால் அது விளம்பரத்துக்காக என்றும் எதிர் கட்சிகள் தோல்விபயத்தில் அவ்வாறு கூறுகின்றன என்றும் தேர்தல் ஆணையர் கூறுவது ஏதோ அ.தி.மு.க அமைச்சர்கிண்டலாகக் கூறுவதுபோல் உள்ளது.
   மோதல்கள் மண்டை உடைப்புகள்,வாக்கு சாவடிக்கு பூட்டு.வேட்பாலருக்கு வெட்டு என்று நடந்துள்ளதை பல்வேறு தொலைக்காட்சிகளில் காட்டுகின்றனர்.ஆனால் தேர்தல் ஆனையரோ சும்மா விளம்பரத்துக்கு என்பதும்,தோல்வி பயம் என்பதும் பொறுப்பான நடுநிலையுடன் இருக்க வேண்டிய அலுவலரின் பேச்சாகத்தெரியவில்லை.
    தி.மு.க. வழக்குரைஞர் ஜோதி பிற்பகல் 2.30 இல் இருந்து மாலை 4 மணிவரை தேர்தல் ஆணையருக்கும்,சென்னை மாநகராட்சி தேர்தல் அலுவலருக்கும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தொலைபேசி,கைபேசி மூலம் அறிவிக்க தொடர்பு கொண்டால் இணைப்பே கொடுக்கப்படவில்லை .அதற்கான ஆதாரங்கள் வைத்திருக்கிறோம் .நீதி மன்றத்தில் அதை கொடுப்போம் என கூறியுள்ளார்.
இப்படி தொடர்பில்லாமல் இருந்தால் புகார்கள் எப்படி வரும்?
எது எப்படியோ மாநில தேர்தல் ஆணையர் தனக்கு கொடுக்கப்பட்டப் பணியை சிறப்பாக செய்துவிட்டார். இனி 19ம் தேதி அமர்க்களத்தினைப் பார்ப்போம்
_____________________________________________________________________________
93 ஆண்டு காத்திருப்பு,
    19ம் நூற்றாண்டில் தலைசிறந்த ஓவியர்ஜூல்ஸ் பிரிடான்.   [1827-1906]இவர் வரையும் ஓவியங்கள் நேரடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களைப்போல் இருக்கும்.இவர் 93 ஆண்டுகளுக்கு முன்னர் வரைந்ததுதான் மேலேயுள்ள வலை பின்னும் பெண்ணின் ஓவியம்.உனி பில்லே டி-பெச்சூர்[மீனவன் மகள்].
பிரான்ஸ் டவாய் நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த ஓவியம்இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜெர்மனிய படை வீரர்களால்1918ல் கொள்லையடிக்கப்பட்டு விட்டது .பின் அமெரிக்காவில் ஒருவர் ஏலத்தில் எடுத்திருந்தார்.
பின் இண்டர்போல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நியூயார்க் அருங்காட்சியகம் வந்தது .அங்கிருந்து பிரான்ஸ் அரசின் முழு முயற்சியால் இப்போது பிரான்ஸ் வந்துள்ளது
_________________________________________________________________________________.                                  

                                          

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?