மே -2012 நிகழ்வுகள் சில ,

இப்போது மே மாதத்தின் நடுவில் இருக்கிறோம் .

சென்ற ஆண்டில் நடந்த சில நிகழ்வுகளை பார்ப்போம்.
மே -2012 நிகழ்வுகள் சில .
-------------------------------------
உலகம்-
------------
மே 14: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 இந்தியர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி.

மே 22: 2010 பிப்., 8ல், கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் ராணுவ தளபதியாக சரத் பொன்சேகா, பொது மன்னிப்பில்  விடுதலை செய்யப்பட்டார்.

மே 25: ஜப்பானைச் சேர்ந்த தமே வட்டானபி என்ற 73 வயது பெண், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கின்னஸ் சாதனை.

இந்தியா-
--------------
மே 3: 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை பட ஹீரோ அப்புகுட்டிக்கு வழங்கப்பட்டது.

மே 4: மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் விளம்பர தூதராக, "தேசிய விருது' பெற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன் நியமனம்.

மே 5: டில்லியில் நடந்த, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநாட்டில், ஜெ. உட்பட 10 முதல்வர்கள் எதிர்ப்பால் ஒருமித்த கருத்து இல்லை.

மே 8: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, கோல்கட்டா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், முதல்வர் மம்தாவை சந்தித்தார்.

மே 8: "ஹஜ்' பயணிகளுக்கான மானியங்களை குறைக்க, சுப்ரீம்கோர்ட் உத்தரவு.

மே 9: பதவி உயர்வு, போயிங் 787 டிரீம்லைனர் விமான பயிற்சி திட்டத்தை மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம். 58 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்தது.

மே 13: சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட "உலகின் சக்தி வாய்ந்த அன்னை யர்கள்' பட்டியலில் காங், தலைவர் சோனியா 6வது இடத்தை பெற்றார்.

மே 14: உலகின் மிகப்பெரிய இந்து கோவில், பீகாரில் அமைய உள்ளது. இது 50 ஏக்கர் பரப்பளவில், 300 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.

மே 21:  கங்கையை தூய்மைப்படுத்த 7 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
மே 22: பத்ரிநாத்திலிருந்து, ரிஷிகேஷ் செல்வதற்காக, 45 பக்தர்கள் பயணம் செய்த பஸ், கங்கை ஆற்றில் விபத்துக்குள்ளானதில், 22 பக்தர்கள் பலி.

மே 24 : ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது.

மே 31: நாட்டில் காடுகள் அதிகம் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் (11.24 சதவீதம்) பெற்றது.

தமிழ்நாடு.
-----------------------

மே 1: மதுரையில் நடந்த பாஜ., மாநாட்டுக்கு அத்வானி வருகை தர இருந்த நிலையில் சைக்கிள் டைம்பாம் வெடித்தது .

மே 10: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 180 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் தீயில் எரிந்தது. சீரமைக்கப்பட்டு மே 29ல் மீண்டும் உற்பத்தி.


மே 23: நேர்மையான, கண்டிப்பான அதிகாரி, என பெயர் எடுத்த மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றம். அன்சுல் மிஸ்ரா புதிய கலெக்டரானார்.

மே 30: பெட்ரோல் விலை உயர்வுக்கு (ரூ. 7.50) எதிர்ப்புத் தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் "பந்த்'.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?